இன்று(ஆக.6) காலை முதல் மாலை வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இந்தச் செய்தி. இதில், பல வகை செய்திகளையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் நீங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என நம்புகிறோம்.
ஆரம்பமே மகிழ்ச்சியான மேட்டர் தான்...
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காட்டுபள்ளி, எண்ணூர், கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் தாயார் ராஜலெட்சுமி(93) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் காலமானார். 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெனிபர் சந்திரன்.
உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சேருவோரின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய, சம்பந்தப்பட்ட துறைகள், தேர்வுகள் இயக்ககத்துக்கு விண்ணபித்து வந்தன. இந்நிலையில், தேர்வுத் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இம்மாதம் 5-ஆம் தேதி முதல் சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிய விரும்புபவர்கள் உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பித்து அறிக்கையை பெறலாம் என்று தேர்வுத் துறை இயக்குனர் அறிவித்துள்ளார் கூறியுள்ளார்.
காவல்துறையினர் 'மாமூல்' வசூலித்தால் லஞ்ச ஒழிப்பு சட்டம் பாயும் - டிஜிபி திரிபாதி எச்சரிக்கை.
தங்க நகை விற்பனையாளர்கள் ஹால்மார்க் பெறுவது கட்டாயம். மத்திய அரசின் ஹால்மார்க் முத்திரை பெற்றவர்கள் மட்டுமே இனி தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும் என மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம்
அஜித் நடிக்கும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட சென்னை ஐகோர்ட் இன்று தடை விதித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.27,784க்கும், கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.3,473க்கும் விற்பனை செய்யபப்டுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.45.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இன்று பிற்பகல் 3 மணியளவில் திட்டமிட்டபடி 5வது முறையாக உயரம் வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தான் புவியின் கடைசி சுற்றுவட்டப் பாதை. இதற்கு அடுத்ததாக நிலவின் சுற்றுவட்டப்பாதக்குள் சந்திரயான் செல்லும். செப்.7ல் நிலவில் இறங்கும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், 'பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணித்திருக்கிறேன்' என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்த சரவணன், அந்த காரணத்திற்காகவே, வீட்டில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டிருக்கிறார். பிக்பாஸ் சீசன்களில் இதற்கு முன், இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. இந்த சம்பவம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இப்போது தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவினும், சாண்டியும் கண்ணீர் விட்டு அழும் வீடியோ புரமோவும் வெளியிடப்பட்டுள்ளது.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் பிரீமியம் ஷோ சிங்கப்பூரில் இன்று காலை வெளியானது. படம் அதிரி புதிரி ஹிட் என்ற ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் விமர்சனத்தை படிக்க இங்கே க்ளிக் செய்யவும். Nerkonda paarvai review : அஜித் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய மைல்கல்! நேர்கொண்ட பார்வை விமர்சனம்.