திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயிலில் தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இதுவரை 1.47 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 67 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யும் பணி இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடையும்.
டெல்டா மாவட்டங்களில் தான் கரும்பு 5.52 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு விவசாயிகளுக்கு ரூ.1,321 கோடி வழங்கப்பட உள்ளது. 1,208 கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே வேளாண் துறை உடன் இணைந்து தேவைக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பார்கள் எனவும் தெரிவித்தார்.