/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kamal-Haasan-5.jpg)
மத்திய இணையமைச்சர் எல் முருகன்
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
அடுத்த 3 மணிநேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
பொன்முடி வழக்கு; வேறு நீதிபதிக்கு மாற்ற லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை
பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை வைத்துள்ளது
நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை
கட்டாய கருக்கலைப்பு புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இன்று மாலை அல்லது 4 நாட்கள் கழித்து பரிசோதனை முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது. பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் காவல்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
விதிகளை மீறி பேனர்கள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
விதிகளை மீறி பேனர்களை வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்தது. அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக வைக்கப்படுகின்றன என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. இதனையடுத்து சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தது, விழுப்புரத்தில் சிறுவன் உயிரிழந்தது தொடர்பான வழக்குகளின் விசாரணை அக்டோபர் 5ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது
பெட்ரோல்- டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் – ரூ. 102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் – ரூ. 94.24க்கும் விற்பனை.
பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் காலில், துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்த போது, போலீசாரிடம் இருந்து தப்பியோட முயற்சி. 3 முறை காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக போலீசார் தகவல். காலில் காயம் அடைந்த வெங்கடேஷை, பல்லடம் அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது”- ராஜிவ் குமார், தலைமை தேர்தல் ஆணையர்.
காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார் பல்லடம் அரசு மருத்துவமனையில் முக்கிய குற்றவாளி வெங்கடேஷை நேரில் பார்வையிட்ட மாவட்ட எஸ்பி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு உத்தரவிட்ட, மாவட்ட எஸ்.பி. சாமிநாதன்.
குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் முதல்வர்
நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்.
மேலும் ஒரு ஆண் சிறுத்தை பிடிபட்டது
திருப்பதி, திருமலையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது இதுவரை 4 சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில் மேலும் ஒரு ஆண் சிறுத்தை பிடிபட்டது.
அறிக்கை மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கொலை மிரட்டல் விடுத்த சாமியார் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் திமுக தொண்டர்களுக்கு அறிக்கை மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்.
காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் செய்தியாளர் சந்திப்பு
பல்லடம் படுகொலை - திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் செய்தியாளர் சந்திப்பு "மதுபோதையில் ஏற்பட்ட தகராறால் கொலை நடந்துள்ளது" "சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 1.5கி.மீ. தொலைவில் குற்றவாளிகள் வசித்து வந்துள்ளனர்" பல்லடம் அருகே 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து திருப்பூர் எஸ்.பி. விளக்கம்.
சனாதனம் சர்ச்சை தொடர்பான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன்
சனாதன ஒழிப்பு மாநாட்டில் தான் பேசிய கருத்துகளை பாஜகவினர் திரித்து அவதூறு பரப்பி வருகின்றனர் எனக்கு ஆதரவு தெரிவித்த தோழமை கட்சித் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் நன்றி 'பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம் - அமைச்சர் உதயநிதி
பூமி, நிலவை படம் எடுத்த ஆதித்யா எல்.1
பூமி, நிலவை புகைப்படம் எடுத்த ஆதித்யா எல்.1 விண்கலம். சூரியனை ஆய்வு செய்ய புறப்பட்ட ஆதித்யா விண்கலம், பூமி மற்றும் நிலவை புகைப்படம் எடுத்துள்ளது - இஸ்ரோ
சி.பி.எம் ரயில் மறியல் போராட்டம்
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்
ஆளுநருடன் பா.ஜ.க நிர்வாகிகள் சந்திப்பு
சனாதன பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய கோரி ஆளுநர் ஆர்.என் ரவி உடன் பா.ஜ.க நிர்வாகிகள் சந்திப்பு. பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன், செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் சந்திப்பு. உதயநிதி, சேகர் பாபு மீது நடவடிக்க எடுக்க கோரி கடிதம்.
உதயநிதியின் முழு பேச்சை அறியாமல் பிரதமர் பேசுவதா?
உதயநிதி சொல்லாததை சொன்னதாக பரப்பியது பற்றி பிரதமர் மோடி அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தே பேசுகிறாரா?
பிற்படுத்தப்பட்டோர், பட்டியலித்தவர், பழங்குடியினர், பெண்களுக்கு எதிரான சனாதன கோட்பாடு குறித்து தான் உதயநிதி பேசினார். எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை- முதல்வர் ஸ்டாலின்
நைஜீரிய போதை கும்பல் கைது
சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகளுக்கு போதை மருந்து சப்ளை செய்த நைஜீரிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. Molly,hug drug,adam, moon rocks போன்ற கோடுவேட்களை பயன்படுத்தி ஒரு மாத்திரை பத்தாயிரம் ரூபாய்வரை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணிநேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
லியோ அப்டேட்
ஒரு வாரத்துக்குள் லியோ படத்தின் அப்டேட் வந்துவிடும் இசையமைப்பாளர் அனிரூத் பேட்டி
கொடநாடு வழக்கு - காவல்துறைக்கு அவகாசம்
கொடநாடு வழக்கில் மேல் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம் செப்டம்பர் 21 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து நெகிழச்சி
குழந்தைங்க சாப்பிட்டு ரொம்ப நல்லா இருக்குனு சொல்லும்போது, கேட்க சந்தோசமா இருக்கு" - முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில், பணிபுரியும் சமையலர் ரபேக்கா நெகிழ்ச்சி
விதிகளை மீறி விதவிதமாக பேனர்கள் வைத்த பாஜகவினர்
புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு, விதிகளை மீறி விதவிதமாக பேனர்கள் வைத்த பாஜகவினர்! சென்னை உயர்நீதிமன்றத்தின் பேனர் தடை சட்டத்தை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
பிரதமரின் பேச்சு அரசியலமைப்புக்கு எதிரானது: உதயநிதிக்கு சித்த ராமையா ஆதரவு
சனாதனம் தொடர்பான உதயநிதியின் பேச்சுக்கு பதிலடி கொடுங்கள் என பிரதமர் பேசியது அரசியலமைப்புக்கு எதிரானது.
யாராக இருந்தாலும் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதிக்கு ஆதரவு அளித்து கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா கூறியுள்ளார்.
ஒரு குடும்பத்தின் கையில் திமுக: எல். முருகன் குற்றச்சாட்டு
அண்ணா உருவாக்கிய கட்சியை ஒரு குடும்பம் அபகரித்துள்ளது. திமுகவில் இதுவரை பெண், பட்டியலினத்தவர்கள் உயர் பதவிகள் வகிக்கவில்லை?
மம்தா, கெஜ்ரிவால் ஆகியோரும் உதயநிதியின் பேச்சை கண்டித்துள்ளனர்.
ஏட்டளவிலும், சொல் அளவிலும் சனாதன ஒழிப்பு, சமூக நீதி என திமுக வாய்ச்சவடால் விடுகிறது என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சனாதனம் பற்றி கருத்து கூற உதயநிதிக்கு உரிமை உண்டு - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: “சனாதனம் பற்றி கருத்து சொல்ல உதயநிதிக்கு உரிமை உண்டு. அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், வன்முறை அச்சுறுத்தல்கள், மிரட்டல் உத்திகள், குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக அவரது வார்த்தைகளைத் திரித்துக் கூருவதற்குப் பதிலாக, சனாதனம் குறித்த விதாவத்தில் ஈடுபடுவது முக்கியம்” என்று கூறியுள்ளார்.
தொழிலதிபரிடம் ரூ. 16 கோடி மோசடி செய்த புகார்; தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் கைது
திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பார்க்கலாம் எனக் கூறி தொழிலதிபரிடம் ரூ. 16 கோடி மோசடி செய்த புகாரில், திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இத்திட்டத்தில் முதலீடு செய்யச் சொல்லி போலி ஆவணங்கள் மூலம் ரவீந்திரன் மோசடியில் ஈடுபட்டதாக, தொழிலதிபர் பாலாஜி புகாரளித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.