ஸ்ரீமதி உடல் ஒப்படைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடற்கூராய்வு ஆய்வில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் மீண்டும் ஆய்வு செய்யும் வகையில் புதைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக மாணவியின் உடல் தகனம் செய்யப்பட இருந்தது. 11 நாள்களுக்கு பின்னர் மாணவியின் உடலை பார்த்ததும் அவரது பெற்றோர் கதறிஅழுதனர்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 63ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும், டீசல் ரூ.94.24 எனவும் விற்பனையாகிவருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:23 (IST) 23 Jul 2022நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் தாயாரை இழந்து தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் எனறு குறிப்பிட்டுள்ளார்.
- 19:57 (IST) 23 Jul 2022மதுரையில் கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு
மதுரையில் கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. 4 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில் ₨165 கோடி பணம், ₨200 கோடி மதிப்பிலான ஆவணங்கள், 14 கிலோ தங்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 18:36 (IST) 23 Jul 2022எல்லாவற்றையும் விட நாடு பெரியது என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும் - ராம்நாத் கோவிந்த்
அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியாவை உயர்த்த பாடுபட வேண்டும் எல்லாவற்றையும் விட நாடு பெரியது என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.
- 17:28 (IST) 23 Jul 2022விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் : நடிகர் கமல்ஹாசன்
10 தேசிய விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பி பார்க்க செய்துள்ளது தமிழ் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்
- 17:05 (IST) 23 Jul 2022நடிகர் அர்ஜுனின் தாயார் மரணம்!
உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி(85) காலமானார்.
- 16:49 (IST) 23 Jul 2022குரூப் 4 தேர்வு ; தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் வெளியீடு!
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10-ம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு ஜூலை 24-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை(நாளை) தேர்வு நடைபெறுகிறது. இதற்காக டி.என்.பி.எஸ்.சி. விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் ஆண்கள் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 பேர், பெண்கள் 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வில், தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும்.
9 மணிக்கு OMR தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்படும்.
9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும், 12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது
தேர்வர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், செல்போன்கள் மற்றும் இதர பொருட்களைத் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை .
தேர்வர்கள் தங்களுடைய கையெழுத்தை OMR தாளில் இரண்டு இடங்களில் பதிவு செய்ய வேண்டும், இடதுகை பெருவிரல் ரேகையை OMR தாளில் தேர்வு முடிந்த பின் பதிவிட வேண்டும்.
கருப்பு பால் பாய்ண்ட் பேனாவைத் தவிர பென்சில் அல்லது வேறு பேனாவில் எழுதக் கூடாது, தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும். ஒரு கட்டத்தைத் தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களைத் விடைகளாகக் குறிக்கக்கூடாது .
விடை தெரியாத கேள்விக்கு OMR தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் Shade செய்ய வேண்டும்.
- 16:29 (IST) 23 Jul 2022கள்ளக்குறிச்சி வன்முறை: மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஆய்வு!
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி வளாகத்தில் மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்றும், பள்ளி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் செல்போன்கள்,ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளார்களா? என்றும் என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 16:14 (IST) 23 Jul 2022டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் முன்னிட்டு நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சிறப்பு பேருந்துகள் தேர்வு மையங்களில் நின்று செல்ல போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
- 15:49 (IST) 23 Jul 2022நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் பொறுப்பு: ஓபிஎஸ் அறிவிப்பு!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என்றும், ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதிக் கழக செயலாளர் பதவிகள் மீண்டும் உருவாக்கம் என்றும் அவரது அறிவிப்பில் கூறியுள்ளார்.
- 14:54 (IST) 23 Jul 2022தேசிய விருது வென்ற நடிகர் சூர்யாவுக்கு ரஜினி வாழ்த்து
சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற நடிகர் சூர்யாவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல், சூரரைப் போற்று’ பட இயக்குநர் மற்றும் தேசிய விருது பெறும் திரையுலகக் கலைஞர்களுக்கும் நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்
- 14:32 (IST) 23 Jul 2022திருவாரூரில் அரசு பேருந்து மரத்தின் மீது மோதி விபத்து; 30 பயணிகள் படுகாயம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்
- 13:59 (IST) 23 Jul 2022கொரோனா பூஸ்டர் டோஸ்; தமிழக மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்
கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்
- 13:32 (IST) 23 Jul 2022தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 13:15 (IST) 23 Jul 2022குட்கா வழக்கு; முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது வழக்குப்பதிய சி.பி.ஐ.,க்கு தமிழக அரசு அனுமதி
குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிய சி.பி.ஐ.,க்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது
- 12:52 (IST) 23 Jul 2022அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் கொள்ளை
அதிமுக தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம், அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ், கோவை, புதுச்சேரி, திருச்சி அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரங்களும் கொள்ளை போனதாக சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- 12:51 (IST) 23 Jul 2022அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் கொள்ளை
அதிமுக தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம், அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ், கோவை, புதுச்சேரி, திருச்சி அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரங்களும் கொள்ளை போனதாக சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- 12:32 (IST) 23 Jul 2022சி.வி.சண்முகம், காவல் நிலையத்தில் புகார்
அதிமுக தலைமை அலுவலகத்தில் அசல் ஆவணங்கள், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொள்ளை போனது தொடர்பாக காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்தார்.
- 12:23 (IST) 23 Jul 2022பிரதமர் மோடி ஆடிக்கிருத்திகை வாழ்த்து
பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தின் வாயிலாக தமிழ் மக்களுக்கு ஆடிக்கிருத்திகை வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்.
— Narendra Modi (@narendramodi) July 23, 2022 - 12:09 (IST) 23 Jul 2022என்றாவது ஒருநாள் நீதி கிடைக்கும்
ஸ்ரீமதி புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார். என்றாவது ஒருநாள் எங்களுக்கு நீதி கிடைக்கும் என மகளை அடக்கம் செய்த பிறகு மாணவியின் தாய் கண்ணீர் மல்க கூறினார்.
- 12:09 (IST) 23 Jul 2022மகளை அடக்கம் செய்த பிறகு தந்தை பேட்டி
ஸ்ரீமதி வழக்கில் சிபிசிஐடி விரிவான விசாரணை நடத்தும் என்று நம்புகிறோம். ஸ்ரீமதியின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என மகளை அடக்கம் செய்த பிறகு தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 11:50 (IST) 23 Jul 2022மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம்
பெரிய நெசலூரில் உள்ள மயானத்தில் மாணவி ஸ்ரீமதியின் உடல் ஸ்ரீமதியின் உடல், பாடப் புத்தகத்தோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.
- 11:05 (IST) 23 Jul 2022மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம்
மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
- 10:44 (IST) 23 Jul 2022ராம்நாத் கோவிந்த் பிரிவுபசார விழா
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு நாடாளுமன்றம் சார்பில் இன்று பிரிவுபசார விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு ஜூலை 25ஆம் தேதி பொறுப்பேற்கிறார். ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு, 64 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10:34 (IST) 23 Jul 2022சென்னையில் தங்கம் விலை
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4680 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.37440 என விற்பனையாகிவருகிறது. 24 காரட் பார் தங்கம் கிராமுக்கு ரூ.5082 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.40656 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியை பொருத்தவரை கிராம் ரூ.61.60 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.61600 ஆக உள்ளது.
- 09:43 (IST) 23 Jul 2022டெல்லி ரயில் நிலையத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
புதுடெல்லி ரயில் நிலையத்தில் 30 வயதான பெண்ணை, ரயில்வே மின் ஊழியர் ஒருவர் சக தொழிலாளிகளுடன் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, ரயில்வே தொழிலாளிகள் 4 பேரை கைது செய்தனர். இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- 09:36 (IST) 23 Jul 202224 ஆயிரம் பேருக்கு கோவிட் பாதிப்பு
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,411 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 67 பேர் உயிரிழந்துள்ளனர். 1,50,100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை 4 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 379 பேர் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 25 ஆயிரத்து 997 ஆக உள்ளது. தினந்தோறும் பாதிப்பு விகிதம் 4.46 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
- 09:15 (IST) 23 Jul 2022மாணவி ஸ்ரீமதி உடலுக்கு அஞ்சலி
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு உறவினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் கூடி அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
முன்னதாக ஸ்ரீமதி உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஊர்தி விபத்தில் சிக்கியது. மாணவியின் சொந்தக் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.