By: WebDesk
January 28, 2018, 9:10:16 AM
தமிழகம் முழுவதும் இன்று 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில், தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.
காலை 7 மணிக்கு துவங்கிய சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என, 43 ஆயிரம் மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார். நாகையில் தலைஞாயிறு அரசு மருத்துவமனையில் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவங்கி வைத்தார்.
புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் 452 மையங்கள் மூலம், 5 வயதுக்குட்பட்ட 91 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். 2 ஆயிரம் ஊழியர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Today polio drops day