/indian-express-tamil/media/media_files/2025/08/04/epso-h-2025-08-04-00-06-21.jpg)
Today Latest Live News Update in Tamil 03 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு 55.74% ஆக உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் 6.553 டி.எம்.சி.க்கு நீர் இருப்பு உள்ளது.
-
Aug 04, 2025 00:05 IST
109 வகையான சைவ உணவு: ஈபிஎஸ்-க்கு பிரமாண்ட விருந்து வைத்த நயினார்
109 வகையான சைவ உணவுகளுடன் ஈபிஎஸ்-க்கு பிரமாண்ட விருந்து வைக்கப்பட்ட நிலையில், தமிழிசை செளந்தர்ராஜன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர். கூட்டணிக்கு பின் முதல்முறையாக நயினார் நாகேந்திரன் இல்லத்தில் ஈபிஎஸ் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நயினார் அளித்த இரவு விருந்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
-
Aug 04, 2025 00:03 IST
ராஞ்சனா கிளைமாக்ஸில் AI - தனுஷ் எதிர்ப்பு
ராஞ்சனா படத்தின் கிளைமாக்ஸ் AI மூலம் மாற்றப்பட்டதற்கு நடிகர் தனுஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த மாற்றப்பட்ட முடிவு திரைப்படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டது. AI மூலம் திரைப்படக் காட்சிகளை மாற்றுவது மிகவும் கவலைக்கிடமான வழிமுறையாகும் என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
-
Aug 03, 2025 20:02 IST
நல்ல விஷயம் செய்பவர்களுக்கு முள்கீரிடம் தான் கிடைக்கும்: கமல்ஹாசன்
சூர்யாவின் அகரம் விழாவில் பேசிய கமல்ஹாசன் எம்.பி. நல்ல விஷயம் செய்பவர்களுக்கு முள்கீரிடம் தான் கிடைக்கும்; சமூகத்தில் பெரியவர்கள் பட்டியலில் இடம் பிடிக்க என்னை போல சூர்யாவும் ஆசைப்பட்டு உள்ளார் என்று கூறியுள்ளார்.
-
Aug 03, 2025 20:01 IST
மக்கள் பிரச்னைகளை பொதுக்கூட்டங்கள் மூலம் எடுத்து செல்ல ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்
தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை
மக்களிடம் எடுத்துச் செல்லவும், திமுக ஆட்சியில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பொதுக்கூட்டங்கள் மூலம் எடுத்து செல்லவும் ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக அழிவு பாதையில் அழைத்து செல்லப்படுவதை பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லவும், கூட்டணி குறித்த கருத்துக்களை தவிர்க்குமாறும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, -
Aug 03, 2025 19:55 IST
சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்வி: கமல்ஹாசன்
"சனாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள் என அகரம் விழாவில் கமல்ஹாசன் எம்.பி. பேசியுள்ளார்.
-
Aug 03, 2025 18:32 IST
அடுத்த டார்கெட் சந்திராயன் 4: இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்
நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துவரும் சந்திராயன் 4 திட்டத்தில் தற்போது
ஈடுபட்டு வருகிறோம் இதில் ஜப்பான் உடன் இணைந்து பணியாற்ற உள்ளோம் என இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். -
Aug 03, 2025 18:31 IST
அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன்: நடிகர் அஜித்குமார் அறிக்கை
திரைத்துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நடிகரும் ரேஸருமான அஜித்குமார், இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன். இந்த அன்பை எப்போதும் இறுகப் பிடித்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
-
Aug 03, 2025 17:28 IST
யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை பீகாரில் எந்த அரசியல் கட்சியினரும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்த பணியில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
-
Aug 03, 2025 17:12 IST
சுற்றுப்பயணத்தை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆரம்பாக்கம் விநாயகர் கோயிலில் வழிபாடு செய்து சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
-
Aug 03, 2025 17:10 IST
தேஜஸ்வி யாதவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிஹார் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டிய நிலையில் அவர் 2 வாக்காளர் அட்டை வைத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேஜஸ்வி யாதவ் பெயரில் இரண்டு எண்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் ஒன்று போலியாக இருக்கும் என தேர்தல் ஆணையம் சந்தேகம் அடைந்துள்ளது.
-
Aug 03, 2025 16:50 IST
ஓபிஎஸ், தேமுதிக வந்தால் பிரச்சனை இல்லை
திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ், தேமுதிக வந்தால் பிரச்சனை இல்லை. கூட்டணி வலிமை பெற்றால் மகிழ்ச்சி தான். யார் யாரெல்லாம் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும். ஓபி.எஸ், தேமுதிக, திமுக கூட்டணிக்கு வந்தால் விசிகவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஓபிஎஸ் பாஜகவின் பிடியிலிருந்து வந்ததே மகிழ்ச்சி தான் கூட்டணி கட்சிகள் நல்லிணக்கத்தோடு தொகுதிகளை பிரித்து கொள்வோம், அதில் பிரச்சனையில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
Aug 03, 2025 16:17 IST
ஆக. 9இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
ஆணவக் கொலையை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்றக் கோரி ஆகஸ்ட் 9யில் ஆர்ப்பாட்டம் என திருமாவளவன் அறிவித்துள்ளார். சென்னையில் எனது தலைமையிலும் மாவட்டத தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டன் என திருமா கூறியுள்ளார்.
-
Aug 03, 2025 16:15 IST
நடிகர் மதன் பாப் மறைவு குறித்து ஆதங்கப்பட்ட இளைஞர்
வீடே வெறிச்சோடிய இருக்கு, எந்த நடிகரும் வரலை. நல்ல காரியத்துக்கு முன்னாடி நிக்கிறமோ இல்லையோ, இந்த மாதிரி விஷயத்துக்கு நிக்கணும் என மதன்பாப் மறைவுக்கு நடிகர்கள் வராததை கண்டித்து இளைஞர் ஒருவர் பேசியுள்ளார்.
-
Aug 03, 2025 15:43 IST
விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
ஓபிஎஸ், தேமுதிக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வந்தால் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
-
Aug 03, 2025 15:39 IST
நடிகர் மதன் பாபின் உடல் தகனம் செய்யப்பட்டது!
நடிகர் மதன் பாப் உடல் சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
-
Aug 03, 2025 14:47 IST
ஆடிப்பெருக்கை முன்னிட்டு நகைக்கடைகளில் குவிந்த மக்கள்
ஆடிப் பெருக்கை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளில் அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆடிப் பெருக்கன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது மக்களின் நீண்டநாள் நம்பிக்கை. இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருக்கின்போது நகைகள் வாங்குவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன்படி, இந்த ஆண்டும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய நகைக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் நகைகள் வாங்க வந்தனர். தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை இந்த ஆண்டு சிறப்பாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆடிப் பெருக்கையொட்டி, ஒரு சவரன் தங்கம் ரூ.74,320-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் விற்கப்பட்டது. இந்த விலை ஏற்றம் இருந்தபோதிலும், தங்கம் வாங்குவதில் மக்கள் ஆர்வம் குறைவின்றி காணப்பட்டனர்.
-
Aug 03, 2025 14:10 IST
ஓ.பி.எஸ் செயல்பாடு அ.தி.மு.க-விற்கு லாபம் - பொன்னையன்
அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி: தி.மு.க-வுடனான ஓ. பன்னீர்செல்வத்தின் ரகசிய உறவு தற்போது வெளிவந்துவிட்டது; ஓ. பன்னீர்செல்வத்தின் இந்தச் செயல்பாடு அ.தி.மு.க-விற்கு லாபம். பண்ருட்டி ராமச்சந்திரன் பல கட்சிகளுக்கு மாறியவர், பல கொள்கைகளுக்குச் சொந்தக்காரர்” என்று பொன்னையன் விமர்சித்துள்ளார்.
-
Aug 03, 2025 13:34 IST
மதன் பாப் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி
மறைந்த நடிகர் மதன் பாப் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினார். மதன் பாப், உடலுக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர், நிர்வாகிகள் மற்றும் நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-
Aug 03, 2025 13:33 IST
நடிகர் மதன் பாப் உடலுக்கு நாசர் அஞ்சலி
மறைந்த நடிகர் மதன் பாப், உடலுக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர், நிர்வாகிகள் மற்றும் நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-
Aug 03, 2025 13:31 IST
நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை வெளியிட்ட ஓ.பி.எஸ்
பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக ஜூலை 24-ம் தேதி பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு
அனுப்பிய குறுஞ்செய்தியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். -
Aug 03, 2025 13:20 IST
என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகிய முடிவை ஓ.பி.எஸ் மாற்றிக்கொள்ள வேண்டும் - டி.டி.வி தினகரன்
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி: “என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகிய தனது முடிவை ஓபிஎஸ் மாற்றிக்கொள்ள வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் விலகியது அதிர்ச்சியளிக்கிறது. ஓ.பி.எஸ் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். மத்திய அமைச்சர் அமித்ஷா தலையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பார். ஓ.பி.எஸ் கூட்டணியில் இருந்து விலகியது துரதிஷ்டவசமானது. தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம் அளிக்கிறது. கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய சூழலுக்கு ஓ.பி.எஸ் தள்ளப்பட்டுள்ளார், டெல்லி பா.ஜ.க தலைமை ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று கூறினார்.
-
Aug 03, 2025 12:58 IST
வதந்தி பரப்புகிறார்கள்... உடல் மண்ணுக்கு உயிர் அ.தி.மு.க-வுக்கு - ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: “நான் அ.தி.மு.க-வில் இருந்து விலகப் போகிறேன் என வதந்தி பரப்பி வருகிறார்கள்; யார் வீட்டு வாசலிலும் பதவிக்காக நிற்க மாட்டேன். என் உடலில் ஓடுவது அ.தி.மு.க ரத்தம். உடல் மண்ணுக்கு உயிர் அ.தி.மு.க-வுக்கு” என்று தெரிவித்துள்ளார்.
-
Aug 03, 2025 12:18 IST
கூகுள் நிறுவனம் வெளியே கூட மாடுகள் மேய்கிறது - சீமான்
மாடுகள் மேய்ந்தால் தான் மலைகள் காக்கப்படும், மாடுகள் மேய்வதால் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுவது தடுக்கப்படும். தீ ஏற்படாமல் இருக்க கூகுள் நிறுவனம் வெளியே கூட மாடுகள் மேய்ந்து வருகிறது என மாடு மேய்க்கும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்
-
Aug 03, 2025 11:59 IST
ஓ.பி.எஸ் இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை நகர்த்தி இருக்கலாம் - தமிழிசை
அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை நகர்த்தி இருக்கலாம் என பா.ஜ.க மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்
-
Aug 03, 2025 11:41 IST
க்ராஷென்னினிகோவ் எரிமலை 600 ஆண்டுகளில் முதல் முறையாக வெடிப்பு
க்ராஷென்னினிகோவ் எரிமலை 600 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்தது. கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தால் வெடித்திருக்கலாம் என ரஷ்யாவின் RIA செய்தி நிறுவனம் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
-
Aug 03, 2025 11:38 IST
பள்ளி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்
திருப்பத்தூர் அருகே 2 நாட்களுக்கு முன் காணாமல் போன 11ம் வகுப்பு மாணவன் முகிலன் பள்ளியின் கிணற்றிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Aug 03, 2025 11:20 IST
இ.பி.எஸ் சுற்றுப்பயணம் - முன்னேற்பாடுகள் தீவிரம்
ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய இரு தொகுதிகளில் ஆகஸ்டு 19ம் தேதி, எடப்பாடி பழனிசாமி மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம் எனும் தலைப்பிலான சுற்றுப்பயண நிகழ்வில் கலந்து கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி, பாதுகாப்பு வழங்க வேண்டி எஸ்.பி.யை நேரில் சந்தித்து அ.தி.மு.க.,வினர் மனு அளித்தனர்
-
Aug 03, 2025 11:01 IST
”இ.பி.எஸ். ஊர் ஊராக சென்று பொய் பிரசாரம் செய்கிறார்”
7-வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராக பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
Aug 03, 2025 10:24 IST
தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி இபிஎஸ் மரியாதை!
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220 வது நினைவு தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். நெல்லை தனியார் ஓட்டலில் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்துக்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
Aug 03, 2025 10:19 IST
தீரன் சின்னமலை சிலைக்கு ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.
-
Aug 03, 2025 10:18 IST
ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் - தமிழிசை சௌந்தரராஜன்
ஓ.பி.எஸ் மற்றும் நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனை ஓ.பி.எஸ் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஓ.பி.எஸ் இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை செய்திருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
Aug 03, 2025 09:48 IST
ஆடி பெருக்கு - களைகட்டும் மீன் மார்க்கெட்
ஆடி பெருக்கை முன்னிட்டு சென்னை காசிமேடு மீன் சந்தையில் களைகட்டிய விற்பனை. கடந்த வாரத்தை விட மீன்களின் விலை குறைவாக இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
Aug 03, 2025 09:40 IST
மக்களை ஒருங்கிணைத்துக் களத்தில் வெல்வோம் - முதல்வர் ஸ்டாலின்
ஆகஸ்ட் 7 ம் தேதி கலைஞரின் நினைவு நாளில் தமிழர் வாழும் நிலமெங்கும் அவர் நினைவைப் போற்றுவோம். கலைஞரின் நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதிப் பேரணியில் நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதிப் பேரணியில் கடலெனத் திரண்டு வணக்கத்தைச் செலுத்துவோம். மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலைகளுக்கு திமுகவினர் மாலையிட்டு மரியாதை செலுத்திட வேண்டும். 2026 தேர்தலில் 7 ஆவது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம். ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைத்துக் களத்தில் வெல்வோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Aug 03, 2025 09:05 IST
ஓபிஎஸ் பற்றி குறை கூற மாட்டேன் - நயினார் நாகேந்திரன்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்னைப் பற்றி குறை கூறினாலும் நான் அவரைப் பற்றி குறை கூற மாட்டேன். முதல்வரை சந்திப்பதற்கு முந்தைய நாள் கூட நான் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டேன். ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் எனக்கு இன்னும் வரவில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
-
Aug 03, 2025 08:53 IST
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
உண்மையான அதிமுக தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில் அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, டெல்லி வரை சென்று மண்டியிட்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் என்றார் ஸ்டாலின்.
-
Aug 03, 2025 08:31 IST
7வது முறையாகக் கழக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் - மு.க.ஸ்டாலின்
2026 யில் 7 ஆவது முறையாக கழக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம். ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பின் வழியே களத்தில் வெல்வோம் என ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
Aug 03, 2025 08:29 IST
கேரள கன்னியாஸ்திரிகள் நீதிமன்ற ஜாமீன்
சத்தீஸ்கரில் பாஜக அரசால் ஆள்கடத்தல், கட்டாய மதமாற்றம் புகாரில் கைது செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிகளுக்கு NIA நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சிறையின் வாசலில் நின்று கேரள பாஜக தலைவர் வரவேற்றார்.
-
Aug 03, 2025 08:07 IST
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள்
சென்னையில் மெட்ரோ,மேம்பால கட்டுமானம் குடிநீர் வாரியப் பணிகள் ஆகியவை நடக்கும் இடங்களில் பருவ மழைக்கான 477 நீர் இறைக்கும் ட்ராக்டர்களை நிறுத்த மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. செப்டம்பர் 15 முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை வாடகைக்கு எடுக்கப்படும் இந்த ட்ராக்டர்களுக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.
-
Aug 03, 2025 08:04 IST
திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான் - முதல்வர் ஸ்டாலின்
நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான்; முந்தைய அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின் திட்டம் உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தால், தமிழ்நாடு அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
Aug 03, 2025 07:48 IST
நயினார் நாகேந்திரன் - இபிஎஸ் சந்திப்பு
தேர்தல் பரப்புரை சுற்றுப் பயணமாக நெல்லை வந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தனது வீட்டில் விருந்து அளிக்கிறார். என்.ஜி.ஓ. காலனியில் உள்ள நயினார் நாகேந்திரன் வீட்டில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக, பாஜக நிர்வாகிகளும் விருந்தில் பங்கேற்கின்றனர்.
-
Aug 03, 2025 07:29 IST
சென்னை - நெகிழ்ந்து பேசிய தோனி
சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான் வெற்றியோ, தோல்வியோ மைதானத்திற்கு வந்து மக்கள் உற்சாகப்படுத்துவார்கள். ஓய்வு பெறும் வயது என்று ஒன்று உண்டு அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பை கொடுத்து விட்டு செல்வது நல்லது தான். கிரிக்கெட்டை பொறுத்தவரை களத்தில் எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம். தோல்விகள் தான் நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கும் எதிரணி செய்யும் தவறுகளில் கூட பாடம் கற்றுக்கொள்வேன் என தோனி பேசியுள்ளார்.
-
Aug 03, 2025 07:28 IST
ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைத்து வெல்வோம்
ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைத்து வெல்வோம். ஆகஸ்ட் 7யில் கலைஞர் நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் திமுகவினர் கடலென திரள வேண்டும். 7 ஆவது முறையாக திமுக ஆட்சி அமைய உறுதியேற்போம் என கட்சித் தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
Aug 03, 2025 07:26 IST
கஞ்சா பறிமுதல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டிகளில் இருந்து 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரயில்வே போலீசார் கஞ்சாவை கைப்பற்றி பூக்கடை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார்? என சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Aug 03, 2025 07:25 IST
மதன் பாப் உடல், இன்று மாலை 4 மணிக்கு தகனம்
மறைந்த நடிகர் மதன் பாப் உடல், இன்று மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Aug 03, 2025 07:24 IST
ஆடி பெருக்கு - ஆற்றில் விடப்பட்ட கல்யாண மாலைகள்
ஆடி பெருக்கை முன்னிட்டு திருமண மாலைகளை பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் விட்டு, பூஜை செய்து தாலி கயிறு மாற்றி புதுமண தம்பதிகள் வழிபட்டனர்.
-
Aug 03, 2025 07:23 IST
2 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்காசி, விருதுநகர் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.