பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
வாரிசு: விஜய் ரசிகள் வாக்குவதம்
வாரிசு படத்திற்கான சிறப்பு காட்சி டிக்கெட் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் காரை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
காங். தலைவர் விமர்சனம்
ஜனநாயகத்தில் ஒருநபரை கடவுளாக்குவது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்; இது மாறவேண்டும்; ஜாதி மதம் அடிப்படையில் கர்நாடகாவை பாஜக பிரிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு நிகழ்வாக “ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார் முதலமைச்சர் என சென்னை சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்வு ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 4 ஏக்கர் பரப்பளவிலான தைல மரங்கள் எரிந்து நாசமான நிலையில், சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது!
தமிழகத்தில் மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள், http://madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 10.01.2023 நண்பகல் 12.00 முதல் 12.01.2023 மாலை 05.00 மணி முடிய பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியகீதம் இசைக்கப்படும் முன்பே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியுள்ளார் ஆளுநர். சட்டமன்றத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
வெளிநாட்டு முதலீடு, முதலீட்டாளர்களால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
உலகளாவிய தமிழ் ஸ்டார்ட்அப் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஜன.20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏ. கூட்டம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது.
இதில் சட்டமன்ற கூட்டத்தொடர் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டுள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி ராபத்து விழாவின் 8ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு,
தங்க குதிரை வாகனத்தில் வையாளி கண்டுருளினார் நம்பெருமாள்.
இந்த வைகாசி திருவிழா 12ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது.
திங்கள்கிழமை (ஜன.9) வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் சென்செக்ஸ் 846.94 புள்ளிகளும், நி.ஃப்டி 241.75 புள்ளிகளும் உயர்ந்து காணப்பட்டன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் உயர்ந்தது.
பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி, சுரினாம் அதிபர் சந்திரிகாபர்சாத் சந்தோகி மற்றும் கயானா அதிபர் முகமது இர்ஃபான் அலி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும் அவமதித்துள்ளார்.
ஆளுநரின் இத்தகைய தரம் தாழ்ந்தப்போக்கினை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார்.
ஆளுனர் உரையை முழுவதும் வாசிக்காதது தவறு என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஆளுனர் உரை குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஆளுனர் உரையில் எதுவும் இல்லை. நாங்கள் ஆளுனர் உரையை கேட்க வந்தோம்.
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையை கேட்க வரவில்லை” என்றார்.
ஆளுனர் மன்னிப்பு கோர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர், “ஆளுனரின் நடவடிக்கையை எதிர்த்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், இறையூரில் பட்டியல் இனத்தவர் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க இறையூரைச் சேர்ந்த 20 பேருக்கு சம்மன் அனுப்பி இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்: “தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற வேண்டுமென, முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது; சட்டமன்ற மரபைக் காத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என்று ட்வீட் செய்துள்ளார்.
ிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக,அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏறவேண்டுமென,முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.சட்டமன்ற மரபைகாத்த முதலமைச்சர் @mkstalinஅவர்களுக்கு நன்றி. pic.twitter.com/royY2F37QC
— Udhay (@Udhaystalin) January 9, 2023
பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன்: திட்டமிட்டு கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு ஆளுநரை அவமதித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: “உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர், பாதியிலேயே புறக்கணித்துவிட்டு சென்றது தவறு” என்று தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளில், மின்சார வாரிய ஊழியர்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள ழ்வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூடியூபர் மாரிதாஸூக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கை புலன் விசாரணை செய்ய காவல்துறைக்கு உரிய அவகாசம் தேவை என்று சென்னை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததையடுத்து, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: “சட்டப்பேரவை மரபுகளையும் அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுநரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுனரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை!
— Dr S RAMADOSS (@drramadoss) January 9, 2023
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை: “ஆளுநர் கருத்துக்களை, சட்டசபைக் குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? ஆளுநர் உரையை சட்டசபைக் குறிப்பில், எப்படி இடம்பெற வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியது தவறானது. கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்து கொண்டதால் ஆளுநர் அவையில் இருந்து வெளியேற நேரிட்டது. தி.மு.க பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? தங்களால் எதிர்க்க முடியாததால் கூட்டணி கட்சியை தூண்டிவிட்டு
வேடிக்கை பார்க்கிறது தி.மு.க. மக்கள் பணத்தை கோடி கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில், நடப்பது எல்லாமே நாடகமே” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் நினைத்த வார்த்தைகளை பயன்படுத்துவது எந்த காலத்திலும் கேட்டிராத மரபு; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; மேலும், ஆளுநராக இருக்க அவருக்கு தகுதி உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும் – பீட்டர் அல்போன்ஸ்
தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது
ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது. (1/4) @CMOTamilnadu @rajbhavan_tn
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 9, 2023
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் 7 முதல் 10 ஆம் தேதி வரை செய்முறை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை சட்டப்பேரவையில் படிக்கும் போது ஆளுநர் சில வார்த்தைகளையும், சில பத்திகளையும் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்- அன்புமணி ராமதாஸ்
சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்த நிலையில் ட்விட்டரில் ‘GetOutRavi’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே ஆளுநர் வாசிக்காதது வேதனையளிக்கிறது – சபாநாயகர் அப்பாவு
ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வலியுறுத்தி, வரும் 13ம் தேதி விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
“நாளை, மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெராவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்”
11, 12-ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம்
சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு
ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தது மரபு அல்ல
ஆளுநர் உரையை கேட்க வந்தோமே தவிர, முதல்வர் உரையை அல்ல – ஈபிஎஸ்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
சட்டமன்ற நடவடிக்கைகள் முடிவதற்கு முன்பாக ஆளுநர் வெளியேறினார்
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி தெலுங்கு மொழியில் வெளியாகும் என தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவிப்பு
ஜனவரி 11ம் தேதி வெளியாக இருந்த நிலையில் 14ம் தேதி வெளியிடுவதாக அறிவிப்பு
தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்களுக்கு முன்னுரிமை அளித்து 14ம் தேதி வெளியீடு – தில் ராஜூ
'திராவிட மாடல்' என்ற வார்த்தையை படிக்காமல் தவிர்த்த ஆளுநர்
தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் ’திராவிட மாடல்’ என்ற வார்த்தையை படிக்காமல் தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி
நீட் தேர்வு உரிமையை பறிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது. நீட் விலக்கு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டு நிலுவையில் உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி
குறுகிய காலத்தில், செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியது தமிழக அரசு. 2030ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு . புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு வேலைவாய்ப்பு அதிகரிப்பு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது.
புயலையும், வடகிழக்கு பருவ மழையையும் தமிழக அரசு சிறப்பாக கையாண்டது. பருவமழையையும், புயலையும் சிறப்பாக கையாண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
“நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” – தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ.க்கள், ஆளுநர் முன்பாக கையில் பேப்பரில் ஆங்கிலத்தில் எழுதி வைத்து உயர்த்திப் பிடித்தவாறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்
ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை தவிர பிற கட்சிகள் வெளிநடப்பு.
சட்டப்பேரவையில் கடும் அமளிக்கு மத்தியில் தமிழில் உரையை தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் – தமிழில் வாழ்த்து கூறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17ம் தேதி நடக்க உள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை. சட்டமன்ற வளாகத்தில் ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை
சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் கர்ப்பம் தரிப்பது, உணவு பழக்கங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் நோட்டீஸ் புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் முடிவு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ய திட்டம்
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாள விரிசல் காரணமாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்; அரக்கோணம் – சென்னை செல்லக்கூடிய ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி.
மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்படுவதால் மாம்பலம் பிரதான சாலையில் இன்று முதல் 2024 ஏப்ரல் 7 வரை போக்குவரத்து மாற்றம்; மாம்பலம் பகுதியில் டிசம்பர் 25 முதல் ஒரு வாரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
“சங்க இலக்கியங்களிலும் தமிழ்நாடு என்று இல்லாமல் தமிழகம் என்றுதான் உள்ளது” – இணையமைச்சர் எல்.முருகன்