Advertisment

Today Tamil News: தமிழக மீனவர்கள் மேலும் 14 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rameshwaram, chennai high court, firing on tamilnadu fishermen, inquiry by DSP, indian coast guard, tamilnadu government, tamilnadu fishermen

Tamil news today

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil News Updates

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையால் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. மீனவர்களின் 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்

சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி த.மு.மு.க ஆர்ப்பாட்டம்

சென்னை எழும்பூரில் த.மு.மு.க.,வினர் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வு அறிவிப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு நாளை மறுநாள் விசாரிக்கிறது.

லியோ படத்தின் வெற்றி விழா

லியோ படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது. விஜய் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார்

தீபாவளி பண்டிகை; ஆம்னி பேருந்து கட்டணம் 5% குறைப்பதாக உரிமையாளர்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்து கட்டணத்தை 5% குறைப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

எகிப்தில் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - 35 பேர் மரணம்

எகிப்தில் பெஹய்ரா பகுதியில் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு 2 மணி மண்டபங்கள்

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு,  ₹1.55 கோடி செலவில் 2 மணி மண்டபங்கள் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் ₹1.43 கோடியில் ஒரு மணிமண்டபம், மிக முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ₹12.54 லட்சம் மதிப்பில் மற்றொரு மண்டபம் கட்டப்படும் - நாளை மறுநாள் தேவர் குருபூஜை விழா நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

பிருந்தா - எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, சேலம் நகர வடக்கு துணை ஆணையராக நியமனம்

அய்மன் ஜமால் - எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, ஆவடி சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக நியமனம்

சுகுணாசிங் - காத்திருப்போர் பட்டியலில் இருந்து, சென்னை ரயில்வே காவல்துறை எஸ்பியாக நியமனம்

கவுதம் கோயல் - பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர்

பாஸ்கரன்- தமிழ்நாடு சிறப்பு காவல் படை மதுரை 6 வது பட்டாலியன் கமாண்டன்ட்- தமிழ்நாடு அரசு

மோடி தினமும் 16 மணி நேரம் வரை கடுமையாக உழைக்கிறார்

சமீபத்தில் இன்ஃபோஸில் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தி, வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுடன் இந்தியா போட்டியிட விரும்பினால், இளைஞர்கள் வே வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார்.

JSW குழும தலைவர் சஜ்ஜன் ஜிண்டால், நாராயண மூர்த்தியின் கருத்துக்களை முழு மனதுடன் ஆதரிப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாட்டிற்கு வாரத்தில் ஐந்து நாள் வேலை எனும் கலாச்சாரம் தேவையில்லை.

நமது பிரதமர் நரேந்திர மோடி தினமும் 14 முதல் 16 மணி நேரம் வரை கடுமையாக உழைக்கிறார்.  என் தந்தை வாரத்தில் 7 நாட்களும் 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்கிறார்.  நான் தினமும் 10 முதல் 12 மணிநேரம் வேலை செய்கிறேன் என ஜிண்டால் குறிப்பிட்டுள்ளார்.

அசாம் எல்லையில் பயங்கர நிலச்சரிவு

அசாம் - அருணாச்சலப்பிரதேச எல்லையில், கெருகாமுக் என்ற இடத்தில் உள்ள மலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. Credit- Sun News Twitter

சிபிஐ அலுவலகம் மீது தாக்குதல் - 4 பேர் கைது

சென்னை டி நகரில் உள்ள சி.பி.. கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அலெக்ஸ், பாரதி, அருண்குமார், பார்த்திபன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

மீனவர்கள் கைது- விடுதலை செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்

மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தீபாவளி- சென்னைக்கு 9,467 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி முடிந்தபின் நவ.13 முதல் நவ.15 வரை சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு தினசரி இயங்கும் 2,100 பேருந்துகளுடன், 3,167 சிறப்பு பேருந்துகளை சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,467 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (அக். 28) முதல் நவ. 3ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தீபாவளி முன்னிட்டு மாநிலம் முழுவதும் 16,845 பேருந்துகள்

தீபாவளியை முன்னிட்டு நவ.9 முதல் நவ.11 வரை 3 நாட்களுக்கு  மாநிலம் முழுவதும் 16,845 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

சென்னையில் மட்டும் வழக்கமாக இயங்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,675 என மூன்று நாட்களுக்கு 10,975 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சந்திர கிரகணத்திலும் கோயிலுக்கு செல்ல அனுமதி

சந்திர கிரகணத்திலும் கோயில் திறந்திருக்கும். கிரகணம் முடிந்தவுடன் சிறப்பு அபிஷேகம். திருநள்ளாறு சனீஸ்வரரை காண குவியும் பக்தர்கள் 

கமலின் 'இந்தியன் - 2' பட அப்டேட் வெளியீடு

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் 'இந்தியன் - 2' திரைப்படத்தின் அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு

ஹமாசின் வான்படை தளபதி பலி 

காசாவில் ஹமாசின் வான்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல். இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான ஷின் பெட் அறிவிப்பு

ஹமாசின் வான்படை தளபதி இஸ்ஸாம் அபு ருக்பே இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல். ஆளில்லா விமானங்கள், பாராகிளைடர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை நிர்வகித்து வந்த ருக்பே

அக். 7ம் தேதி இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் முக்கிய பங்காற்றிய ருக்பே. அக். 14 - ஹமாஸ் விமானப்படையின் முந்தைய தளபதி முராத் அபு முராத் கொலை

நுரையீரல் தொற்றால் முதியவர் பலி 

சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டி சிகிச்சையில் இருந்த முதியவர் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழப்பு - போலீசார். மாடு முட்டியதால் காயங்களோடு சிகிச்சையில் இருந்த முதியவருக்கு உடல் தேறி வந்த நிலையில், நுரையீரல் தொற்று ஏற்பட்டது.

நுரையீரல் தொற்று காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் இருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 174 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தகவல் 

 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் 

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்போது அதனை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

3,000-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன

கடந்த ஒரு ஆண்டில் 3,000-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. சாலையோரம் மாடுகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை. மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் சொந்த இடங்களில் மாடுகளை பராமரிக்க வேண்டும் - சென்னை துணை மேயர் மகேஷ் குமார்

நவ.9 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி நவ.9ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத்துறை. மொத்தம் 10,975 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டம். தீபாவளி முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக 13ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கடந்த ஒரு ஆண்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன

கடந்த ஒரு ஆண்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. சாலையோரம் மாடுகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை. மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் சொந்த இடங்களில் மாடுகளை பராமரிக்க வேண்டும் - சென்னை துணை மேயர் மகேஷ் குமார் 

தங்கம் விலை உயர்வு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு ஒரு கிராம் தங்கம் ரூ.5,770க்கும், ஒரு சவரன் ரூ.46,160க்கும் விற்பனை

பங்காரு அடிகளாரின் நினைவிடத்தில் இ.பி.எஸ் அஞ்சலி 

செங்கல்பட்டு :மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

 சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல். தப்பியோடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் முதியவர் உயிரிழப்பு

சென்னை, திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் சுந்தரம் என்ற முதியவர் உயிரிழப்பு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 10 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்தமணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்.

 நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2569 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றம்.  1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 577 மில்லியன் கன அடியாக உள்ளது.  500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 444 மில்லியன் கன அடியாக உள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment