Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி- சென்னை புறநகர் ரயில் சேவை இன்று 4 மணி நேரம் நிறுத்தம்
தாம்பரம், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையிலான மின்சார ரயில்கள் இன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 3 மாதம் மின்கட்டணம் உயர்வு
மின் கொள்முதல் விலை ஏற்றத்தை ஈடு செய்யும் பொருட்டு, புதுச்சேரியில் ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 ஆகிய 3 மாதங்களுக்கு மின் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வசூல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு அமலாக்கப் பணி: 5 காவலர்களுக்கு காந்தியடிகள் விருது அறிவிப்பு
மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், தென் சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் காசி விஸ்வநாதன், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் முனியசாமி, மதுரை மண்டலம் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியன் மற்றும் ராணிப்பேட்டை தலைமை காவலர் ரங்கநாதன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2024 ஜன 26 குடியரசு தினத்தில் விருதுடன் பரிசுத் தொகையாக ரூ.40000 ஆயிரம் வழங்கப்படும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் காங்கிரஸ் அரசியல்: அனுராக் தாகூர்
“பெண்கள் இடஒதுக்கீடு மசோதா 27 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது; காங்கிரஸால் அதை நிறைவேற்ற முடியவில்லை. எனினும் அவர்கள் அதை வைத்து அரசியல் செய்ய விரும்புகிறார்கள்” என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் ரூ.300 கோடி கொகைன் பறிமுதல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பனில் ரூ.300 கோடி மதிப்பிலான 30 KG கொகைன் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இது குறித்து விசாரணை நடந்துவருகிறது.
குன்னூர் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து மீட்பு
குன்னூர் மலைபாதையில் கவிழ்ந்த பேருந்து கிரேன்கள் மூலம் மீட்கப்பட்டது.
ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி பேருந்தை பள்ளத்திலிருந்து சாலைக்கு கொண்டு வந்தனர்.
ராகுல் காந்தி குறித்து அவதூறு: கைதான பா.ஜ.க நிர்வாகிக்கு நீதிமன்ற காவல்
ராகுல் காந்தி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரவீன் ராஜை, அக்டோபர் 13 வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுஜாதா உத்தரவிட்டார்.
தாம்பரம் - கடற்கரை மின்சார ரயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு
சென்னையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை சென்ற மின்சார ரயிலில்
திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
விழுப்புரம் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில், நாராயணசாமி என்ற ரவுடி நடத்திய தாக்குதலில் பரணிதரன் என்பவர் படுகாயம் அடைந்தார். நாட்டு வெடிகுண்டு வீச்சு தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிய போட்டிகள் - தடகளப் போட்டி: தங்கம் வென்றார் அவினாஷ் சேபிள்
ஆசிய போட்டிகள் - தடகளம் - ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் அவினாஷ் சேபிள் தங்கம் வென்றார்.
பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி... அரசு ஊழியர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்
புதிய ஓவ்யூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி, நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘லால் சலாம்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கும் ‘லால் சலாம்’ படம், அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசியலில் குதிக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி?
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிராமானக் கழக விஜிலன்ஸ் டி.ஜி.பி. ஆக உள்ள பி.கே.ரவி, விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். 1989 பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியான ரவி, அரசியலில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'பா.ஜ.க-வுக்கு எந்த பின்னடைவும் இல்லை': அ.தி.மு.க விலகல் குறித்து அண்ணாமலை பேச்சு
"அ.தி.மு.க தனியாக கூட்டணியை அமைத்தால் எந்தவித பின்னடைவும் கிடையாது. நான் பதவிக்காக வந்தவன் அல்ல. மிகப்பெரிய பதவியை தூக்கி எறிந்து வந்தவன்" என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தூய்மை பணி மேற்கொண்ட பிரதமர் மோடி
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தடகள வீரர் அங்கீத் என்பவருடன் தூய்மை பணி மேற்கொண்டார் பிரதமர் மோடி. உண்பதற்கும், உறங்குவதற்கும் போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று தூய்மையே சேவை என்ற இயக்கம் கடைபிடிப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
"தேர்தலில் தோல்வி - பாரபட்சமின்றி நடவடிக்கை" - ஸ்டாலின் எச்சரிக்கை
தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தோல்வியடைந்தாலும், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் 2 நாட்களுக்கு மின்சார ரயில் சேவை நிறுத்தம்
சென்னையில் 2 நாட்களுக்கு ரயில் சேவை நிறுத்தம். சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் இன்றும் நாளையும் நிறுத்தம். பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு. ரயில் நிறுத்தம் காரணமாக பேருந்து நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 7 இன்று(அக்.1) கனமழைக்கு வாய்ப்பு. தமிழகம், புதுச்சேரியில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம் - ஸ்டாலின்
நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தோற்றால் திமுக மாவட்டச் செயலாளர் பதவி நீக்கப்படுவார். தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவர்- திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், கூட்டணி உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்
ஆசிரியர் போராட்டம் - பேச்சுவார்த்தை
சென்னையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர் லா உஷா பேச்சுவார்த்தை. ஏற்கனவே 3 சங்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு பகுதி நேர ஆசிரியர் சங்கமும் இணைந்தனர். நான்கு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு
தமிழக வீரர் அடங்கிய துப்பாக்கி சுடுதல் அணி தங்கம் வென்று சாதனை
ஆசிய போட்டிகள் - ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா. சரோவர் சிங், தமிழக வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் தங்கம் வென்று சாதனை.
சுற்றுலாப் பேருந்து விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
நீலகிரி குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ஆயிரமும் வழங்க மோடி உத்தரவு
வருட இறுதிக்குள் பள்ளமில்லா நெடுஞ்சாலை
வணிக சிலிண்டர் விலை உயர்வு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.