மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி; பிரதமர் மோடி உறுதி :
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில், பிரதமர் மோடி மான் கி பாத் மூலம் உரையாற்றினார். கொரோனாவை தடுக்க தடுப்பூசியே பேராயுதம் என்பதை வலியுறுத்திய மோடி, தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை தவிர்த்து மூக்கில் செலுத்தும் தடுப்பு மருந்துகள் உள்பட மேலும் 3 தடுப்பூசிகள் பரிசோதனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மாதம் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு, மத்திய அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி வரை ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என்றும், நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசி குறித்து வதந்திகள் பரப்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை :
தடுப்பூசி தேவை மற்றும் கொள்முதலுக்கு மத்தியில் உள்ள இடைவெளி சந்தை மிகவும் செயல்திறன் அற்றதாக உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும், உள்நாட்டில் தயாராகும் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு 100% கொள்முதல் செய்து, மக்கள் தொகை மற்றும் தொற்றுப்பரவலை கணக்கிட்டு பகிர்தளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி விதிகளில் தளர்வு!
கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளும் இடைவெளி 84 நாள்களாக அதிகரிக்கப்பட்ட நிலையில், வெளிநாடு செல்பவர்கள் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 28 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் :
உலகம் முழுவதும் இதுவரை 17.43 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 15.76 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 37.51 லட்சம் பேர் உயிரிந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்கு மழை :
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், சாலைகளில் ஆறு போல தண்ணீரும் ஓடியது. இந்த சூழலில், அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ஜூன் 14 முதல் தொடக்க, நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இருமடங்கு அரிசி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் 1 வகுப்புகளை ஜூன் 3வது வாரத்தி தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 1 சேர்க்கைக்கான வழிக்காட்டு நெரிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-15% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 18,023 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 409 பேர் உயிரிழந்ததாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கும் வகையில், 1986ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தால் இறப்புச் சான்றிதழில் கோவிட் உயிரிழப்பு என குறிப்பிட வேண்டும். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 94.3% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாஸ்க், கிருமிநாசினி உள்ளிட்ட அத்தியாவசியமான 15 பொருட்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயித்துள்ளது.
3 வெவ்வேறு வகைகளை கொண்ட சர்ஜிகல் மாஸ்க்குகள் ரூ.3, ரூ.4, ரூ.4.50, என்-95 மாஸ்க் ரூ.22, சானிடைசர்(220ml) ரூ.110, பிபிஇ கிட் -ரூ.273, ஆக்சிஜன் மாஸ்க்- ரூ.54, பல்ஸ் ஆக்சிமீட்டர் ரூ.1500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் பொது மக்கள் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்
பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லா தெலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம்
பாலியல் புகாரில் சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளி ஆசிரியர் ஆனந்த் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக இணை செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா கொடுங்கையூரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார்.
பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் இழப்பை மாநில அரசு ஈடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மதுரை, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்காலிகமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக 45 நாட்களாக செயல்படாமல் இருந்த மதுக்கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து மதுக்கடைகளை திறந்து இளைஞர்கள் கொண்டாட்டம்
நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை ஏற்கனவே வழங்கப்ப்ட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்
கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு பணி நியமனத்தில் மீண்டும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தமிழகத்தை ஆண்ட போது பிறப்பிக்கப்பட்ட ஆணையை ஈ.பி.எஸ் அரசு செயல்படுத்தவில்லை என்றும் அவர் கடிதத்தில் மேற்கோள்காட்டியுள்ளார்.
கொரோனாவிற்கு உயிரிழக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம் தற்போது ரூ. 4630க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 200 அதிகரித்து ரூ. 37.040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் முதல் கூட்டம் இன்று சென்னை எழிலகத்தில் நடைபெறுகிறது. குழுவின் துணைத் தலைவரும் பொருளாதார நிபுணருமான ஜெயரஞ்சன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு துறைகளை ஒதுக்கி அரசு உத்தரவு
மத்திய அரசிடம் இருந்து இன்னும் 36 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவேண்டி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மாநில வளர்ச்சி கொள்கை குழு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
சென்னை கிங்ஸ் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் ஏற்கனவே உள்ள கட்டிடத்தோடு சுமார் 12.6 ஏக்கரில் பன்னோக்கு மருத்துவமனை அமைய உள்ளதாக, ஆய்வுக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவது உண்மைதான் எனவும், ஜூன் மாதத்திற்குள் இன்னும் 36 லட்சம் தடுப்பூசிகள் வர வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அரசு தயங்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்!
கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகின்ற 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் செல்கிறார்.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களுக்கு பிறகு, கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 86,498 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மிரின் பண்டிபோரா மாவட்டத்தில் வேயான் என்ற கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் கிராமமாக உருவெடுத்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் ரேஷன் கடைஅக்ள் செயல்படும் நேரத்தில் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரேஷன் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் செயல்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.