Advertisment

Tamil News Today : தமிழகத்தில் புதிதாக 15,830 பேருக்கு கொரோனா; 77 பேர் பலி

Tamil Nadu News Today : ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிப்பது தொடர்பான இடைக்கால மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

author-image
WebDesk
New Update
News Highlights: தனியார் பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு வரவேண்டாம் என உத்தரவு

Today Tamil News : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

தடுப்பூசி விலையை குறைக்க மத்திய அரசு கோரிக்கை :

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட இந்தியா தயாராகி வரும் நிலையில் தடுப்பூசிகளின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க, மத்திய அரசு பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது ஸ்டெர்லைட் வழக்கு :

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிப்பது தொடர்பான இடைக்கால மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் ஆக்சிஜன் உற்பத்திக்கு வேதாந்தா இலக்கு :

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம் என முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்னும் இரண்டு வாரத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி தொடங்கப்படும் என வேதாந்தா குழுமம் அறிவித்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் முழு உற்பத்தி திறனான 1000 டன் அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்ச்சைகளுக்கு பிறகு தமிழில் வெளியான புதிய கல்விக் கொள்கை :

17 மொழிகளில் புதிய கல்விக் கொள்கையின் மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில், தமிழ் மொழியில் வெளியிடப்படவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது புதிய கல்விக் கொள்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

செயற்கை ஆற்றில் கள்ளழகர் :

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு, கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கோயில் வளாகத்துக்கு உள்ளேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோயிலுக்கு உள்ளேயே அமைக்கப்பட்ட செயற்கை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். இந்த காட்சிகள் யூடியூபில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:17 (IST) 27 Apr 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,830 பேருக்கு கொரோனா; 77 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,830 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 பேர் ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்ததையடுத்து இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,728 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1 லட்சத்து 8 ஆயிரத்து 855 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


  • 21:13 (IST) 27 Apr 2021
    3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவிட்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார். சென்னை மாநகராட்சி பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.


  • 20:25 (IST) 27 Apr 2021
    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் ஜூன் 18ல் வெளியாகிறது

    இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18ம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


  • 19:47 (IST) 27 Apr 2021
    கொரோனா தொற்று பரவல் காரணமாக சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு

    கொரோனா தொற்று பரவல் காரணமாக சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு அறிவித்துள்ளது. மே 21ல் நடைபெறவிருந்த இறுதித்தேர்வு மற்றும் மே 22ல் நடைபெறவிருந்த இடைநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐசிஏஐ அறிவித்துள்ளது.


  • 19:03 (IST) 27 Apr 2021
    விவேக் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின்

    சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.


  • 18:23 (IST) 27 Apr 2021
    அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிமொழி

    “அரசு நிர்ணயித்த கொரோனா சிகிச்சை கட்டணத்தை விட அதிகமாக சில தனியார் மருத்துவமனைகள் வசூலித்து வருவதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    கட்டணத்தை நிர்ணயித்த அரசு அதனை முறையாக செயல்படுத்தவும் வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும்” என திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.


  • 18:17 (IST) 27 Apr 2021
    கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினரும் தனிமையில் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுரை

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் உள்ள நோயாளிகளின் குடும்பத்தினரும் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். விதிகளை மீறி வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.


  • 18:12 (IST) 27 Apr 2021
    தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மாநில அரசே எடுத்து நடத்த உத்தரவு

    டெல்லியில் உள்ள தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மாநில அரசே எடுத்து நடத்தலாம் எனறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு்ளது. கள்ளச்சந்தையில் ஆக்சிஜனை விற்பதாக எழுந்த புகாரில் உரிய விளக்கத்தை ஆலை நிர்வாகம் வழங்காததால் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


  • 18:10 (IST) 27 Apr 2021
    நடிகை சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் சிறை

    கேரளாவில் சோலார் மின் தகடு மோசடி வழக்க்கில், நடிகை சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


  • 18:08 (IST) 27 Apr 2021
    கொரோனா விதிமுறைகளை மீறியதாக 20,965 வழக்குகள் பதிவு

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக புதிய கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்,சென்னையில் கடந்த 8ஆம் தேதி முதல் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 20,965 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முககவசம் அணியாதவர்களிடம் இதுவரை ரூ.39.35 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.


  • 18:06 (IST) 27 Apr 2021
    இழப்பீடு வழங்க பல்லடம் நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    பல்லடம் நகராட்சி பேருந்து நிலைய கழிப்பறை மேற்கூரை இடிந்துவிழுந்து உயிரிழந்த கட்டிட தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரிய வழக்கில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்க பல்லடம் நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


  • 17:19 (IST) 27 Apr 2021
    ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச் சீல் வைக்கப்படும் - ஸ்டாலின்

    தமிழகத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தற்போர் ஆக்ஸிஜன் தேவைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அரசு அமைந்தால், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச் சீல் வைக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


  • 16:31 (IST) 27 Apr 2021
    முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடராஜன்

    சமீபத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் இதனைத் தொடர்ந்து தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.


  • 15:52 (IST) 27 Apr 2021
    பயணிகள் வரத்து குறைவு; 12 சிறப்பு ரயில்கள் ரத்து!

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரயில்களில் போதிய பயணிகள் இல்லாததால், தெற்கு ரயில்வே 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளது. ராமேஸ்வரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில், கோவை - சென்னை செண்ட்ரல் உள்ளிட்ட தடங்களில் பயணிக்கும் 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளது.


  • 15:16 (IST) 27 Apr 2021
    வீரர்களின் பாதுகாப்பே முதன்மை நோக்கம்- பிசிசிஐ

    ஐபிஎல் வீரர்களுக்கு 5 நாட்களுக்கு பதில் இனி 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.


  • 14:53 (IST) 27 Apr 2021
    கோவில் யானை பராமரிப்பு - அறிக்கை அளிக்க உத்தரவு

    கோவில் யானைகள் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகளின்படி பராமரிக்கப்படுகிறதா? என இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை அறிக்கை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் யானைகள் மனிதாபிமான, கண்ணியமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


  • 14:51 (IST) 27 Apr 2021
    விரைவில் ஸ்டெர்லைட்டில் மருத்துவ ஆக்சிஜன்

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கண்காணிப்புக் குழுவிற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவோம் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்யப்படும் என்றும், தங்களது கோரிக்கையை ஏற்ற மத்திய, மாநில அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு வேதாந்தா நிறுவனம் நன்றி கூறியுள்ளது.


  • 14:50 (IST) 27 Apr 2021
    விரைவில் ஸ்டெர்லைட்டில் மருத்துவ ஆக்சிஜன்

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கண்காணிப்புக் குழுவிற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவோம் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்யப்படும் என்றும், தங்களது கோரிக்கையை ஏற்ற மத்திய, மாநில அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு வேதாந்தா நிறுவனம் நன்றி கூறியுள்ளது.


  • 14:43 (IST) 27 Apr 2021
    ஞாயிறு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் குறைவு!

    ஞாயிறு பொது முடக்கத்தால் கொரோனா பரவலின் வேகம் குறைந்திருப்பதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். மேலும், மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டு கொண்டுள்ளார்.


  • 14:43 (IST) 27 Apr 2021
    மீண்டும் சித்த மருத்துவ சிகிச்சை

    கொரோனா பாதிப்பில் சித்த மருத்துவம் கைகொடுத்திருப்பதாகவும், மீண்டும் முழு வீச்சில் சித்த மருத்துவ சிகிச்சை தொடங்கப்படும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


  • 13:45 (IST) 27 Apr 2021
    மருத்துவ உபகரணங்களை அனுப்பிய இங்கிலாந்து

    கொரோனா பரவலை எதிர்கொள்ள, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைப்பதாக கூறி இருந்தார். இதனை அடுத்து 100 வென்டிலேட்டர்கள், 95 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இங்கிலாந்திலிருந்து டெல்லி வந்தடைந்தன.


  • 13:25 (IST) 27 Apr 2021
    பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதுத் தொடர்பாக ஆலோசிக்க நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருக்கிறது.


  • 13:22 (IST) 27 Apr 2021
    திட்டமிட்டப்படி மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - சத்யபிரதா சாகு

    மே 2-ம் தேதி திட்டமிட்டப்படி மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


  • 13:08 (IST) 27 Apr 2021
    தமிழக அரசு மின்சாரம் வழங்கவேண்டும்

    ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


  • 12:49 (IST) 27 Apr 2021
    மருத்துவ ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்

    தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை சில மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும், தாமிர ஆலைக்குள் செல்லக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.


  • 12:14 (IST) 27 Apr 2021
    ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி!

    தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்காட்டிருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்திருக்கிறது. தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் இந்த 5 நிபுணர்களை தேர்வு செய்யும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.


  • 11:59 (IST) 27 Apr 2021
    அரசியல் சண்டைகள் இருக்கக் கூடாது; ஸ்டெர்லைட் வழக்கில் நீதிபதி காட்டம்!

    ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பது தொடர்பாக வழக்கு விசாரணையில், தமிழக அரசு, மத்திய அரசு, வேதாந்தா நிறுவனம் என முத்தரப்பு வாதத்தையும் கேட்ட பின், அரசியல் சண்டைகளை தவிர்க்க நீதிபதி டி.ஒய்.சந்திரசேகர் முத்தரப்பையும் கேட்டுக் கொண்டார். பின், நாடு ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும் போது, நாட்டை நாம் ஆதரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


  • 11:53 (IST) 27 Apr 2021
    இந்திய விமானங்கள் வர தடை!

    இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் வர வரும் 15-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.


  • 11:50 (IST) 27 Apr 2021
    கண்காணிப்புக் குழுவில் ஸ்டெர்லைட் பகுதி மக்கள் இருக்கக் கூடாது; வேதாந்தா வழக்கறிஞர் வாதம்

    தமிழக அரசின் கண்காணிப்பு குழுவில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமை பகுதியில் வாழும் மக்கள் இடம்பெறக்கூடாது என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறார்.


  • 11:50 (IST) 27 Apr 2021
    கண்காணிப்புக் குழுவில் ஸ்டெர்லைட் பகுதி மக்கள் இருக்கக் கூடாது; வேதாந்தா வழக்கறிஞர் வாதம்

    தமிழக அரசின் கண்காணிப்பு குழுவில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமை பகுதியில் வாழும் மக்கள் இடம்பெறக்கூடாது என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறார்.


  • 11:41 (IST) 27 Apr 2021
    ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய அரசுக்கு தரப்பட வேண்டும்!

    ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பது தொடர்பான வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படவுள்ள ஆக்சிஜனை எங்களுக்குதான் தர வேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்து வருகிறது.


  • 11:39 (IST) 27 Apr 2021
    55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டம் ரத்து!

    55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது என, ஊரக வளர்ச்சி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 11:31 (IST) 27 Apr 2021
    ஸ்டெர்லைட் வழக்கு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

    ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தியை காரணமாக வைத்து, ஆலையில் வேறு எந்த அலகையும் இயக்கக் கூடாது என தமிழக அரசு சார்பில் வாதம் செய்து வருகிறது.


  • 11:20 (IST) 27 Apr 2021
    டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு!

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை மனுவாக தாக்கல் செய்தால், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.


  • 11:05 (IST) 27 Apr 2021
    ஞாயிறு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் குறைவு!

    ஞாயிறு பொது முடக்கத்தால் கொரோனா பரவலின் வேகம் குறைந்திருப்பதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். மேலும், மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டு கொண்டுள்ளார்.


  • 10:36 (IST) 27 Apr 2021
    வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை; இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகளுக்கு பின், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வருகிற மே 2-ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


  • 10:25 (IST) 27 Apr 2021
    இந்தியாவில் கொரோனா; உலக சுகாதார அமைப்பு வேதனை!

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் நெஞ்சை உலுக்குவதாக உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.


  • 10:22 (IST) 27 Apr 2021
    2,771 பேர் நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 2,771 பேர் உயிரிழந்துள்ளனர்.


  • 10:16 (IST) 27 Apr 2021
    உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

    ஸ்டெர்லை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எட்டப்பட்ட பின், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.


Live Updates Tamilnadu Live News Udpate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment