Advertisment

News Highlights: இன்று தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல்; அரசு உத்தரவு

தமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

author-image
WebDesk
New Update
News Highlights: இன்று தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல்; அரசு உத்தரவு

Today Tamil News Live : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு :

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வர, இரவு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நாள்களில், தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து, வாடகை ஆட்டோ, கார் மற்றும் தனியார் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.

ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் கூடும் இடங்களான, இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என, தமிழக அரசு எச்சரித்துள்ளது.

20 லட்சம் தடுப்பூசிகளை வழங்க தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் :

தமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார். மேலும், ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கப்படும் மாநிலங்களில் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் 4000-ஐ நெருக்கும் கொரோனா பாதிப்பு :

தமிழகத்தில் நேற்று 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,395 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில், நேற்று ஒரு நாளில் மட்டும், 3842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு உதவ விருப்பம் தெரிவித்த உலக நாடுகள் :

கொரோனா தொற்றின் மையமாக உருவெடுத்துள்ள இந்தியாவில், ஆக்சிஜன், ரெமிடிசிவர் போன்ற கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பல நோயாளிகள் சிகிச்சைப் பெறாமலேயே உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் இந்திய அரசுக்கும், மக்களுக்கும், சீன அரசு உறுதியான ஆதரவு வழங்க தயாராகவே உள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் மிகக்கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு எந்த வகையில் உதவலாம் என ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை :

சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 92.43 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 20:03 (IST) 24 Apr 2021
    ஞாயிறு முழு ஊரடங்கில் தேவையின்றி வெளியே சுற்றுவோர்களின் வாகனம் பறிமுதல்

    ஞாயிறு முழு ஊரடங்கில் தேவையின்றி வெளியே சுற்றுவோர்களின் வாகனம் பறிமுதல் என தமிழக போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. இருப்பினும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருபவர்களுக்கு அனுமதி உண்டு.


  • 20:03 (IST) 24 Apr 2021
    ஞாயிறு முழு ஊரடங்கில் தேவையின்றி வெளியே சுற்றுவோர்களின் வாகனம் பறிமுதல்

    ஞாயிறு முழு ஊரடங்கில் தேவையின்றி வெளியே சுற்றுவோர்களின் வாகனம் பறிமுதல் என தமிழக போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. இருப்பினும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருபவர்களுக்கு அனுமதி உண்டு.


  • 19:13 (IST) 24 Apr 2021
    ஆக்ஸிஜன் உதவி தேவை - டெல்லி முதல்வர்

    ஆக்சிஜன் இருப்பு அதிக அளவில் இருந்தால் உதவுமாறு டெல்லி அரசு பிற மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.


  • 18:18 (IST) 24 Apr 2021
    வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

    மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.
    உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.


  • 18:14 (IST) 24 Apr 2021
    26 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் - தமிழக அரசு அறிவிப்பு

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், பார்கள் இயங்க அனுமதி இல்லை


  • 17:53 (IST) 24 Apr 2021
    புதிய தேசிய கல்விக்கொள்கை தமிழில் மொழிபெயர்ப்பு இல்லை

    பெங்காலி, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 17 வட்டார மொழிகளில் புதிய தேசிய கல்விக்கொள்கை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய தேசிய கல்விக்கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ்மொழி இடம்பெறவில்லை


  • 17:28 (IST) 24 Apr 2021
    சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

    சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்காக நாளை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. உரிய அடையாள அட்டையுடன், முகக்கவசம் அணிந்து பயணிக்க தூய்மை பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற பயணிகளுக்கு நாளை அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.


  • 17:09 (IST) 24 Apr 2021
    ஆக்ஸிஜன் விநியோகத்தை தடுத்தால் தூக்கு - டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    ஆக்ஸிஜன் விநியோகத்தை தடுத்தால் அந்த நபரை தூக்கிலிடுவோம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.


  • 16:41 (IST) 24 Apr 2021
    டெல்லி எய்ம்ஸ் ஐசியூ மீண்டும் செயல்பட தொடங்கியது

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூடப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆக்சிஜன் விநியோகம் அதிகரித்ததால் ஆக்சிஜன் குழாய் இணைப்புகள் மறுசீரமைக்கப்பட்டது.


  • 16:07 (IST) 24 Apr 2021
    ஆக்சிஜன் பிரச்சனைகளுக்கு 104ஐ அழைக்கலாம்

    மருத்துவமனை, நர்ஸிங் ஹோம்களில் ஆக்சிஜன் தொடர்பான சிக்கல்கள் இருந்தால் 104 என்ற எண்ணில் அழைக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


  • 15:33 (IST) 24 Apr 2021
    ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி வரி ரத்து

    ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியையும் ரத்து செய்தது மத்திய அரசு


  • 14:27 (IST) 24 Apr 2021
    தமிழகத்தில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு?

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது தமிழகத்தில், இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பகல் நேரத்திலும் ஊரடங்கு அமல்படுத்த திட்டம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


  • 13:40 (IST) 24 Apr 2021
    நிலைமை மேலும் மோசமாகும் - மத்திய அரசு எச்சரிக்கை

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிர மடைந்து வரும் நிலையில் வரும் வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்றும், வரும் காலங்களில் மிக மோசமான சூழலை எதிர்கொள்ள முழு அளவில் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.


  • 13:02 (IST) 24 Apr 2021
    ஆக்ஸிஜன் தராவிடில் நிலைமை மோசமாகிவிடும்

    480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மத்திய அரசு தர வேண்டும். இல்லையென்றால் டெல்லியில் நிலைமை முற்றிலும் மோசமாகிவிடும். ஆக்ஸிஜன் வழங்குவதற்கான உறுதியை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என்று ஆக்ஸிஜன் தட்டுப்பாடு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் டெல்லி அரசு சார்பில் தகவல்


  • 12:23 (IST) 24 Apr 2021
    என்.வி. ரமணா பதவியேற்பு

    உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பதவியேற்பு. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


  • 11:56 (IST) 24 Apr 2021
    வார இறுதிகளிலும் ஊரடங்கு

    தமிழகத்தில் முழு ஊரடங்கை வெள்ளி மாலை முதல் திங்கள் கிழமை காலை வரை நீட்டிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகங்களில் பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வாய்ப்பு உள்ளதாக அறிவுக்கப்பட்டுள்ளது.


  • 11:46 (IST) 24 Apr 2021
    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகள்

    பிரதமர் மோடியுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இன்று மாலை தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட உள்ளதாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.


  • 11:44 (IST) 24 Apr 2021
    ஆக்ஸிஜன் பற்றாக்குறை - இன்னும் சற்று நேரத்தில் டெல்லி உச்ச நீதிமன்றம் விசாரணை

    டெல்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி நீதிமன்றம் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்க உள்ளனர். நீதிபதிகள் விபின் மற்றும் ரேகா அமர்வு இதனை விசாரிக்க உள்ளது.



    Delhi High Court to hear another plea concerning oxygenshortage by another hospital.

    Justices Vipin Sanghi and Rekha Palli on the Bench.

    Hearing to begin shortly. delhihighcourt delhicovid oxygencrisis pic.twitter.com/PwWAWDy6y6
    — Bar & Bench (@barandbench) April 24, 2021

  • 10:58 (IST) 24 Apr 2021
    மத்திய அரசின் தடுப்பூசி கொள்முதல் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்!

    கொரோனா தடுப்பூசிகளின் விலையை சீரம் நிறுவனம் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஒரு டோஸ் தடுப்பூசி மருந்தை இந்திய அரசு 150 ரூபாய்கு கொள்முதல் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கம் என தெரிவித்துள்ளது.


  • 10:34 (IST) 24 Apr 2021
    ஆக்சிஜன் இன்றி தவிக்கும் 200 கொரோனா நோயாளிகள்; டெல்லி சோகம்

    ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில், 200-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி தவித்து வருவதாகவும், அடுத்த அரை மணிநேரத்திற்கே ஆக்சிஜன் போதுமானதாக இருக்கும் எனவும், நேற்றைய இரவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 உயிர்களை இழந்து விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


  • 10:32 (IST) 24 Apr 2021
    முழு ஊரடங்கு எதிரொலி; இறைச்சி, மீன் வாங்க குவியும் மக்கள்!

    தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இறைச்சி, மீன் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளி இன்றி வாங்கிச் செல்கின்றனர்.


  • 10:22 (IST) 24 Apr 2021
    இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா இறப்பு!

    இந்தியாவில் இதுவரையில், 1,66,10,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 1,38,67,997 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரையில், கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,89,544 - ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 25,52,940 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரையில், 13,83,79,83 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


  • 10:19 (IST) 24 Apr 2021
    இந்தியாவில் மூன்றரை லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், கொரோனா தொற்றுக்கு 2,624 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


  • 10:09 (IST) 24 Apr 2021
    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார் என்.வி.ரமணா!

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான போப்டேனின் பதவிக்காலம் நிறைடைந்துள்ள நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பொறுப்பேற்கிறார்.


  • 10:05 (IST) 24 Apr 2021
    இந்தியாவுக்கு உதவ பாகிஸ்தான் தயார்; தொண்டு நிறுவனம் பிரதமர் மோடிக்கு கடிதம்

    இந்தியாவில் கொரோனா தொற்றால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான EDHI அமைப்பு, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அந்த கடிதத்தில், இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம். இந்தியாவில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை நிலவுவதால், தொண்டு நிறுவனத்தின் 50 ஆம்புலன்ஸ்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க, எல்லைகளை திறங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த செய்தி ட்விட்டரில் pakistanstandswithindia என்றே ஹேஷ்டாக் மூலம் ட்ரண்டாகி வருகிறது.


  • 09:52 (IST) 24 Apr 2021
    பக்தர்களின்றி மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம்!

    சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக, மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். பல லட்சம் பக்தர்கள் கூடும் திருக்கல்யாண நிகழ்வு, கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது. பக்தர்கள் ஆன்லைனில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


  • 09:48 (IST) 24 Apr 2021
    இந்தியாவுக்கு உதவ தயார்; பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

    கொரோனா தொற்று மையமாக உருவெடுத்துள்ள இந்தியாவுக்கு எந்த வகையிலாவது உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.


  • 09:47 (IST) 24 Apr 2021
    ஆக்சிஜன் தயாரிக்கும் வசதி இல்லை; சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை

    சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் தயாரிக்கும் வசதி இல்லை என மருத்துவமனை டீன் தேரணிராஜன் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் நிறுவனத்திடம் இருந்தே ஆக்சிஜன் கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  • 09:45 (IST) 24 Apr 2021
    ஆக்சிஜன் சிறப்பு ரயில்; மத்திய அரசு அதிரடி

    இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிதீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறைய போக்க, மத்திய அரசு சிறப்பு ஆக்சிஜன் ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில், இரண்டாவது ஆக்சிஜன் ரயிலானது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து லக்னோ சென்றடைந்துள்ளது.


Ops Eps Coronavirus Stalin Lockdown Modi Covaxin And Covishield
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment