Advertisment

News Highlights: எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு; ஓ.பி.எஸ்-ஐ வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்ற இ.பி.எஸ்

முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
News Highlights: எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு; ஓ.பி.எஸ்-ஐ வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்ற இ.பி.எஸ்

Tamil News Today Live : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

இன்று முதல் முழு ஊரடங்கு :

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கான கொரோனா தொற்று எண்ணிக்கை 28000-ஐ கடந்த நிலையில், தொற்றை கட்டுப்படுத்த இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை அடுத்து, ஊரடங்கு இன்று காலை 4 மணி முதல் அமலாகி உள்ளது. காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பார்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2000 :

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கொரோனா நிவாரண நிதி, இன்று தொடங்கி முதல் தவணையாக ரூ.2000 ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. மாவட்ட வாரியாக அமைச்சர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர். தினமும் 200 பேர் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

சபாநாயகர் யார் ?

பேரவை சபாநாயகருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், சபாநாயகர் யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. 1996-ம் ஆண்டு முதல் ராதாபுரம் தொகுதியில் தொடர் வெற்றிப் பெற்ற அப்பாவு சட்டப்பேரவை சபாநாயகராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துணை சபாநாயகர் பதவிக்கு கீழ்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெறிச்சோடிய சென்னை :

இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும், 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும், 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினரும் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னையின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 20:38 (IST) 10 May 2021
    எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


  • 20:21 (IST) 10 May 2021
    சட்டப்பேரவை தலைவர் தேர்தலில் திமுக சார்பில் மு.அப்பாவு போட்டியிடுவார் - திமுக தலைமை

    சட்டப்பேரவை தலைவர் தேர்தலில் திமுக சார்பில் மு.அப்பாவு போட்டியிடுவார் எனவும் சட்டப்பேரவை துணைத் தலைவர் தேர்தலில் திமுக சார்பில் கு.பிச்சாண்டி போட்டியிடுவார் எனவும் திமுக தலைமை அறிவித்துள்ளது. நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது


  • 19:37 (IST) 10 May 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,978 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,978 பேருக்கு கொரோனா உறுதி

    இன்று ஒரே நாளில் 232 பேர் உயிரிழப்பு

    இதுவரை உயிரிழந்தவர்கள் 15880 எண்ணிக்கை ஆக உயர்வு


  • 19:34 (IST) 10 May 2021
    ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அனைத்து தேர்வுகளும் மே 25 முதல் நடத்தப்படும் - தமிழக அரசு

    ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அனைத்து தேர்வுகளும் மே 25 முதல் நடத்தப்படும் எனவும் ஆன்லைன் தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு. பிப்ரவரி மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு நடத்தப்படும். பிப்ரவரி 2021ல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வு நடத்த முடிவு . பிப்ரவரி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால் மீண்டும் தேர்வு எழுதலாம் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு


  • 18:55 (IST) 10 May 2021
    கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை

    மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பதவியேற்றவுடன் அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது


  • 18:13 (IST) 10 May 2021
    காரைக்கால் அரசு மருத்துவமனையில் 13 கொரோனா நோயாளிகள் பலி

    காரைக்கால் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 13 கொரோனா நோயாளிகள் பலி.

    நேற்று மாலை முதல் இன்று மாலை வரை 24 மணி நேரத்தில் 13 பேர் பலியான சோகம்.

    மருத்துவர்கள் பற்றாக்குறையே மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு


  • 18:04 (IST) 10 May 2021
    பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதல்வர் ஆலோசனை

    பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் பாரதியார், பாரதிதாசன், அன்னை தெரசா, திருவள்ளுவர் பல்கலை. உள்ளிட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளனர். ஆன்லைன் வகுப்புகள், அரியர்ஸ் தேர்வுகள் குளறுபடி குறித்து ஆலோசனை நடப்பதாக தகவல்


  • 17:58 (IST) 10 May 2021
    கொரோனா 3வது அலைக்கு தயாராகி வருகிறோம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளரிகளிடம் பேசுகையில், டெல்லியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அடிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 3வது அலையில் 30,000 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள போதிய கட்டமைப்புகளை செய்து வருகிறோம்” என்று கூறினார்.


  • 17:55 (IST) 10 May 2021
    இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவி மரணம்; நடிகர் சிம்பு இரங்கல்

    இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயுமான மணிமேகலை உயிரிழப்பிற்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.


  • 17:00 (IST) 10 May 2021
    ஆக்சிஜன் தயாரிக்க சாத்தியமுள்ள தொழிற்சாலைகளை கண்டறிந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை - தங்கம் தென்னரசு

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் ஆக்சிஜன் தொழிற்சாலையை தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.

    தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள தொழிற்சாலைகளை கண்டறிந்து, அங்கெல்லாம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.


  • 16:52 (IST) 10 May 2021
    மே 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

    செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, “கொரோனா நிவாரணமாக ரூ.2,000 வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு ரூ.2,000 வழங்கும் பணியை கூட்டுறவுத் துறை சிறப்பாக செய்து முடிக்கும். மே 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு ரேஷன் கடையில் 200 பேருக்கு வழங்கப்படும்” என்று கூறினார்.


  • 16:24 (IST) 10 May 2021
    மே 11ம் தேதி காலை 10 மணிக்கு பேரவைக் கூட்டம்; தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி அறிவிப்பு

    மே 11ம் தேதி காலை 10 மணிக்கு பேரவைக் கூட்டம் தொடங்கும் என தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்ட் அறிவித்துள்ளார்.


  • 16:16 (IST) 10 May 2021
    அதிமுக ராஜ்ய சபா எம்.பி பதவியில் இருந்து கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில், வேப்பனஹல்லியில் கே.பி.முனுசாமியும், ஒரத்தநாட்டில் வைத்திலிங்கமும் வெற்றி பெற்றதையடுத்து, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் தங்கள் ராஜ்ய சபா எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர்.


  • 16:13 (IST) 10 May 2021
    தமிழகத்துக்கு ஆக்சிஜன் தடுப்பூசி சப்ளைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்

    உத்தரவிட்டுள்ளது. மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.


  • 16:10 (IST) 10 May 2021
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

    தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.


  • 15:43 (IST) 10 May 2021
    நாளை எம்எல்ஏக்களுக்கு பதவி ஏற்பு விழா -கு.பிச்சாண்டி

    நாளை எம்எல்ஏக்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் தற்காலிக சபாநாயகராக என் பணியை திறம்பட செய்வேன் எனவும் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார்.


  • 15:21 (IST) 10 May 2021
    காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

    காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்ய நடைபெற இருந்த தேர்தல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 15:19 (IST) 10 May 2021
    காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

    காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்ய நடைபெற இருந்த தேர்தல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 15:15 (IST) 10 May 2021
    தடுப்பூசி செலுத்திக் கொண்டார் விராட் கோலி

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.


  • 14:56 (IST) 10 May 2021
    காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஜூன் 23ஆம் தேதி தேர்வு

    காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஜூன் 23ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.


  • 14:50 (IST) 10 May 2021
    ஐபிஎல் - இந்தியாவில் நடத்துவது சிரமம்

    ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் கங்குலி இவ்வாறு கூறியுள்ளார்.


  • 14:49 (IST) 10 May 2021
    காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஜூன் 23ஆம் தேதி தேர்வு

    காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஜூன் 23ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.


  • 13:43 (IST) 10 May 2021
    ஆன்லைன் தேர்வில் குளறுபடி

    அண்ணா பல்கலை. ஆன்லைன் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி பிறகு முடிவு எடுக்கப்படும் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.


  • 13:15 (IST) 10 May 2021
    16வது சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகிறார் எடப்பாடி பழனிசாமி

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்விக்கான பதில் குறித்து அதிமுகவினர் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


  • 13:02 (IST) 10 May 2021
    ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை வழங்கிய சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள்

    ஆக்ஸிஜன் உற்பத்தி உபகரணங்களை சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் முதல்வர் முக ஸ்டாலினிடம் வழங்கினர். ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறையால் நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலைக்கான சிகிச்சையில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகள் பல உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது.


  • 12:59 (IST) 10 May 2021
    கங்கை அமரன் மனைவி மரணம்

    இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி அமரனின் தயார் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார்.


  • 12:46 (IST) 10 May 2021
    தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை

    தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை என்று மடஹ்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி அழைப்பில் கோரிக்கை. தமிழ்நாட்டில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் நுரையீரல் பாதித்தவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து அதிக அளவில் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.


  • 12:44 (IST) 10 May 2021
    தலைமை அலுவலகத்தில் குவிந்த காவல்த்துறையினர்

    இன்று எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை ராயப்பேட்டையில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அங்கு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


  • 12:39 (IST) 10 May 2021
    தலைமை அலுவலகத்தில் குவிந்த காவல்த்துறையினர்

    இன்று எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை ராயப்பேட்டையில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அங்கு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


  • 12:21 (IST) 10 May 2021
    கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் துவக்கம்

    நிவாரண உதவி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். 2.07 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவி திட்டம். முதல்வராக பொறுப்பேற்றவுடன் வெளியிடப்பட்ட முக்கியமான உத்தரவுகளில் குடும்பம் ஒன்றுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 என்பதை அறிவித்தார். அதன் முதல் தவணை இன்று தரப்படுகிறது.


  • 12:15 (IST) 10 May 2021
    எதிர்க்கட்சி தலைவர் யார்? ராயப்பேட்டையில் நடைபெற்று வரும் கூட்டம்

    அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று இது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படும் என்று தெரிய வந்துள்ளது.


  • 12:12 (IST) 10 May 2021
    சைக்கிள் வாங்கிக் கொடுத்ததற்கு நன்றி தாத்தா... ஸ்டாலினிடம் போனில் பேசிய சிறுவன்

    கொரோனா தடுப்பு பணிக்காக தான் சேமித்து வைத்திருந்த ரூ. 1000த்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார் அந்த சிறுவன். மேலும் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு வாழ்த்துகளும் கூறியுள்ளார் அவர். இதனை அறிந்த முக ஸ்டாலின் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் மூலம் ஹரீஷ்க்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார். சிறுவனிடம் தொலைபேசியில் பேசிய முக ஸ்டாலினிடம் சைக்கிள் வாங்கிக் கொடுத்ததற்கு நன்றி தாத்தா என்று ஹரீஷ் கூறியுள்ளார்.


  • 12:04 (IST) 10 May 2021
    கொரோனா வார்டில் ஆர்கெஸ்ட்ரா

    தஞ்சை மாவட்டம் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோவிட் நோயாளிகளுக்கு உற்சாகம் தரும் வகையில் ஜீவன் சுருதி என்ற ஆர்கெஸ்ட்ரா குழுவை சேர்ந்த பாடகர் ஃப்ராங்க்ளின் வாரம் ஒரு முறை அங்கே சென்று பாடல்களை பாடி வருகிறார்.


  • 11:54 (IST) 10 May 2021
    சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக 200 பேருந்துகள்!

    தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக 200 பேருந்துகள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


  • 11:50 (IST) 10 May 2021
    நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

    உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மன்சூர் அலிகான், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


  • 11:28 (IST) 10 May 2021
    இந்தியாவில் கொரோனா நிலவரம்!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,66,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 26 லட்சத்து 65 ஆயிரத்தி 575 ஆக அதிகரித்துள்ளது.


  • 11:20 (IST) 10 May 2021
    டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

    அடுத்த 14 நாட்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரே நாளில் ரூ. 428.69 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.


  • 11:18 (IST) 10 May 2021
    அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

    தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக 66 இடங்களில் வெற்றிப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. அதிமுக சார்பாக யார் எதிர்க்கட்சித் தலைவர் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்தான முடிவுகள் எட்டப்படாததால் இன்று மீண்டும் கூட்டம் நடைபெற உள்ளது.


  • 11:15 (IST) 10 May 2021
    தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி தேர்வு

    தற்காலிக சபாநாயகருக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்கள் பங்கேற்பு


  • 11:13 (IST) 10 May 2021
    தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா

    தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராசிபுரம் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

    ஆம், எனக்கு covid19 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னை நானே தனிமைபடுத்திக் கொண்டேன். என்மீது நீங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி! நலமுடன் இருக்கிறேன்.மீண்டு வருவேன்🙏
    — Dr. M. Mathiventhan MLA., (@MMathivendhan) May 10, 2021

Tamilnadu News Update Tamilnadu Covid Lockdown Tamilnadu News Latest Tamilnadu Covid 19 Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment