/indian-express-tamil/media/media_files/Gj96FBVcAkn14SuExpO8.jpg)
Tamil News- புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 535-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
தீபாவளி பண்டிகை: அரிசிக்கு பதில் பணம்.. புதுச்சேரி அரசு அதிரடி
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ.490 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 10 கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ சர்க்கரைக்கு பதிலாக வங்கிக்கணக்கில் ரூ.490 செலுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 3.37 லட்சம் பயனாளிகள் பயனளிக்கும் வகையில் ரூ.16.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை: சென்னை-நெல்லை வந்தே பாரத் சிறப்பு ரயில்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை-நெல்லை இடையே நவம்பர் 9ஆம் தேதி சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கும், நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கும் புறப்படும்.
ஓ.பி.சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி பாஜக: நரேந்திர மோடி
நாட்டிலேயே ஓ.பி.சி சமூகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி பாரதிய ஜனதா என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அப்போது, “2014ல் முதன் முதலில் ஓபிசி ஒருவர் பிரதமராக வந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் 27 ஓபிசி அமைச்சர்கள் உள்ளனர். பாஜகவுக்கு 85 ஓபிசி எம்.பி.க்களும்365 ஓபிசி சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்” என்றார்.
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ் : தமிழக அரசு
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. போனஸ் திட்டத்தின் கீழ் வராத தலைமை சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும். தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2400 கருணைத் தொகையாக வழங்கவும் உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, இதன் மூலம் 44,270 பணியாளர்களுக்கு ரூ.28 கோடியே ஒரு லட்ச ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
பட்டாசு வெடித்து சிறுவன் கைவிரல்கள் துண்டாகி விபத்து
மதுரை: உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு கை விரல்கள் துண்டாகி பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்
தீபாவளி பண்டிகை : சென்னை - நெல்லைக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை - நெல்லைக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் வரும் 9ம் தேதி காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கும், பிற்பகல் 3 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கும் இயக்கப்பட உள்ளது.
கொலிஜியம் பரிந்துரை; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை
கொலிஜியம் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரைகள் வழங்கியுள்ளது. பரிந்துரைகளில் சிலரை ஏற்பது, சிலரை நிராகரிப்பது, சிலரை கிடப்பில் வைப்பதை கைவிட அறிவுறுத்தியுள்ளது.
நெய்வேலி தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட்
கடலூர், நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்காத தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதாவை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். பிரியாணி கடை உரிமையாளர் கொல்லப்படுவார் என தகவல் கிடைத்த பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மீது புகார் எழுந்துள்ளது
மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
மணிப்பூரில் வன்முறைக்கு பிறகு அமைதி திரும்பிய பகுதிகளில் மொபைல் இணைய சேவை தடையை திரும்பப் பெற வேண்டும் என மாநில அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு; கவுதம சிகாமணி நேரில் ஆஜராக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கவுதம சிகாமணி நேரில் ஆஜராக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு எலும்பு முறிவு
வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஒருவரை தவறாக சித்தரித்து பதிவிட்டால் 3 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் - மத்திய அரசு எச்சரிக்கை
ஒருவரை தவறாக சித்தரித்து பதிவிட்டால், 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
வழக்கறிஞர் இன்பதுரை பேட்டி
ஏற்கனவே பல நீதிமன்றங்கள் உங்களது வாதங்களை ஏற்க மறுத்த பின், எப்படி அதிமுக கட்சி பெயரை பயன்படுத்துகிறீர்கள்? என நீதிபதியே ஓபிஎஸ் தரப்பை கேட்டார்- அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறித்து வழக்கறிஞர் இன்பதுரை பேட்டி
தமிழ்நாடு மக்களின் நலனில் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை
தமிழ்நாடு மக்களின் நலனில் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. மின் கட்டண உயர்வு, மீனவர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை. கடந்த 30 மாதங்களாக கலெக்ஷன், கமிஷன் ஆகியவற்றில் திமுக அரசு கவனம் செலுத்துகிறது- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
தமிழ்நாடு முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
தமிழ்நாடு முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு அனுமதி. விதிகளை மீறி செயல்படும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். சென்னையில் 890 கடைகளுக்கு மட்டும் அனுமதி- தீயணைப்புத்துறை
அதிமுக பெயர், கொடி, சின்னம்- ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்கால தடை
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடைக்கால தடை- எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை
தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் (13ம் தேதி) பொது விடுமுறை அளித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு
5 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இ.பி.எஸ்ஸுக்கு விலக்கு
பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விலக்கு- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலன் நியமனம். சாட்சியப்பதிவை ஒரு மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்ட மேத்யூ சாமுவேலுக்கு எதிராக ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கோரிய வழக்கு. எதிர்க்கட்சி தலைவருக்கான பாதுகாப்பு நடைமுறை, பொதுமக்களுக்கு சிரமம் ஆகிய காரணங்களால் நேரில் ஆஜராக இயலாது - ஈபிஎஸ்
பாஜக தாமரை சின்னத்திற்கு எதிரான மனு- நீதிமன்றம் கேள்வி
தேசிய மலரான தாமரையை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கியதில் விதிமீறல் உள்ளதா?- டிசம்பர் 8க்குள் விளக்கமளிக்க வழக்கு தொடர்ந்த ரமேஷ் என்பவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
விதிமீறலை நிரூபிக்காவிட்டால் கடும் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை. தேசிய மலரான தாமரையை அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி, ஒருமைபாட்டை இழிவுப்படுத்துவது என ரமேஷ் வழக்கு. தாமரை சின்னத்தை பாஜக-வுக்கு ஒதுக்க எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது - உயர் நீதிமன்றம் கேள்வி
மணப்பாறை சாமிநாதன் வீட்டில் சோதனை
திருச்சியில், தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் சோதனை
சோதனை நடத்திய அதிகாரிகள், விசாரணைக்காக குடும்பத்தினரை காரில் அழைத்துச் சென்றதாக தகவல்
பிரபல பைனான்சியரான மணப்பாறை சாமிநாதன், லட்சுமி காபித்தூள் ஏஜென்சியையும் நடத்தி வருகிறார்
காற்று, ஒலி மாசுவை தடுக்க நடவடிக்கை வேண்டும்
பட்டாசு வெடிப்பது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் - உச்சநீதிமன்றம்
காற்று, ஒலி மாசுவை தடுக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் - உச்சநீதிமன்றம்
மேம்படுத்தப்பட்ட ஃபார்முலாவை கொண்ட பேரியம், சரவெடிகளை தயாரிக்க அனுமதி கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிப்பு
பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி என உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளில் தலையிட விரும்பவில்லை- உச்ச நீதிமன்றம்
குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2,2 ஏ முதன்மை எழுத்து தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு 6,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு
தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைவு. ஒரு கிராம் தங்கம் ரூ.5,670க்கும், ஒரு சவரன் ₨45,360க்கும் விற்பனை.
வாக்குப்பதிவு நிலவரம்
காலை 9 மணி நிலவரப்படி சத்தீஸ்கரில் 9.93%, மிசோரத்தில் 12.80% வாக்குகள் பதிவாகி உள்ளது.
உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கவும் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல். உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கவும் உத்தரவு.
கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலையுலகில் பல சாதனைகள் படைக்கும் கலைஞானி கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து மநீம கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கான குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது
மிசோரம் மற்றும் சத்தீஸ்கருக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மிசோரம் சட்டப்பேரவை மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மிசோரமில் உள்ள 40 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், சத்தீஷ்கரில் 10 தொகுதிகளுக்கு காலை 7 முதல் 3 மணி வரையும், மீதமுள்ள தொகுதிகளுக்கு காலை 8 முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் காலை 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், தி.மலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பு.
அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓ. பன்னீர் செல்வம் பயன்படுத்துவதை எதிர்த்து இ.பி.எஸ் தாக்கல் செய்த இருந்த மனி மீது, ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் இன்று விசாரணை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.