/indian-express-tamil/media/media_files/b3XxyLZhzh04p0FMwxHI.jpg)
தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்புதல்: அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் புதிதாக 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னையில், மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொழில் நிறுவனங்களுக்கு தொகுப்பு சலுகைகள் வழங்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், “நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை, உலக முதலீட்டாளர் மாநாடு, கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம், வட கிழக்கு பருவமழை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் ரூ.2 கோடி காணிக்கை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தில் ₹2.24 கோடி பணம், 188 கிராம் தங்கம், 1.24 கிலோ வெள்ளி ஆகியவை பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.
என்.சங்கரையாவுக்கு கெளரவ டாக்டர் பட்டமளிக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க ஜே.ஏ.சி வலியுறுத்தல்
சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரையாவுக்கு கெளரவ டாக்டர் பட்டமளிக்கும் ஒப்புதலில் ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) அறிக்கை வெயிட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவம்பர் 1) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
195 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் - இந்து அறநிலையத்துறை
தொன்மையான 195 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
போதைப்பொருள் கடத்தல் வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க சிறப்பு அதிகாரியாக பெனாசீர் பாத்திமா நியமனம் செயபட்டுள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜமுந்திரி சிறையிலிருந்து சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுவிப்பு
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையிலிருந்து 53 நாட்களுக்குக் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். திறன் மேம்பாட்டுக்கழக முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கிய நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் சென்னை முதலிடம் - மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்
நாட்டிலேயே பெருநகரங்களில் நடக்கும் சாலை விபத்துகளில் குறைந்த உயிரிழப்புகள் பதிவாகி சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 2021-ம் ஆண்டு சென்னையில் 998 மரணங்கள் பதிவான நிலையில், 2022-ம் ஆண்டு இது 507 ஆக குறைந்துள்ளதாக மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
ரவுடி கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு
பாஜக அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு தாக்குதல் வழக்கில் ரவுடி கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஜாமின் பெற்ற வினோத், ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியுள்ளார் என மனுவில் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து கருக்கா வினோத் நவம்பர் 15ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
சனாதன விவகாரத்தை அரசியலாக்கும் அண்ணாமலை : உயர்நீதிமன்றத்தில் உதயநிதி வாதம்
சனாதன விவகாரத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலாக்குகிறார்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், அமைச்சர் உதயநிதி தரப்பில் வாதம்
அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு நவ. 3 வரை காவல் நீட்டிப்பு
பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் தகராறு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு நவ. 3 வரை காவல் நீட்டிப்பு
செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் : ராகுல்காந்தி கண்டனம்
பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வரும் பாஜக எதிர்கட்சிகளின் செல்போன் பேச்சை ஒட்டு கேட்கிறது என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
எம்.பி.பி.எஸ் காலியிடங்கள் : தமிழ்நாடு அரசே நிரப்ப அனுமதி கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
MBBS மாணவர் சேர்க்கை - அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் இருந்த 86 இடங்களுக்கு தமிழ்நாடு அரசே கலந்தாய்வு நடத்தி நிரப்ப முடிவு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அமைச்சர் மண்சுக் மாண்டவியாவிற்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு இன்று முதல் நவ. 7 வரை கலந்தாய்வு. மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நவ. 7 முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு. மாணவர்கள் http://tnmedicalselection.org என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு தேர்வுக்குழு செயலாளர் அருணலதா அறிவிப்பு
தண்டவாள பராமரிப்பு பணி : தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரயில் போக்குவரத்து மாற்றம்
சென்னை பரங்கிமலை - வேளச்சேரி ரயில் பாதை இணைப்பு பணி, தண்டவாள பராமரிப்பு பணிகளால் 3 நாட்களுக்கு ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் 3 நாட்களுக்கு "மங்களூர் எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்,மன்னை எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்" வரும் 3ஆம் தேதி வரை, தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இரவு 10.40 முதல் 11.55 வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மக்களின் உரிமைகளை பறிக்கிறார் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் விலக்கு மசோதா, சிறைக்கைதிகள் விடுதலை, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் உள்ளிட்டவற்றில் எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. "முக்கியமான விவகாரங்களில் ஆளுநர் உடனுக்குடன் முடிவு எடுப்பதில்லை, தனது அதிகாரத்தையும் பொறுப்பையும் ஆளுநர் ஆர்.என்.ரவி துஷ்பிரயோகம் செய்கிறார் பல்வேறு விஷயங்களில் செயலற்றவராக இருப்பதன் மூலம் மக்களின் உரிமைகளை ஆளுநர் பறித்து வருகிறார் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
லியோ வெற்றிவிழா: ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் தேவை
லியோ திரைப்பட வெற்றிவிழா நிகழ்ச்சியில் பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை. பாஸ் உடன் ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு/ரசிகர்கள் நாளை மாலை 4 மணி முதல் அனுமதி.
லியோ வெற்றி விழா நாளை மாலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது விழாவிற்கு வரும் ரசிகர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை
போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை - காவல்துறை
நவ.3-ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நவம்பர் 3-ம் தேதி கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெறும்.
தீபாவளிக்குப் பின் பொதுத் தேர்வு அட்டவணை
தீபாவளிக்குப் பின் பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஜே.இ.இ, நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும். ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்-அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தீபாவளி: அரசு பேருந்துகளில் இதுவரை 70,000 பேர் முன்பதிவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்
சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் 46 ஆயிரம் பேர் முன்பதிவு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 5.90 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்ப்பு
காவிரி விவகாரம்: துரைமுருகன் குற்றச்சாட்டு
காவிரியில் 13 ஆயிரம் கன அடி நீர் திறக்க நாங்கள் கோரிக்கை வைத்தோம். உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஏதோ எதிரி நாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள்.
சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
தமிழகத்தில் புதிய தொழில் புரட்சி- ஸ்டாலின்
தமிழகத்தில் புதிய தொழில் புரட்சி. 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 9 டைடல் பார்க் அறிவிக்கப்படடு அதற்கான பணிகள் நடைபெறுகிறது.
30க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ளன. 2030க்குள் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது-
சென்னை பல்லாவரத்தில் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து உரை
ஆருத்ரா, ஹிஜாவு நிர்வாகிகளை பிடிக்க இன்டர்போல் தீவிரம்
பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் தலைமறைவான ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எஃப்,எஸ் நிர்வாகிகளை பிடிக்க இன்டர்போல் தீவிரம்
ஆருத்ரா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆர்.கே.சுரேஷ், நிர்வாகிகளான ராஜசேகர், மகாலட்சுமி உள்ளிட்டோர் துபாயில் பதுங்கியிருப்பதாக தகவல்
வழக்கின் விவரங்களை மட்டுமே தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்டர்போல் அதிரடி
பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் வழக்கின் முக்கியத்துவம் குறித்த அறிக்கையை கேட்டது இன்டர்போல்
இன்டர்போல் அதிகாரிகள் 2 முறை துபாய் நாட்டிடம் உதவி கேட்ட நிலையில், விரைந்து கைது செய்ய அடுத்த கட்ட நடவடிக்கை
சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின்
சிறையில் உள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, 4 வாரம் இடைக்கால ஜாமின்-ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு
திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 9ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு. உடல்நிலை மற்றும் பார்வை கோளாறு இருப்பதால் சிகிச்சை பெற வேண்டும் என ஜாமின் கோரி மனு
ஜாமின் மனு மீது விசாரணை நடத்திய ஆந்திர உயர் நீதிமன்றம் 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு
மத்திய அமைச்சருடன் டி.ஆர். பாலு சந்திப்பு
மீனவர் பிரச்சனை- மத்திய இணை அமைச்சர் முரளிதரனை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.
மீனவர் பிரச்சனை - மீனவர்களை விடுதலை செய்வது, படகுகளை மீட்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதி. மீனவர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய இணை அமைச்சர் முரளிதரன் உறுதி
தான் பார்த்துக்கொள்வதாக மத்திய இணை அமைச்சர் முரளிதரன் கூறினார். தமிழக மீனவர்கள் கைது இனியும் தொடரக் கூடாது - மத்திய இணை அமைச்சரை சந்தித்த பின்னர் திமுக எம்.பி., டி.ஆர். பாலு செய்தியாளர் சந்திப்பு
மின்சார ரயில் சேவை நிறுத்தம்
சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் காலை 10.20 முதல் 2.45 மணி வரை ரத்து. தாம்பரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 9.08 மணி முதல் பகல் 3.20 வரை ரயில்கள் ரத்து
மின்சார ரயில்கள் நிறுத்தம் காரணமாக கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம். விம்கோ நகர் - விமான நிலையம் இடையே 6 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கம். ஆலந்தூர் - வண்ணாரப்பேட்டை இடையே 3 நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கம்
பரங்கிமலை ரயில் நிலையம் அருகே இரும்புப் பாலம் அமைக்கும் பணி காரணமாக மின்சார ரயில் சேவை நிறுத்தம்
ஒன்றிய இணையமைச்சரை சந்தித்து மீனவர்களை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை
ஒன்றிய இணையமைச்சரை சந்தித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க டி.ஆர்.பாலு வலியுறுத்தல். டெல்லியில் மத்திய அமைச்சர் முரளிதரண் உடன் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நேரில் சந்திப்பு. இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை. மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய அமைச்சரிடம் வழங்கினார் மத்திய அமைச்சருடனான சந்திப்பின்போது, மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்
டெட் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
டெட் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெற போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு டெட் பட்டதாரிகள் எதிர்ப்பு அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை அறிவித்தபடி பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு நாளை தொடங்குகிறது போட்டித் தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் - டெட் பட்டதாரிகள் சங்கம்.
கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் ராஜூ சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு
கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் ராஜூ சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொச்சி மாநகர போலீசார் வழக்குப்பதிவு குண்டு வெடிப்பு தொடர்பாக காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளை, சமூக வலைதளத்தில் ராஜூ சந்திரசேகர் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முந்தைய தினம், டொமினிக் தொலைபேசியில் யாருடனோ பேசியதாக அவரது மனைவி வாக்குமூலம் யாருடன் பேசுகிறீர்கள் என கேட்டதற்கு, டொமினிக் கோபப்பட்டதாகவும் அவரது மனைவி வாக்குமூலம்
வினாடிக்கு 2,600 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும்: காரிவி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை
காவிரியில் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2,600 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காரிவி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான 53 மின்சார ரயில்கள் இன்று ரத்து
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான 53 மின்சார ரயிலகள் இன்று ரத்து காலை முதல் இரவு வரை கூடுதல் ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்து வருவதற்கு எதிராக வழக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம்
இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான பூந்தோட்டம். அதை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது. முதலமைச்சராக மாநில உரிமை பற்றி பேசிய மோடி, பிரதமராகி மாநில உரிமைகளை பறிக்கிறார். மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது.: போட்காஸ்ட் மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.