Tamil News: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிர படுத்த அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொதுச் சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொழில்முறையில் தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையிலும் அமலாக்கத்துறை சோதனை
புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை. அவரது அலுவலகம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்சோதனை. துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் சோதனை. சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில் சோதனை என தகவல்.
6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
நீகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று கிரிக்கெட் போட்டியில், இந்தியா - இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை . இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு. ஆர். பிரேமதாச மைதானத்தில் மோதல்.
மொரோக்கோ நிலநடுக்கம். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2800ஐ கடந்தது.
“I Stay with AR Rahman sir” - நடிகர் கார்த்தி
கான்செர்ட்டில் நடந்தது அனைத்தும் துரதிஷ்டவசமானது. இருப்பினும் எனக்கு ரஹ்மான் சாரை தெரிந்த வரை அவரும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்.
என் குடும்பத்தினரும் அந்த கான்செர்ட்டில் பிரச்சனைகளுக்கிடையே கலந்து கொண்டனர் தான். இருப்பினும் ரஹ்மான் சாருக்கு துணையாய் நிற்கிறேன் நான். ரசிகர்களும் அவர் மீது அன்பை செலுத்தி வெறுப்பை ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பை ஏற்பார்கள் என நம்புகிறேன்- கார்த்தி
கிரேன் உடைந்து விழுந்து விபத்து- ஒருவர் பலி
தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் கிரேன் உடைந்து விழுந்து விபத்து. விபத்தில் கிரேன் ஆபரேட்டர் பாரத் பரிதாபமாக உயிரிழப்பு. பனமா நாட்டில் இருந்து வந்த கியானா கப்பலில் நிலக்கரி ஏற்றிய போது விபத்து. சோதனை செய்யாமல் நிலக்கரி ஏற்றுமதி செய்ததால் விபத்து என புகார் - போலீசார் விசாரணை
ஆற்று மணல் குவாரியில் சோதனை
திருச்சி மாவட்டம் கொண்டையம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில் சோதனை. துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை. புதுக்கோட்டை மாவட்ட தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை
செம்மண் குவாரியில் சோதனை
புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை அருகே செம்மண் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை. சண்முகம் என்பவருக்குச் சொந்தமான குவாரியில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை. அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் புகார்
மணல் சேமிப்பு கிடங்கில் சோதனை
நாமக்கல் மாவட்டம் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்க துறையினர் சோதனை. ஒருவந்தூர் ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் எடுத்து குமரிபாளையத்தில் உள்ள அரசு மணல் கிடங்கில் வைத்து ஆன்லைன் மூலம் மணல் விற்பனை
கூடுதல் விலைக்கு மணல் விற்பனை, ஆன்லைனின் முறைகேடாக பதிவு செய்து, வாகனங்களில் மணல் ஏற்றி விற்பனை என புகார்
புகைப்படத்தை காட்டி தேடுதல் வேட்டை
சென்னை, நுங்கம்பாக்கத்தில் வீடுகளில் ஆட்கள் இல்லாததால் அதிகாரிகளுக்கு சிரமம். புகைப்படத்தை காட்டி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள். வீராசாமி சாலை, குமரப்பா சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் தீவிர தேடுதல் வேட்டை.
'தமிழகத்திற்கு திறப்பதற்கு இனி தண்ணீர் இல்லை': டி.கே.சிவக்குமார் பேச்சு
கர்நாடக அணைகளில் இருந்து இனி தமிழகத்திற்கு திறப்பதற்கு தண்ணீர் இல்லை. இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு: வனத்துறை செயலர் சுப்ரியா சாகு ஆஜர்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வனத்துறை செயலர் சுப்ரியா சாகு ஆஜரான நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம். கல்வித்துறைக்கு அடுத்து வனத்துறையில் தான் அதிக நீதிமன்ற அவமதிப்பு தாக்கலாகின்றன' என்றார்.
திருச்சியை சேர்ந்த வனத்துறை காவலர் பணி உயர்வு கோரியது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது.
ஸ்டாலின் கான்வாய் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய விவகாரத்தில் விசாரணை
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால், முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய விவகாரத்தில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 ஐ.பி.எஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் தீபா சத்யன் மற்றும் சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டலும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை கிழக்கு துணை காவல் ஆணையராக ஆதர்ஷ் பச்சேரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லைகா நிறுவனம் வழக்கு: நடிகர் விஷால் ஆஜர்
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
விஷாலின் 4 வங்கி கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யவும், அசையும், அசையா சொத்து விவரங்களை, ஆவணங்களுடன் செப். 19ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற ஆண் பணியாளர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள ஆண் பணியாளர்களுக்கு கிரீம் வண்ண சட்டை,காக்கி வண்ண பேண்ட் என புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 18ஆம் தேதி சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சட்டை மற்றும் பேண்ட் இரண்டிலும் சிறிய அளவிலான தாமரை பூ டிசைன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்துவது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டெல்லியில் மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை (செப்டம்பர் 13) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ம் தேதி தொடங்கவுள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னையில் கனிம வளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணல் குவாரி முறைகேடு தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், கனிம வளத்துறை அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது.
சந்திரபாபுவுக்கு வீட்டு காவல் கோரிய மனு நிராகரிப்பு
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சிறைக்கு பதில் வீட்டுக் காவலில் வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விஜயவாடா நிராகரித்தது. திறன்மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 371 கோடி முறைகேடு வழக்கில் கைதான சந்திரபாபு, ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
வடகிழக்கு பருவமழை: பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை 24 வகை அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை 24 வகையான அறிவுறுத்தல்களை பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் ஏரி, குளங்களில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க கூடாது என தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும், மாணவர்கள் மிதிவண்டியில் வரும்போது பாதுகாப்பாக வர அறிவுறுத்த வேண்டும். மாணவர்களின் உடைமைகள் மழையில் நனையாமல் இருக்க மழைக் கோட்டுகள் அல்லது குடைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 24 வகையான அறிவுறுத்தல்களை பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
விநாயகர் சதூர்த்தி: சிலைகள் கரைப்பதைக் கண்காணிக்க குழு அமைப்பு
விநாயகர் சதுர்த்தியின் போது மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல் படியே சிலைகள் முறையாக கரைக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தமிழ்நாடு வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலங்கள், ஆறுகள், முகத்துவாரங்கள், ஏரிகள் போன்றவற்றில் சிலைகள் கரைக்கப்படுவதை தவிர்க்க உத்தரவிட்டுள்ளது.
டெல்லி-ராமேஸ்வரம் புனித பயணம்: கெஜ்ரிவால் தொடங்கிவைத்தார்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மூத்தக் குடிமக்கள் பயன்பெறும்வகையில் முக்கிய மந்திரி தீர்த்த யாத்ரா திட்டத்தின் கீழ் புனித பயண திட்டத்தை அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் இன்று 780 மூத்தக் குடிமக்கள் டெல்லியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனித பயணம் வந்தனர். இந்தப் பயணத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிவைத்தார்.
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அறிவிப்பு
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் செப்.26ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில் அடுத்த 15 நாள்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்க பரிந்துரைக்கப்பட்டது.
நாகப்பட்டினம் பட்டாசு ஆலையில் விபத்து: உரிமையாளர் உயிரிழப்பு
நாகப்பட்டினம் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
பட்டாசு தயாரிக்க வெடி மருந்து இடித்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக ஐவர் நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள், நீதிபதிகள் ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன் மற்றும் கபாலி குமரேஷ் பாபு ஆகியோர் ஆவார்கள். இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சிறுத்தை நடமாட்டம் – வேலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஊனை மோட்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. எனவே இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்
ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரம்; விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அனுபவமில்லாத மாணவர்களை தன்னார்வலர்களாக நியமித்தே குளறுபடிக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
விளக்கங்களை அறிக்கையாக அளிக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.