Advertisment

Tamil News highlights: சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இன்று நடைபெறும் செய்திகளை, இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil news

Tamil news live

Petrol and Diesel Priceசென்னையில் பெட்ரோல்டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும்டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 45 வேட்பாளர்கள் அடங்கிய 2ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

எல்பி நகரில் மது கவுடும், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் முகம்மது அசாருதீனும், செகந்திராபாத் கேன்ட் பட்டியலின தனி தொகுதியில் ஜி.வி. வெண்ணிலாவும், அம்பர்பேட்டில் ரோகிணி ரெட்டியும், வாராங்கல் கிழக்கில் நைனி ராஜேந்தர் ரெட்டியும், கம்மத்தில் தும்லா நாகேஷ்வர ராவ்வும் போட்டியிடுகின்றனர்.

ஹேக் செய்யப்பட்ட முதல்வன் ஓபிஎஸ் பக்கம்: பின்னணியில் யார்?

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் முதல்வன் ஓபிஎஸ் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹேக் செய்தவர்கள் அந்த முகநூல் பக்கத்தில் தொடர்ந்து தவறுதலாக செய்திகள், காணொலிகளை பதிவேற்றம் செய்துவருவதாகவும், பக்கத்தை மீட்க தொழில்நுட்ப குழுவினர் முயன்று வருவதாகவும்” தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

நவ.1 டீசர்.. தங்கலான் ஜன.26 வெளியீடு

பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தின் டீசர் நவம்பர் 1ஆம் தேதி வெளியாகிறது. இந்தத் திரைப்படம் ஜன.26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

நீட் விலக்கு: குடியரசுத் தலைவரிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என குடியரசுத் தலைவர் தரௌபதி முர்முவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்: முதலமைச்சர் பூபேஷ் பாகல்

“சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை தொடரும். கடந்த சட்டமன்ற தேர்தலில் 68 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இம்முறை 75 இடங்களை கைப்பற்றுவோம்” என அம்மாநிலத்தின் முதல் அமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

குமரி நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வரும் 30ம் தேதி கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்

தூத்துக்குடி மீனவர்கள் மாலத்தீவில் கைது

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மாலத்தீவு நாட்டின் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது

ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது - பரபரப்பு வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஆதாரத்துடன் தமிழ்நாடு காவல்துறை மறுப்பு

கும்பலாக வந்து ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டதாக கூறியது பொய்.

ஆளுநர் மாளிகை நுழைவாயில் எரித்து சேதப்படுத்தப்பட்டது என கூறியது பொய்

ராஜ்பவன் ஊழியர்கள் கருக்கா வினோத்தை பிடித்ததாக கூறியது பொய்.

தருமபுரம் சென்றபோது, கற்களாலும், தடியாலும் தாக்கப்பட்டதாக ஆளுநர் கூறியது பொய்- கிரெடிட் சன்நியூஸ் ட்வீட்டர்

கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமர் பிரசாத் ரெட்டிக்கு, நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவல்

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவல்

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அரசு விளம்பரத்தில் பிரதமர் படத்தை ஒட்டியது தொடர்பான் வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

நீட் விலக்கு மசோதா- ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும்- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாநகரத்தின் முதல்முறை

திருநெல்வேலி மாநகரத்தின் முதல் பெண் காவல்துறை ஆணையாளராக பதவியேற்றுக் கொண்டார் மகேஸ்வரி ஐபிஎஸ்

100 நாள் வேலை திட்டம்- ஸ்டாலின் வலியுறுத்தல்

100 நாள் வேலை திட்டத்தில் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ₹2697 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க, மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இ.பி.எஸ் மனுத்தாக்கல்

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி, எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக ஆளுநர் தொடர்ந்து புருடா விட்டு வருகிறார்- மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நான் கேட்டுக் கொள்வது, தமிழ்நாட்டில் ஆளுநராக இருப்பவரை என்றைக்கும் மாற்றிவிட வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் வரையாவது அவர் இருக்கட்டும். அவர் இருந்தால் எங்களுக்கு பல சவுகரியம், கடந்த 2 நாட்களாக ஆளுநர் தொடர்ந்து புருடா விட்டு வருகிறார். ஆனால் மக்கள் அவர் சொல்வதை பொருட்படுத்தவில்லை.

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்

மொத்த வாக்காளர்கள் - 6.11 கோடி

ஆண் வாக்காளர்கள் - 3 கோடி

பெண் வாக்காளர்கள் - 3.10 கோடி

மூன்றாம் பாலினத்தவர்கள் - 8,016

புதிய வாக்காளர்கள் - 3.94 லட்சம்

ஆண்கள் - 2.18 லட்சம்

பெண்கள் - 1.75 லட்சம்

17 வயதிற்கு மேல் இருப்பவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். நவம்பர் 4,5, 8,19 அன்று சிறப்பு முகாம்கள் நடைபெறும். டிசம்பர் 9-ம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யலாம். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5, 2024 வெளியிடப்படும்- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

தங்கம் விலை 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ஒரு கிராம் தங்கம் ரூ.5,705க்கும், ஒரு சவரன் ரூ.45,640க்கும் விற்பனை 

நாங்குநேரி சம்பவம் : பாதிக்கப்பட்ட சின்னதுரை மற்றும் சகோதரியை சந்தித்த அன்பில் மகேஷ்

 நாங்குநேரியில் சாதி எனும் நஞ்சால் பாதிக்கப்பட்டு, தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரையும், அவரின் சகோதரியையும் சந்தித்து ஆறுதல் கூறி எப்போதும் உடனிருப்போம் என உறுதியளித்தோம்" -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 

 மேற்கு வங்க அமைச்சர் அமலாக்கத்துறையால் கைது

மேற்கு வங்க மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக் அமலாக்கத்துறையால் கைது. உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது, ரேஷன் பொருட்களை வினியோகத்தில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரில் கைது .

 தங்கலான்' படத்தின் ரிலீஸ் தேதி: இன்று வெளியாகும் 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது

தக்காளி கிலோவுக்கு ரூ.10 உயர்வு

சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனையில் தக்காளி கிலோவுக்கு ரூ.10 உயர்வு. நேற்று ரூ.20க்கு விற்கப்பட்ட நிலையில் வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை. வெங்காயம் விலையும் கணிசமாக உயர்ந்து கிலோ ரூ.65க்கு விற்பனை.

 கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா

 கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை. அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு. சேலம் மாநகர காவல்துறை சார்பில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிப்பு

இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல்

ஜம்மு, அரினா செக்டார் அருகே இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல். பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதல், காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி

கருக்கா வினோத்தை ஜாமின் எடுத்த பாஜக நிர்வாகி

கருக்கா வினோத்தை ஜாமின் எடுத்த பாஜக நிர்வாகி.  கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தவரே பாஜக வழக்கறிஞர் தான் புகைப்பட ஆதாரத்துடன் எக்ஸ் தளத்தில் திமுக .டி.விங் பதிவு.

 நீர் நிலவரம்

புழல் ஏரியில் நீர்இருப்பு 2562 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 270 கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 576 மில்லியன் கனஅடியாக உள்ளது; 58 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 446 மில்லியன் கனஅடியாக உள்ளது.

 கருக்கா வினோத்தை ஜாமின் எடுத்த பாஜக நிர்வாகி

கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தவரே பாஜக வழக்கறிஞர் தான் புகைப்பட ஆதாரத்துடன் எக்ஸ் தளத்தில் திமுக .டி.விங் பதிவு. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment