Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு : ஓ.பி.எஸ். அணி தகவல்
பாஜக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு எடுப்போம். அக்டோபர் 11ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என சென்னையில் ஓபிஎஸ் உடன் நடந்த ஆலோசனைக்குப் பின், பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
டிடிஎஃப் வாசன் ஜாமின் கோரி மனு தாக்கல்
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் காஞ்சிபுரம் அருகே விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான நிலையில், ஜாமின் மனு தாக்கல்
தரங்கம்பாடி பட்டாசு ஆலை வெடி விபத்து : ஆளுனர் ஆர்.என.ரவி இரங்கல்
மயிலாடுதுறை தரங்கம்பாடி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்கள் பலியானதை அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளேன். துயர்மிகு இந்நேரத்தில் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். - ஆளுனர் ரவி
நிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு மாதாந்திர ஆய்வுக்கூட்டம் : முதல்வர் ஸ்டாலின்
காலை உணவுத் திட்டத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடத்திட வேண்டும் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நீங்கள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயரதிகாரிகள் மாநாட்டின் 2வது நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மல்யுத்த வீரர் கிரேட் காளி சந்தித்த ரோஹித் சர்மா
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற, உலக கோப்பை தொடருக்கான போட்டோஷூட்டின்போது, WWE மல்யுத்த வீரர் கிரேட் காளியை சந்தித்து கைக்குலுக்கினார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா!
சென்னையில் பொதுக்கூட்டம்: ஓ.பி.எஸ் முடிவு
சென்னையில் அக்.16ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த ஓ.பி.எஸ் திட்டமிட்டுள்ளார். முன்னதாக 11ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்திவருகிறார். இதில், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை: மனோ தங்கராஜ் அறிவிப்பு
அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது. தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ₨1 முதல் ₨2 வரை அதிகம் கிடைக்கும். தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ₨1 ஊக்கத்தொகை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.
மேலும், “பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி கர்ப்பமான நிலையில், அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (42), மாரி (52) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்-கை கைது செய்தது அமலாக்கத்துறை
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்தது. டெல்லி மதுபான விநியோக கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
ஆசிரியர்கள் போராட்டம்: பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை
ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனைபள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்டி வருகிறார். ஆலோசனைக்கு பிறகு, அமைச்சர் அன்பில் மகேஷ், மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
ரூ. 15 கோடி கேட்டு... ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஏ.ஆர்.ரஹ்மான் தங்கள் சங்கத்திடம் உடனடியாக நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும். நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் ரூ. 15 கோடி செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தரமற்ற உணவுகள் அழிப்பு; ரூ.10.27 லட்சம் அபராதம் - மா.சுப்பிரமணியன்
ரூ.12.56 கோடி மதிப்பிலான 191.1 டன் அளவுள்ள குட்கா, பான்மசாலா கடந்த 2 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உணவகங்களில் நடத்திய ஆய்வில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
வேதியியல் நோபல் பரிசு; அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்து அளிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மூங்கி பவண்டி, லூயிஸ் பூருஸ், அலெக்சி எகிமூவ் ஆகியோருக்கு குவாண்டம் தொடர்பான ஆராய்ச்சிக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை மாநகராட்சியில் ஃபேவர் பிளாக் சாலை அமைக்க முறையாக டெண்டர் விடப்பட்டதா? ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி
மதுரை மாநகராட்சியில் ஃபேவர் பிளாக் சாலை அமைக்க முறையாக டெண்டர் விடப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பணியை முடித்ததற்கான தொகையை வழங்க உத்தரவிடக் கோரி காண்டிராக்டர் பாண்டி தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான சமையல் சிலிண்டர் விலை மேலும் ரூ100 குறைப்பு
உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மேலும் ரூ.100 குறைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.200 ஆக இருந்த மானியத்தொகை ரூ.300 ஆக உயர்கிறது
'லியோ' ட்ரெய்லர் திரையிடும் விவகாரம்; காவல் ஆணையரை அணுக படக்குழுவிடம் கூறியதால் பரபரப்பு
சென்னை, கோயம்பேடு ரோஹினி திரையரங்க வாகன நிறுத்தம் பகுதியில் 'லியோ' ட்ரெய்லர் திரையிட காவல் ஆணையரை அணுகுமாறு படக்குழுவுக்கு கோயம்பேடு காவல்துறை அறிவுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக காவல் நிலையத்தில் அனுமதி பெறும் நிலையில், காவல் ஆணையரை அணுக கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி உத்தரவிட முடியாது; சென்னை ஐகோர்ட்
சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி உத்தரவிட முடியாது. எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே அரசுக்கு மனு அளித்துள்ளதால் அரசை நாட மனுதாரருக்கு அறிவுறுத்தல்களை வழங்கி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழ்நாடு சட்ட பாதுகாப்பு இயக்கம் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது
கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி- மூவருக்கு ஆயுள் தண்டனை
2004ம் ஆண்டு நெல்லையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் இறந்த நிலையில், மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 9 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது
மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வேலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை குண்டு வெடிப்பு- ஜாமின் மனு தள்ளுபடி
கோவை குண்டு வெடிப்பு விவகாரம், 16 குற்றவாளிகளின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு உத்தரவு
காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்
காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 12ம் தேதி நடைபெறும் என அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார்.
விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கர்நாடகா கோரிக்கை வைத்த நிலையில், பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறுகிறது.
எங்களுக்கு யாரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை
உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜெ.பி நட்டா, பிரதமர் மோடி என எங்களுக்கு யாரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை - இபிஎஸ்
அண்ணாமலையை மாற்ற நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை - இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி முறிவு என்பது ஏற்கனவே அறிவித்தது தான். அதிமுக நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. பல தொகுதிகளில் அதிமுக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தனர். மத்திய அமைச்சரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது தொகுதி பிரச்சினைக்காகவே"
பாஜகவுடன் கூட்டணி இல்லையென எடுக்கப்பட்ட முடிவில் அதிமுக உறுதி. 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். தொண்டர்களின் உணர்வுக்கு இணங்கவே பாஜகவுடன் கூட்டணி முறிவு- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க எல்.எல்.ஏக்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தொகுதி நலனுக்காகவே அ.தி.மு.க எல்.எல்.ஏக்கள் சந்தித்தனர். நிகழ்ச்சிகளுக்கு மத்திய அமைச்சர்கள் வரும்போது தி.மு.க அமைச்சர்கள் சந்திக்கிறார்கள். அது கூட்டணி என்று அர்த்தமா? நாங்கள் சந்தித்தால் உடனே கூட்டணி என்கிறீர்கள். தி.மு.க சந்தித்தால் அதைப் பற்றி பேசுவதில்லை- எடப்பாடி பழனிசாமி
பங்க் உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்
சென்னை, சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம். பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்
தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைவு ஒரு கிராம் தங்கம் ரூ. 5,285க்கும், ஒரு சவரன் ரூ. 42,280க்கும் விற்பனை
2வது நாள் மாநாடு - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை. அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு. சட்டம் ஒழுங்கு மற்றும் அரசு திட்டங்களின் நிலை குறித்து ஆலோசனை. காலை சிற்றுண்டி திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாகவும் ஆலோசனை. பொதுவான மற்றும் தனிநபர் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல். திட்டங்களை செயல்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது
தஞ்சை, கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி.பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 13 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. டெங்கு அறிகுறிகளுடன் மேலும் 51 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை. டெங்கு பாதிப்பு தொடர்ந்து உயர்வதால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைப்பு
சிக்கிம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம். வடக்கு சிக்கிம் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை. சிக்கிம் லச்சன் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு. வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்
தடகளத்தில் வெண்கல பதக்கம் வென்றது இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள். தடகளத்தில் வெண்கல பதக்கம் வென்றது இந்தியா. கலப்பு 35 கிலோ மீட்டர் ரேஸ் வாக் போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா
ஆசிய தடகளம் - ஆடவர் ஈட்டியெறிதல் இறுதி போட்டி இன்று மாலை 4.35 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்கும் நிலையில் தங்க பதக்கத்தை தக்கவைப்பார் என எதிர்பார்ப்பு
சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு - விமானங்கள் புறப்படுவதில் தாமதம். அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் அவதி. துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டன, அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் தாமதம்
பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை . கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
சையது முஸ்தாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு. வாஷிங்டன் சுந்தர் தலைமையிலான அணியில் சாய் சுதர்சன், ஜெகதீசன், விஜய் சங்கர், நடராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்!
தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் மாநில அரசின் உடந்தையுடன் அபகரிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் கோவில்கள் அபகரிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை அவர்கள் ஒருபோதும் தொடமாட்டார்கள் . தெலங்கானாவில் நடத்த பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு. ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து விட்டது - பிரதமர் மோடி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.