Advertisment

News Highlights: ஆக்சிஜன் பற்றாக்குறை :செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் மரணம்

மேற்கு வங்காள முதல்வராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி

author-image
WebDesk
New Update
News Highlights: செங்கல்பட்டை தொடர்ந்து திருப்பத்தூர்; ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் பலி

Today Tamil News Live : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 10 மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் :

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக 133 இடங்களில் வெற்றிப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முறைப்படி சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதன் பின், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

மே 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் :

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய சுகாதார மற்றும் உள்துறை அமைச்சகங்களின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மளிகை, காய்கறிக்கடைகள் நன்பகலுக்கு மேல் செயல்பட கூடாது என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சி, மீன் கடைகளுக்கு வார விடுமுறை நாள்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாரத்தின் எஞ்சிய நாள்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, நன்பகல் வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

20000-ஐ கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை :

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதி தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் 20,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 122 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 6,150 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 12 வயதிற்கு உள்பட்ட 48 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகள் :

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு ஆங்காங்கே தட்டுப்பாடுகள் நிலவும் சூழலில், 2.75 லட்சம் தடுப்பூசிகள் இன்று தமிழகம் வந்தடைய உள்ளது. அதில் ஒரு பகுதியாக, ஐதராபாத்தில் இருந்து, 75,000 கோகாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 20:28 (IST) 04 May 2021
    சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மரணம்

    சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.


  • 19:43 (IST) 04 May 2021
    சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு

    திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது சென்னை அறிவாலயத்தில் தொடஙகியது. இந்த கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்ககள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 7-ந் தேதி அவர் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.


  • 19:05 (IST) 04 May 2021
    அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

    திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது சென்னை அறிவாலயத்தில் தொடஙகியது. இந்த கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேல்முருகன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றுள்ளனர். இதில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடக்கப்படவுள்ளார்.


  • 19:04 (IST) 04 May 2021
    அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

    திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது சென்னை அறிவாலயத்தில் தொடஙகியது. இந்த கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேல்முருகன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றுள்ளனர். இதில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடக்கப்படவுள்ளார்.


  • 18:47 (IST) 04 May 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,49,292 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 144 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 6228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 18:20 (IST) 04 May 2021
    தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்து

    தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


  • 17:58 (IST) 04 May 2021
    அண்ணா அறிவாலயத்தில் தொடங்குகிறது திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

    இன்னும் சற்று நேரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்குகிறது.


  • 17:55 (IST) 04 May 2021
    அரசு மின் உற்பத்தி பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு - அரசானை வெளியீடு

    தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களைப் போல தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


  • 17:32 (IST) 04 May 2021
    கொரோனா நோய் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம் - ஸ்டாலின்

    முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா இரண்டாவது அலை முதல் அலையைவிட மோசமானதாக இருக்கிறது; பரவல் முதல் அலையைவிடக் கூடுதலாக உள்ளது. வடமாநிலங்களில் வரும் தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளன. கொரோனா நோய் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.


  • 17:14 (IST) 04 May 2021
    ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த கோவேக்சின்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் பயன்பாட்டிற்காக ஐதராபாத்தில் இருந்து 75 ஆயிரம் கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன


  • 17:13 (IST) 04 May 2021
    8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவித்துள்து. சிங்கங்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


  • 17:12 (IST) 04 May 2021
    தலைமைச்செயலாளர் ஆலோசனை

    தமிழகத்தில் புதிதா திமுக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், முதல்வரின் பதவியேற்பு விழா குறித்து தலைமை செயலாளர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 16:22 (IST) 04 May 2021
    அரசும் மக்களும் இணைந்து கொரோனாவை வெல்வோம் - ஸ்டாலின்

    நோய் பரவாமல் தடுத்தல் - தொற்றுக்குள்ளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எனக் கருதாமல் மக்கள் தங்களின் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும். என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


  • 16:19 (IST) 04 May 2021
    ஜே.இ.இ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சர்

    கொரோனா பரவல் காரணமாக ஜே.இ.இ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாத தேர்வு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மே மாத தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  • 16:05 (IST) 04 May 2021
    தமிழகத்தில் ஆட்சி அமைக்க நாளை ஆளுநரை சந்தித்து உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்

    சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க நாளை ஆளுநரை சந்தித்து உரிமை கோருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


  • 15:38 (IST) 04 May 2021
    படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருத்துவர்கள் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருத்துவர்கள் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்


  • 15:36 (IST) 04 May 2021
    2 லட்சம் கோவிஷீல்டு டோஸ் சென்னை வந்தடைந்தது

    மும்பையிலிருந்து விமானம் மூலம் 2 லட்சம் கோவிஷீல்டு டோஸ் கொரோனா தடுப்பு மருந்து சென்னை வந்தடைந்தது . தமிழகத்திற்கு இதுவரை 60.03 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் வந்துள்ளது.


  • 15:24 (IST) 04 May 2021
    அம்மா உணவகம் காப்போம்- டிரெண்டிங் ட்விட்டர் ஹேஷ்டேக்

    சென்னை மதுரவாயலில் உள்ள அம்மா உணவகத்தை திமுக தொண்டர்கள் இருவர் இன்று தாக்கினர். இதற்கு எதிர்வினையாக டுவிட்டரில் அம்மா உணவகம் காப்போம் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது


  • 14:36 (IST) 04 May 2021
    திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி

    ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்காகவும் - பாசிசத்தை வீழ்த்திடவும் உழைக்கும் வி.சி.க தலைவர் அண்ணன்

    அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

    ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்காகவும் -
    பாசிசத்தை வீழ்த்திடவும் உழைக்கும் வி.சி.க தலைவர் அண்ணன் @thirumaofficial அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் எனக்காக பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொண்டேன். pic.twitter.com/g4FpNu8JIi
    — Udhay (@Udhaystalin) May 4, 2021

  • 14:35 (IST) 04 May 2021
    திமுக வெற்றி காணிக்கையாக நாக்கை துண்டித்த பெண் தொண்டர்

    திமுக வெற்றி பெற்றதற்காக காணிக்கையாக நாக்கை துண்டித்துக் கொண்டார் பெண் தொண்டர் ஒருவர். இந்த செய்தியை கேட்டவுடன் நடுக்க முற்றேன் என திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.


  • 14:33 (IST) 04 May 2021
    அம்மா உணவகம் தாக்கப்பட்ட விவகாரம்

    அம்மா உணவகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை என்றும் இருவர் மீதும் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறீனார். கைதான இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


  • 14:31 (IST) 04 May 2021
    அம்மா உணவகம் தாக்கப்பட்ட விவகாரம்

    அம்மா உணவகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை என்றும் இருவர் மீதும் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறீனார். கைதான இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


  • 13:43 (IST) 04 May 2021
    விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார் உதயநிதி

    சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துகளை பெற்றார்


  • 13:41 (IST) 04 May 2021
    திமுகவில் இருந்து 2 பேர் நீக்கம்

    மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம். பலகையை நீக்கியவர்களை அங்கேயே பலகையை மீண்டும் பொருத்த சொல்லி உத்தரவு


  • 13:13 (IST) 04 May 2021
    ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைப்பு

    ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.


  • 13:04 (IST) 04 May 2021
    இன்று முதல் துவங்கும் அக்னி நட்சத்திரம்

    இன்று முதல் மே 29ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நிகழும். தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் முன்பைக் காட்டிலும் அதிகமாக வெயிலின் தாக்கம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


  • 12:57 (IST) 04 May 2021
    ஐ.பி.எல். ஒத்திவைக்கப்பட வேண்டுமா?

    கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் தொடரை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


  • 12:56 (IST) 04 May 2021
    பாலிவுட் நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

    வன்முறையை தூண்டும் பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததால் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.


  • 12:01 (IST) 04 May 2021
    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்; ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை!

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர்.


  • 11:34 (IST) 04 May 2021
    டிராபிக் ராமசாமி கவலைக்கிடம்!

    சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் 20-ம் தேதி அவரது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, ராஜூவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..


  • 11:29 (IST) 04 May 2021
    மதுரையில் ரெம்டெசிவிர் மருந்துப் பெட்டிகள் திருட்டு!

    மதுரை அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைகாக இருப்பில் வைக்கப்பட்டிருந்த 10 ரெம்செடிவிர் மருந்துப் பெட்டிகளை கொள்ளயர்கள் திருடிச் சென்றுள்ளனர். ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், மருத்துவமனையிலேயே திருடப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


  • 11:07 (IST) 04 May 2021
    கொரோனா பிரச்னைக்கு முழு ஊரடங்கே தீர்வே; ராகுல் காந்தி!

    நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க, முழு ஊரடங்கு ஒன்றே தீர்வாகும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், முழு ஊரடங்கு விதிக்கும் போது, ஏழை மக்களுக்கு குறைந்த பட்ச வருமான உறுதி திட்டத்தை அரசு அறிவிக்கவும் வலியிறுத்தி உள்ளார். மேலும், கொரோனா விசயத்தில் செயலற்று காணப்படும் மத்திய அரசு, பல அப்பாவி மக்களி உயிர்களை பறிப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.


  • 11:00 (IST) 04 May 2021
    பொது முடக்க கட்டுப்பாடுகள்; 75 லட்சம் பேர் வேலை இழப்பு!

    இந்தியாவில் கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க கட்டுப்பாடுகளால், 75 லட்சம் பேர் வேலை இழப்புக்கு உள்ளாகி இருப்பதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.


  • 10:53 (IST) 04 May 2021
    பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்த ஸ்டாலின்!

    பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் இனி முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்த மமதா, பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


  • 10:52 (IST) 04 May 2021
    பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்த ஸ்டாலின்!

    பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் இனி முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்த மமதா, பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


  • 10:51 (IST) 04 May 2021
    அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!

    இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கிறது. சாதரான நாள்களை விட, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள மதிய வேளைகளில் வெளியே வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


  • 10:48 (IST) 04 May 2021
    சென்னை வந்தடைந்த கோவாக்சின் தடுப்பூசி!

    ஐதராபாத்திலிருந்து 75000 கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது.


  • 10:48 (IST) 04 May 2021
    இந்தியாவில் கொரோனா நிலவரம்!

    இந்தியா முழுவதும் ஒரே நாளில் புதிதாக 3,57,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,449 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


  • 10:38 (IST) 04 May 2021
    1212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி; சுகாதாரத் துறை அதிரடி!

    தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


Corona Tamilnadu Live News Udpate Tn Assembly Elections 2021 Dmk Leader Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment