புதுவை எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்! ஐகோர்ட் உத்தரவு

மூவரின் நியமனம் என்பது அரசியல் சட்டத்தின்படியும், புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகள் படியும் உரிய தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படாததால் அது செல்லாது.

புதுவை நியமன எம்.எல்.ஏ கள் நியமனத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் இன்று பிற்பகல் 2.15 மணி உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

யூனியன் பிரதேச அரசுகளின் சட்டத்தின்படி, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்து கடந்த ஜூன் மாதம் ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்ததை அடுத்து, எந்தவித அறிவிப்புமின்றி மூவருக்கும் ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூவரின் நியமனம் என்பது அரசியல் சட்டத்தின்படியும், புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகள் படியும் உரிய தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் அது செல்லாது என்றும், எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள், வசதிகள் கோரிய முறையீடுகள் நிராகரிக்கப்படுவதாகவும், நியமனம் செல்லாது என்றும் பேரவை தலைவர் முடிவெடுத்து பேரவை செயலாளர் அறிவிப்பாக வெளியிட்டார்.

இதனிடையே நியமன உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசும், தலைமை செயலாளரும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஆளுநரின் நியமனத்தை தடைவிதிக்கக்கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மி நாராயணன் (இந்திய தேசிய காங்கிரஸ்) தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார்

இதே போல் நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக்கோரி தனலட்சுமி தொடர்ந்த பொது நல வழக்கு தொடர்ந்தார்.

சட்டப்பேரவை தொடங்க உள்ள நிலையில்,(கடந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி) பேரவைக்குள் அனுமதிக்க முடியாது என்ற அறிவிப்பை ரத்து செய்து பேரவைக்குள அனுமதிக்கக்கோரி நியமன எம்.எல்.ஏ-க்கள் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த மூன்று வழக்குகளும் இன்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது. வழக்கின் தீர்ப்பினை கடந்த ஆண்டு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் இந்த மூன்று வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு அளித்த தீர்ப்பில், ‘‘மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்’’ என்று தீர்ப்பளித்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close