தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை, இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், நேற்று ( ஜூலை 9ம் தேதி ) இரவு 9 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தமிழகத்தில், அடுத்த 4 நாட்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு :
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பலபகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநல்வேலி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை , திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு
வெப்பநிலை எச்சரிக்கை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மதுரை, கரூர், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும்.
சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடனேயே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.