கள் இறக்க அரசிடம் அனுமதி கேட்க வேண்டுமா?: நல்லசாமி கேள்வி

கள் இறக்க எதற்காக அரசிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கள் இறக்க எதற்காக அரசிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Toddy need govt  permission Nallasamy questions

புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் உலக அளவில் எங்கும் கள்ளுக்கு தடை கிடையாது.

க.சண்முகவடிவேல்

Nagapattinam | Tamilnadu-government: நாகப்பட்டினம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கள் இறக்க எதற்காக அரசிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:-

Advertisment

தமிழ்நாட்டில் கள் மற்றும் காவிரி தீர்ப்பு, நீட் தேர்வு, சனாதனம் பற்றியும் புரிதல் இல்லை. கள்ளுக்கு அரசிடம் அனுமதி கேட்பதும், கள்ளுக்கடைகளை திறக்க கோருவதும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எதற்காக கள்ளுக்கு அரசிடம் அனுமதி கேட்க வேண்டும்?

1950 ஜனவரி 26-ம் தேதி அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்த சட்டம் கொடுத்திருக்கும் உரிமைதான் கள் இறக்குவதும், பருகுவதும். கலப்படத்தை காரணம் காட்டி தமிழ்நாடு அரசு அநியாயமாக இந்த உரிமையை பறித்துகொண்டது. அருகே உள்ள மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் உலக அளவில் எங்கும் கள்ளுக்கு தடை கிடையாது.

அங்கும் கலப்படம் செய்வார்களல்லாவா? அந்த அரசுகள் எல்லாம் கலப்படத்தை கட்டுப்படுத்துகின்றபோது தமிழ்நாட்டில் மட்டும் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் தமிழ்நாடு அரசு ஆளுமை இல்லாத அரசா? ஆளுமையில்லாமல் ஏன் ஆட்சியில் இருக்கவேண்டும். ஆளுமை உள்ளவர் அந்த கலப்படத்தை கட்டுப்படுத்தக்கூடியவர் முதலமைச்சர் நாற்காலியில் அமரட்டும். நீங்கள் இறங்குங்கள்.

ஒரு மரத்து கள்ளை தொடர்ந்து ஒரு மண்டலம் 18 நாட்கள் பருகி வந்தால் பல நோய்கள் குணமாகும் என்பது மருத்துவம். எனவே, கள்ளுக்கு தடையும் கூடாது, கடையும் கூடாது. அதனை உணவுப்பொருளாக அறிவித்து விடுங்கள். அறிவிக்க தவறினால் வரும் நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பாக தமிழக அரசு கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். அறிவிக்க தவறினால் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்படுவார்கள்.

Advertisment
Advertisements

அரசியல் அமைப்பு சட்டத்தை அரசு மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். வரும் 2024 ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். கள் இறக்குவோர் மீது அரசு நடவடிக்கை எடுத்தால் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் அரசு தான் குற்றவாளி. கடந்த 15 ஆண்டு காலமாக நடைபெறும் இந்த அறப்போர் இறுதியில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் வெற்றியை பெறும். "கள்" தடை நியாயமானது என்று யாராவது சொல்லி அதனை நிரூபித்தால் அவருக்கு ரூ.10 கோடி தருவதற்கு தயாராக உள்ளோம். 

இவ்வாறு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.  

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamilnadu Government Nagapattinam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: