Advertisment

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார் அளிக்க இலவச தொலைபேசி: ஐகோர்ட் புதிய உத்தரவு

தனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை கண்காணித்து, விதிகளை பின்பற்றி கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Toll-Free Number

Toll-Free Number

Toll-Free Number for Complaints against sexual assaults : லாபநோக்கில் தனியாக டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்.  பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை பள்ளிக்கல்வி துறை மற்றும் தமிழக அரசு 8 வாரத்தில் அறிமுகப்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

கோவை மாநகராட்சிக்கு உட்பட்டுள்ள எஸ்.ஆர்.பி அம்மணி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதனை, 2 கிமீ தூரத்தில் உள்ள செல்வபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் கடந்த 2017 ஆண்டு ஜூலையில் உத்தரவு பிறப்பித்தார்.

மாநகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். விசாரணைக்கு பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆர்.எஸ்.புரம் பள்ளிக்கு மாற்றம் கோரி மல்லிகா என்ற தலைமை ஆசிரியை அளித்த கோரிக்கையை ஏற்று, அப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் இடமாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இருப்பினும், ரங்கநாதன் தற்போது உள்ள பள்ளியில் இருந்து 2 கிமீ துரத்தில் உள்ள வேறு ஒரு மாநகராட்சி பள்ளிக்கு இடமாற்றம் செய்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறி ரங்கநாதனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தனியார் ட்யூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை

மேலும் நீதிபதி தன்னுடைய உத்தரவில், அரசிடம் நியாயமான ஊதியம் பெறும் அரசு பள்ளி ஆசிரியர்கள், பணலாபத்திற்காக தனியாக டியூசன் எடுக்கிறார்கள். இது விதிமுறைகளுக்கு முரணானது. இது போல் தனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை கண்காணித்து, விதிகளை பின்பற்றி கடும் நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் அரசை மிரட்ட, போராட்டங்களில் ஈடுப்படுகின்றனர் என வேதனை தெரிவித்த நீதிபதி இளைய சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இது போன்ற ஆசிரியர்களின் மீது எந்த விதமான கருணை காட்டாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பள்ளி, கல்லூரி, மற்றும் பல்கலைகழகங்களில், சமீப காலமாக ஒழுங்கின்மை, சட்ட விரோத நடவடிக்கைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதி,

இது தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி துறை மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தொலைப்பேசி எண்ணை அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களில் அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்ய வேண்டும். இந்த தொலைபேசி எண் பள்ளிக்கு வந்து செல்லும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் பெரிய எழுத்துக்களில் இடம்பெற வேண்டும்.

புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தனியாக டியூசன் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் வணிக ரீதியாக செயல்படும் ஆசிரியர்களுக்கு எதிராகவும் அந்த இலவச தொலைப்பேசி எண்களில் புகார் அளிக்கலாம் என்ற குறிப்பிட்டுள்ள நீதிபதி அந்த ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுற்றிறிக்கை தமிழக அரசு அனுப்ப உத்தரவிட்டார்.

தலைமை ஆசிரியர் ரங்கநாதன் மற்றும் தலைமை ஆசிரியர் மல்லிகா ஆகியோர் அவர்கள் பணிபுரியும் பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகளை நட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மரம் நட்டது தொடர்பாக கோவை மாநகர ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : போக்ஸோ சட்டம் கூறுவது என்ன? புதிய மாற்றங்கள் என்ன?

Tamil Nadu School Education Department Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment