Advertisment

சென்னை- பெங்களூரு டோல் கேட் கட்டணம் உயர்வு; ஏப்.1 முதல் அமல்

சென்னை- பெங்களூரு டோல் கேட் கட்டணம் ஏப்.1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. இதனால், சென்னை - பெங்களூரு சாலை பயணத்தின் செலவு அதிகரிக்க உள்ளது.

author-image
WebDesk
New Update
Toll gate

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கணிசமான கட்டண உயர்வை எதிர்கொள்வார்கள்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தமிழ்நாட்டின் தலைநகரின் புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் பயனர் கட்டணத்தை உயர்த்தத் தயாராகி வரகிறது.

Advertisment

இதனால், சென்னை மற்றும் பெங்களூரு இடையே சாலைப் பயணம் மிகவும் விலை உயர்ந்ததாக மாற உள்ளது. அதாவது, ஒரு பயணத்திற்கு 5 முதல் 20 வரையிலான கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பெங்களூரு மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கணிசமான கட்டண உயர்வை எதிர்கொள்வார்கள்.

மேலும், இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் ரூ. 150 வரை உயரும் எனவும் கூறப்படுகிறது. முக்கிய தேசிய சுங்கச்சாவடிகளில் உள்ள பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதே இதற்குக் காரணம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில் இந்தியக் கூட்டமைப்பு மத்தியில் ஆட்சி அமைத்தால், அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றும் வாக்குறுதிகளை அளித்த நேரத்தில், சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதற்கான முடிவு வந்துள்ளது.

டோல் கட்டண உயர்வின் தாக்கம் போக்குவரத்து நெட்வொர்க்குகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை நம்பியிருக்கும் வணிகங்களை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Toll Gate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment