global-investors-meet | தமிழ்நாட்டை, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாகத் மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் (ஜன.7,2024) நாளையும் (திங்கள்கிழமை) ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ பிரம்மாண்ட அளவில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கு பெறுகிறார்கள்.
இந்த மாநாட்டில் ரூ.5.50 லட்சம் கோடி முதலீட்டை இருக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன. 2015 ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூபாய் 2,42,160 கோடி முதலீடு கலை இருக்கும் விதமாக 98 பிரிந்தனர் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
இந்த நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று போடப்பட்ட டாப் 10 ஒப்பந்தங்கள் குறித்து பார்க்கலாம்.
எண் |
நிறுவனம், முதலீடு செய்யும் இடம் |
முதலீடு (கோடிகளில்) |
01 |
வின்பாஸ்ட் (தூத்துக்குடி) |
ரூ.16,000 கோடி |
02 |
ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் (நெல்லை, தூத்துக்குடி) |
ரூ.10,000 கோடி |
03 |
டாடா எலக்ட்ரானிக்ஸ் (கிருஷ்ணகிரி) |
ரூ.12,082 கோடி |
04 |
ஹூண்டாய் நிறுவனம் |
ரூ.6180 கோடி |
05 |
ஃபர்ஸ்ட் சோலார் (காஞ்சிபுரம்) |
ரூ.5600 கோடி |
06 |
டிவிஎஸ் நிறுவனம் |
ரூ.5000 கோடி |
07 |
பெகட்ரான் (செங்கல்பட்டு) |
ரூ.1000 கோடி |
08 |
கோத்ரேஜ் நிறுவனம் (செங்கல்பட்டு) |
ரூ.515 கோடி |
09 |
மிட்சுபிக்ஷி (திருவள்ளூர்) |
ரூ.200 கோடி |
10 |
குவால்கம் நிறுவனம் (சென்னை) |
ரூ.177 கோடி |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“