தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி மாத இறுதியில் இருந்து 2 மாதமாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வெயில் சற்று தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். கடந்த 3 மாதங்களாக கடுமையான வெப்பம் பதிவாகி வந்தது. தமிழ்நாட்டி அதிகபட்சமாக 110 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் பதிவானது. மக்கள் வீடுகளுக்கு உள்ளே முடங்கினர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதனால் படிப்படியாக வெப்பம் தணிந்து வருகிறது. குறிப்பாக வெப்பம் அதிகமாக பதிவான ஈரோடு, நாமக்கல், கரூர் பரமத்தி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெப்பம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில், ஈரோட்டில் பல நாட்களுக்குப் பிறகு நேற்று (மே 16) 00 டிகிரிக்கு கீழ் வெயில் பதிவாகியது. அதாவது, வெயிலின் அளவு 96.44 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.
கடந்த 15-ம் தேதி நிலவரப்படி, திருத்தணி - 102.38, கரூர் பரமத்தி - 102.2, வேலூர் - 101.66, நாமக்கல் - 100.4, சென்னை மீனம்பாக்கம் - 96.8, கோயம்புத்தூர் - 96.26 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது.
கோடை மழை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் வெப்பம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வெப்பநிலை இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“