ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார் கவியருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் தங்களது விடுமுறையை கழிக்க வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதன் காரணமாக ஆழியார் கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருக்கும் போது நீர்வரத்து அதிகரித்ததால் அவர்களை அருவியிலிருந்து அப்புறப்படுத்தி வனத்துறையினர் ஆழியார் கவியருவியை மூடி தடை விதித்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மூன்றாவது நாளாக ஆழியார் கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் நீரின் நிறம் மாறி செந்நிறமாய் வரும் தண்ணீரோடு மர விழுது கட்டைகள், கற்கள் என அடித்து வரப்படுகிறது. ஆர்ப்பரித்து கொட்டும் நீரால் கவியருவியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக போடப்பட்டுள்ள தடுப்பு வேலி அடித்துச் செல்லப்பட்டது.
மேலும் தொடர்ந்து அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“we