தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா ? என பிரதமர் மோடியை டி.ஆர். பாலு கேள்வி எழுப்பி உள்ளார்.
\நேற்று பிரதமர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் டி.ஆர். பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “ தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா? அரசு முறை பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் ,மோடி, அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவதூறுகளை அள்ளி இறைந்துவிட்டு சென்றிருக்கிறார்.
10 ஆண்டுகளில் செய்த சாதனைகள் எதுவும் இல்லாததால், ஊழல் வழக்கில் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட ஜெயலலிதாவை புக்ழந்தும், தி.மு.க- வை விமர்சித்தும் பேசியிருக்கிறார். ஜெயலலிதாவை வைத்து வாக்கு வாங்க நினைக்கிறார்.
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணிக்கு அடித்தளம் அமைத்ததால் முதல்வர் ஸ்டாலின் மீது பா.ஜ.கவிற்கு கோபம். பின்னலாடை வர்த்தக சந்தைக்கான வாசலை வங்கேசத்திற்கு திறந்து விட்டு, திருப்பூரை வஞித்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. இப்படி நடந்துவிட்டு, மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று தமிழ்நாட்டை அவர் குறிப்பிட்டு பேசியிருக்கக் கூடாது. பிரதமர் மோடி பொய் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
தி.மு.க-வை இல்லாமல் ஆக்கிவிடுவார் என சவால் விடுத்துள்ளார் மோடி. ஏற்கனவே இப்படி சொல்லி வரலாற்றில் காணாமல் போனவர்கள் பட்டியலில் இவரும் இணைவார்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“