டி.ஆர். பாலு எழுதிய தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், தி.மு.க பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், மறைந்த கலைஞர் கருணாநிதி உடனான ஃபிளாஷ்பேக்-கைக் கூறியதைக் கேட்டு தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு கட்சியினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க பொருளாளரும், நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய ‘பாதை மாறா பயணம்’ நூல் வெளியிட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, நூல் வெளியிட்டு விழாவில் பேசிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது, ஒரு சம்பவத்தின் போது டி.ஆர் பாலுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, கலைஞர் கருணாநிதி தான் சொல்வதுதான் சரி என்றும், நீ தலைவரான் நான் வஅப்போது தான் சொல்வது தான் சரி என டி.ஆர் பாலுவும், தான் சொல்லுவது தான் சரியென கருணாநிதியும் மோதிக்கொண்டதாக தெரிவித்தார்.
அறிஞர் அண்ணா ஒருமுறை கூறினார். தி.மு.க என்பது பாஷாணத்திலே புழுத்தப் புழு. இந்த புழுவை வேறு எந்த பாஷாணமும் அழித்துவிடாது என்று கூறினார். அப்படி, தி.மு.க என்பது தியாக வேள்வியிலே தோன்றிய கட்சி. அதிலே ஒவ்வொருவருக்கும், தியாகத்தைச் செய்திருப்பார்கள். சில பேர்கள் பதவிகளில் வந்திருக்கும், சில பேர்கள் வரலாற்று நூல்களிலே வந்திருக்கும். தாமஸ் கிரேவ் என்கிற ஒரு ஆங்கிலப் புலவன், ஒரு கவிதை எழுதியிருக்கிறான். எத்தனையோ முத்துக்களையும் வைரங்களையும் மாணிக்கங்களையும் வெளியிலே பார்த்திருக்கிறீர்கள். ஆனால், இன்னும் எத்தனையோ முத்துங்கள், வைரங்கள், வைடூரியங்கள் யார் கைகலூம் படாமல், யாரும் தீண்டப் படாமல் ஆழ்கடலில் கிடக்கிறது என்று சொன்னார். அப்படி, எத்தனையோ, முத்துக்கள், வைரங்கள் வரலாற்றில் எழுதப்பட வேண்டியவர்கள் தி.மு.க-விலே இருக்கிறார்கள். வரலாறு என்ற ஒன்று இல்லாவிட்டால், நாம் வந்த வழி தெரியாது. வரலாற்றை இழந்த சமுதாயம், நினைவிழந்த மனிதனுக்கு சமம் என்று உலக வரலாற்றை எழுதிய அர்னால்ட் டாய்ன்பி குறிப்பிட்டார். அதனால்தான், தி.மு.க-வின் வரலாற்றை அறிஞர் அண்ணா ஆங்காங்கே தொட்டு காண்பித்துவிட்டு போனார்கள். அவர் காலத்தில் முடிந்தது. அப்படி முடிந்து போய்விடக் கூடாது என்பதில், கலைஞர் அழுத்தம் திருத்தமான கொள்கை கொண்டவர். ஆகையினால்தான், நெஞ்சுக்கு நீதி, அவருக்கு நெஞ்சில் நின்றவைகளை எல்லாம், அவருக்கு பொதுவாக ஞாபக சக்தி அதிகம். அதைக் கொண்டு பல பாகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு தி.மு.க தோழனும் நெஞ்சுக்கு நீதியைப் படித்தே ஆக வேண்டும். படிக்கிறவன் தான் தி.மு.க-காரனாக இருக்க முடியும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கலைஞர் கருணாநிதிக்கும் டி.ஆர். பாலுவுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தையும் அதில், கலைஞர் உண்மையை உணர்ந்து மன்னிப்பு கேட்டதையும் குறிப்பிட்டு பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தபோது, மேடையில் இருந்த டி.ஆர். பாலு தேம்பி தேம்பி கண்ணீர் விட்டு அழுதார். தனது கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்தார்.
அந்த நிகழ்வு குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “ஒரு சம்பவத்தின் போது டி. ஆர் பாலுக்கும் கருணாநிதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தான் சொல்வதுதான் சரி என டி.ஆர் பாலுவும், தான் சொல்லுவது தான் சரியென கலைஞரும் வாக்குவாதம் செய்தார்கள்.
அப்போது கோபப்பட்ட கருணாநிதி நான் தலைவனா.? நீ தலைவனா .? நான் சொல்வது தான் சரி என கருணாநிதி கூறியதாக தெரிவித்தார். இதனால் டி.ஆர் பாலு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார். மேலும், மடையன் ஒன்றும் தெரியாமல் பேசுகிறான் என டிஆர் பாலுவை கருணாநிதி கடிந்து கொண்டதாகவும் தெரிவித்தார். ஒரு சில நிமிடங்கள் கழித்து நான் போய் குளித்து விட்டு வருகிறேன் என்று கூறி சென்ற கருணாநிதி குளித்துவிட்டு வந்தபொழுது நான் யோசித்துப் பார்த்தபோது, டி.ஆர். பாலு கூறியதுதான் சரியா இருக்கும் என நினைத்தாக கூறினார். உடனே டிஆர் பாலுவை கூப்பிடு என சொன்னபோது, அவர் நீங்க திட்டின திட்டிற்கு தாம்பரத்தை தாண்டி சென்று இருப்பார் என துரைமுருகன் கூறியதாகத் தெரிவித்தார்.
டி.ஆர் பாலுவை வரச்சொல் என கலைஞர் கூறியதை அடுத்து டி. ஆர் பாலுவை போன் செய்து வர சொன்னதாகவும் ஆனால், அவர் வர மறுத்ததாகவும் கூறினார். இதையடுத்து, வீட்டிற்கு வந்த டி.ஆர் பாலுவை பார்த்து நீ சொன்னதுதான் சரி என தெரிவித்ததாகவும் என்னை மன்னித்துவிடு என கருணாநிதி கூறியதாக துரைமுருகன் கூறினார்.
இந்த சம்பவத்தை, அமைச்சர் துரைமுருகன் மேடையில் விவரித்து பேசிக்கொண்டிருக்கும்போதே, டி.ஆர். பாலு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். தனது கை குட்டையை எடுத்து கண்ணீரை துடைத்துக் கொண்டார் இந்த சம்பவம், தி.மு.க-வினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.