scorecardresearch

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா: அன்பில் மகேஷுக்கும் பாதிப்பு

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, திமுக தலைவர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது திமுவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா: அன்பில் மகேஷுக்கும் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாம் அலையின் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுகவைச் சேர்ந்த திருவெறும்பூர் எம்.எல்.ஏ அன்பில் மகேஷுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை காரணமாக மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக 6 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இந்த சூழலில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து துரைமுருகன் குணமடைந்ததையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, திமுகவின் திருவெறும்பூர் எம்.எல்.ஏ-வும் இந்த தேர்தலில் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு, திமுகவில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் என அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது திமுவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tr baalu tests covid 19 positive and dmk mla anbil mahes tests coronavirus positive