இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், ஒசூரில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதைப்பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: "சட்டப்பேரவை உறுப்பினர் அசோக் குமார் சொல்லி இருப்பது நல்ல கருத்து ஆகும். ஓசூர் ஒரு மிகப்பெரிய அளவிலேயே வளர்ந்து வரக்கூடிய தொழில் நகரமாக உருவெடுத்து இருக்கிறது.
தமிழ்நாட்டிலேயே இந்த அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களை எடுத்துப்பார்க்கும்பொழுது, ஓசூர் அளவிற்கு வேறு எந்த நகரங்களும் வரமுடியாத அளவிற்கு உலகளாவிய வகையில் முக்கிய நகரமாக மாறி வருகிறது.
ஓசூர் உடைய அமைப்பு, அதனுடைய தொழில் சூழல், அதனுடைய புவியியல் அமைப்பு, அருகே இருக்கக்கூடிய பெங்களூர் போன்ற நகரங்களுடைய தொடர்பு, தொழில்நுட்ப வசதிகள், இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஓசூர் மிக சிறந்த அளவிலே ஒரு தொழில் நகரமாக உருவாக்குவதற்கு, மென்மேலும் அதற்கான வசதிகளை தமிழக அரசு செய்யும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் இங்க சுட்டிக்காட்டியதை போல, ஓசூரில் அமையக்கூடிய வர்த்தக மையம் எல்லா விதமான வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இப்போது இருக்கக்கூடிய நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கி இருக்கக்கூடியதாக வர்த்தக மையத்தை அமைப்பதற்கு அரசு எல்லா வகையிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்", என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil