நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மையமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், மத்திய அரசு வங்கிகள், தொலை தொடர்பு, ரயில்வே, மின்சாரம், நிலக்கரி, சுரங்கங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலை போக்குவரத்து போன்றவற்றை தனியார் மையமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், என்றும் மத்திய அரசின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் 42 தொழிலாளர் நல சட்டங்களை திரும்பபெற கோரி வலியுறுத்தி இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் அந்தத் தொழில் சங்கத்தை சார்ந்தவர்கள் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் போன்றவற்றை இயக்கவில்லை.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லக் கூடிய அரசு பேருந்தும் இயக்கப்படவில்லை இதனால் பொதுமக்கள் ரயில் மூலமாக கேரளாவை நோக்கி செல்கின்றனர். அதே போல வணிகர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால், கடை அடைப்பு நடைபெறவில்லை.
மேலும் வழக்கத்தை விட சற்று குறைவாக பேருந்துகள் மற்றும் ஆட்டோவில் இயக்கபட்டாலும், பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை குறிப்பாக கேரளாக்கு செல்லக் கூடிய 50 பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை, கேரளா மாநிலம் செல்கின்ற பயணிகள் மட்டும் பேருந்தில்லாமல் அவதி அடைந்து வருகின்றனர், பேருந்துக்கு பதிலாக கோவை ரயில் நிலையத்திற்கு படையெடுக்க துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.