கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள பழ மண்டியில் இந்த ஆண்டு மாங்காய் வரத்து அதிகமாக வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/20/mango-covai-2-244758.jpeg)
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகவில் இருந்து வரக்கடிய மாங்காய் மற்றும் மாம்பழங்கள் கோவையில் இருந்து இந்தியா மற்றும் துபாய், மஸ்கட், சவுதி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/02/20/mango-covai-3-313204.jpeg)
மேலும், கோவையில் நிர்ணயிக்கபட்ட விலை தான் இந்தியா முழுவதும் உள்ள வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக கோவை வியாபாரிகள் தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/20/mango-covai-5-815696.jpeg)
தற்போது தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து மாங்காய் வந்து கொண்டு இருப்பதாகவும் தருமபுரியில் இருந்து மாங்காய்கள் வர தொடங்கியுள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் 6 மாதங்களுக்கு மாங்காய் வரத்து இருக்கும் என்றும் மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/20/mango-covai-6-222868.jpeg)
மேலும் தற்போது மார்கெட்டில் மொத்தமாக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை தினசரி விற்பனையாகி வருவதாக பழ மண்டி வியாபாரிகள் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்