scorecardresearch

மார்ச் 31க்குள் வணிகர்களின் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும்: காலக்கெடுவை அளிக்கும் சென்னை மாநகராட்சி

புதிதாக தொழில் தொடங்குபவர்கள் உள்ளாட்சி அமைப்பில் உரிமம் பெறலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மார்ச் 31க்குள் வணிகர்களின் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும்: காலக்கெடுவை அளிக்கும் சென்னை மாநகராட்சி

2023-2024 நிதியாண்டுக்கான உரிமங்களை மார்ச் 31 ஆம் தேதிக்குள் புதுப்பிக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) வணிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

புதிதாக தொழில் தொடங்குபவர்கள் உள்ளாட்சி அமைப்பில் உரிமம் பெறலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட தேதிக்குள் உரிமத்தை புதுப்பிக்கத் தவறும் வர்த்தகர்கள் உரிமம் பெறாத வர்த்தகர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன் படி, ஒவ்வொரு நிதியாண்டுக்கும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் குடிமை அமைப்பால் வழங்கப்படும் வணிகர்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்படும்.

2023 – 2024 ஆம் ஆண்டுக்கான உரிமங்களை வணிகர்கள், மண்டல அலுவலகத்தில் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் உள்ளாட்சி அமைப்பு நடத்தும் முகாம்களிலும் செய்யலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வணிகர்களின் நலனுக்காக அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.chennaicorporation.gov.in மூலமாகவோ அல்லது க்யூஆர் கோட் வசதி மூலமாகவோ உரிமங்களை புதுப்பித்துக்கொள்ளும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் உரிமங்களை புதுப்பிக்கவோ அல்லது புதிய உரிமம் பெறவோ தவறியவர்கள் ஏப்ரல் 1, 2023 முதல் உரிமம் பெறாதவர்களாகக் கருதப்பட்டு, விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Traders should renew licenses before march 31 announcement from greater chennai corporation

Best of Express