/tamil-ie/media/media_files/uploads/2022/06/traditional-skipping.jpg)
Traditional event will held at Trichy on June 26: திருச்சி கிருஷ்ண மூர்த்தி நகர் ஜெகன் மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை ஜூன்-26-ம் தேதி பாரம்பரியம் காப்போம் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
இந்த பாரம்பரியம் காப்போம் நிகழ்ச்சி பாரம்பரிய உணவுகள், பழங்கால சிறார் விளையாட்டுகள், பாரம்பரியக் கலைகள், பழங்கால பொருள்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை மீட்டெடுக்கும் விதமாக நடக்கவிருக்கின்றது.
இதையும் படியுங்கள்: ‘ஓவரா ஆடாதீங்க; ஓட்ட நறுக்கி விடுவோம்’: திருச்சியில் போலீசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பா.ஜ.க
திருச்சி மரங்கள் அறக்கட்டளை, மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு, பசுமை சிகரம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றன.
இந்நிகழ்வுகளில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய சமையல், காய்கனிகள், கீரை, மரம் மற்றும் நெல் ஆகியவற்றின் பாரம்பரிய விதைகள், சிலம்பம், கில்லி, நுங்கு வண்டி, பாண்டி, தாயம், பல்லாங்குழி, பச்சைக் குதிரை, கும்மியாட்டம், ஒயிலாட்டம், கரகம், பொய்க்கால் குதிரை, தப்பு, பறை, கொம்பு, ஆர்மோனியம், வீணா, களரி, சுருள்வாள், பூமராங், கத்திச்சண்டை, ஈட்டி, வேல்கம்பு, மண்பானை, செம்பு, பித்தளை, வெண்கலம், பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், வானொலி பெட்டிகள், பதநீர், இளநீர், பானகம், மோர் உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும், கற்றுத்தரவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு நாளை ஜுன் 26-ம் தேதி திருச்சி கிருஷ்ணமூர்த்தி நகரிலுள்ள ஜெகன் மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஜூலை 10-ம் தேதி திருவானைக்காவல் தெப்பக்குளம் அருகேயுள்ள கணேஷ் டிராவல்ஸ் வளாகத்திலும் நடைபெறுகின்றது.
இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களான மரம் பி.தாமஸ், மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி.நீலமேகம், விதைகள் எஸ்.யோகநாதன், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமார், தண்ணீர் அமைப்பு நிர்வாகக்குழு பிரமுகரும், சமூக ஆர்வலருமான ஆர்.கே.ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.