Advertisment

ரயில்வே சூப்பர் ஸ்கீம்; மதுரையில் சலுகை விலையில் சுங்குடி சேலைகள்

இந்திய ரயில் நிலையங்களில் ஒரு நிலையம் ஒரு விற்பனை என்ற அடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் மதுரையின் பாரம்பரியமான சுங்குடி சேலை விற்பனையை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sungudi Sarie sale, Sungudi Sarie, Sungudi Sarie sale in Madurai railway junction, One Station One Product, Traditional Sungudi Sarie sale in Madurai railway junction, ஒரு நிலையம் ஒரு விற்பனை! மதுரை ரயில் நிலையத்தில் பாரம்பரியமான சுங்குடி சேலை விற்பனை, சுங்குடி சேலை, su venkatesan mp, Traditional Sungudi Sarie, Madurai railway junction

இந்திய ரயில் நிலையங்களில் ஒரு நிலையம் ஒரு விற்பனை என்ற அடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் மதுரையின் பாரம்பரியமான சுங்குடி சேலை விற்பனையை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.

Advertisment

ரயில் நிலையங்களில் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் விளம்பரப்படுத்த உள்ளூர் பகுதிகளில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிற மொத்தம் 19 தயாரிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை மல்லிக்கும் சுங்குடி சேலைக்கும் பிரபலமானது. இதில் மதுரை ரயில் நிலையத்தில், சுங்குடி சேலையை விளம்பரப்படுத்த ரயில்வே கோட்ட அதிகாரிகள் தேர்வு செய்தனர்.

இதையடுத்து, பாரம்பரியமான சுங்குடி சேலை உற்பத்தியாளருக்கு ரயில்வே கான்கோர்ஸ் ஹாலில் இலவசமாக ஒரு சிறிய விற்பனை நிலையம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுங்குடி சேலை விற்பனை மதுரை ரயில் நிலையத்தில் 15 நாட்களுக்கு விற்பனை நடைபெறும். மதுரை ரயில் நிலையத்தில் உள்ள சுங்குடி சேலை கடை உரிமையாளர் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியில் சுங்குடி சேலை விற்பனை செய்யப்படும்.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பனை ஓலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி பட்டு சேலைகளும், கோவில்பட்டியில் கடலை மிட்டாயும் விற்பனை செய்ய அடையாளம் காணப்பட்டுள்ளது.

மதுரை ரயில் நிலைத்தில் திங்கள்கிழமை பாரம்பரியமான சுங்குடி சேலை விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலை விற்பனை மையம்.

இந்திய ரயில் நிலையங்களில் ஒரு நிலையம் ஒரு விற்பனை என்ற அடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் மதுரையின் பாரம்பரியமான சுங்குடி சேலை விற்பனையை துவக்கி வைத்தேன்.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் ரயில்வே நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment