Advertisment

அண்ணா நினைவு தினத்தில் தி.மு.க அமைதிப் பேரணி; சென்னையில் இந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

அறிஞர் அண்ணா நினைவு தினத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க சென்னையில் திங்கள்கிழமை (பிப். 03) அமைதிப் பேரணி நடத்த உள்ளதால், சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chennai traffic police

சென்னையில் பிப்ரவரி 3-ம் தேதி முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்னா நினைவு தினத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில்,  தி.மு.க சார்பில், சென்னையில் திங்கள்கிழமை (பிப். 03) அமைதிப் பேரணி நடத்த உள்ளதால், சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.

Advertisment

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “வரும் 03.02.2025 அன்று காலை 8.00 மணியளவில் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் அவர்கள், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் வாலாஜா சாலை அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் வரை மவுன ஊர்வலம் செல்ல உள்ளார்கள். இது தொடர்பாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேவைப்படும் பட்சத்தில்

1.போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

Advertisment
Advertisement

2.கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு ராதா கிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

3.பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்ணிே நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படாது வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை X திருவல்லிக்ணிே நெடுஞ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு அண்ணா சிலை வழியாக செல்லலாம்.

4.மவுன ஊர்வலம் வாலாஜாயில் வரும் போது வாகனங்கள் அண்ணாசிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.

அதனால் காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிடலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேடுக்க்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Traffic Change
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment