Advertisment

நெரிசலைக் குறைக்க சென்னையில் ஜூலை 9 முதல் போக்குவரத்து மாற்றம் - முக்கிய அறிவிப்பு

சென்னை ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜூலை 9 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதே போல, கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வழியிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

சென்னை ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜூலை 9 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதே போல, கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வழியிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.

Advertisment

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவித்திருப்பதாவது:

100 அடி சாலையில் வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில், 09.07.2022 முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் பரிசார்த்த முறையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

  1. 100 அடி சாலை 2வது நிழற்சாலைச் சந்திப்பிலிருந்து 4வது நிழற்சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அசோக் பில்லர் வழியாக இருந்து கோயம்பேடு, வடபழனி மற்றும் கே.கே. நகர் செல்லும் வாகனங்கள் எவ்விதம் மாற்றமும் இன்றி வழக்கம் போல செல்லலாம்.
  2. அசோக் பில்லர் வழியாக இருந்து தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலைச் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை மற்றும் அம்பேத்கர் சாலை வழியாக செல்லலாம்.
  3. கோயம்பேடு மற்றும் வடபழனி வழியாக அசோக் பில்லர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, 4வது நிழற்சாலை வழியாகச் சென்று, கவிஞர் சுரதா சிலை அருகில் 100 அடி சாலையினை அடைந்து அசோக் பில்லர் நோக்கிச் செல்லலாம்.
  4. வடபழனியிலிருந்து தி.நகர் செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலை சந்திப்பில், இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக தி.நகர் அடையலாம்.
  5. பி.டி. ராஜன் சாலை X பி.வி. இராஜமன்னார் சாலை சந்திப்பிலிருந்து 2வது நிழற்சாலை X 100 அடி சாலை வரை தற்பொழுதுள்ள ஒரு வழிப்பாதை மாற்றப்பட்டு இருவழி பாதையாக நடைமுறைப்படுத்தப்படும். மேற்படி, பி.டி. ராஜன் சாலை X இராஜமன்னார் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் நேராக 2வது நிழற்சாலை X 100 அடி சாலையினை அடைந்து நேராக 2வது நிழற்சாலை வழியாக தி.நகர் மற்றும் அசோக்பில்லர் செல்லலாம்.
  6. வடபழனி மார்க்கத்திலிருந்து கே.கே. நகர் செல்ல விழையும் வாகனங்கள் 2வது நிழற்சாலை சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக 3வது மற்றும் 6வது நிழற்சாலையை அடைந்து 100 அடி சாலையில் வலது புறம் திரும்பி கே.கே. நகரினை பி.டி. ராஜன் சாலை வழியாக அடையலாம்.
  7. கோடம்பாக்கம் மற்றும் தி.நகர் மார்க்கத்திலிருந்து வடபழனி மற்றும் கோயம்பேடு செல்ல விழையும் வாகனங்கள் 4வது நிழற்சாலை வழியாக 3வது மற்றும் 6வது நிழற்சாலை வையாக 100 அடி சாலை வலது புறம் திரும்பி செல்ல வேண்டிய வழித்தடத்தில் செல்லலாம்.

பொதுமக்கள் போக்குவரத்துக் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்கவும். இது குறித்து ஆலோசனைகள் ஏதும் இருப்பின் அவற்றை கீழ்கண்ட தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில் அறிவித்திருப்பதாவது:

ஈ.வே.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். பெருகி வரும் வாகன போக்குவரத்தால் காலை மற்றும் மாலை வேலைகளில் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் அதிக அளவில் ஏற்படுகிறது. எனவே ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் வரும் 09.07.2022 முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது.

(i) கோயம்பேடுவிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் கீழ் சுமார் 75 மீட்டர் சுற்றுப் பாதையில் ‘யு’ திருப்பம் மேற்கொண்டு ஈ.வி.ஆர் சாலையை அடைந்து அமைந்தகரைக்கு செல்ல வேண்டும். நெல்சன் மாணிக்கம் சாலைக்கு செல்ல விரும்புவோர், மேம்பாலத்தின் வழியாக சென்று அடையலாம்.

(ii) அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் சந்திப்பில் பாதசரி கடக்கும்போது தவிர தடையின்றி செல்லலாம்.

(iii) அண்ணாநகரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா வளைவில் திரும்பும்போது பாதசாரி கடக்கும்போது தவிர இடையூறு இல்லாமல் தொடர்ந்து செல்லலாம்.

(iv)கோயம்பேடுவில் இருந்து செல்லும் வாகனங்கள் அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் வலதுபுறம் திரும்பும் வகையில் அண்ணா ஆர்ச்சில் ‘யு’ திருப்பம் எடுத்து அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பி அரும்பாக்கத்தை அடையும். இதன் மூலம் அரும்பாக்கம் அருகே ஈ.வி.ஆர் சாலையிலும் நெரிசல் குறையும்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment