அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆணையகரத்தில் இருந்து செய்திக் குறிப்பு வெளியாகி உள்ளது.
அதில், “அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்ல வேண்டி கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான சோதனை ஓட்டம் நாளை (அக்.10) முதல் செய்யப்பட உள்ளது.
அதன்படி, ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணாசாலை, ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து ஓயிட்ஸ் சாலை செல்லலாம். ஒயிட்ஸ் சாலை ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை.
தொடர்ந்து பட்டுள்ளால் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை, பட்டுள்ளால் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்லலாம். ஆனால் ஒயிட்ஸ் சாலை, பட்டுள்ளால் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்ல அனுமதி இல்லை.
மேலும் ஜி.பி. ரோடு சந்திப்பு மற்றும் பின்னி சாலையில் இருந்து அண்ணாசாலை வந்து ஒயிட்ஸ் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுள்ளால் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக ஸ்மித் ரோடு சென்று இடதுபுறமாக திரும்பி ஸ்மித் ரோடு, ஓயிட்ஸ் ரோடு சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
இதேபோல் ராயப்பேட்டை மணிகூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுள்ளால் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி பட்டுள்ளால் சாலை அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை.
இதையடுத்து திருவிக ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோடில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக பட்டுள்ளலால் சாலை சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி பட்டுள்ளலால் சாலை அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
தொடர்ந்து, அண்ணாசாலை பட்டள்ளால் சாலை சந்திப்பில் இருந்து பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி அண்ணாசாலையில் ஸ்பென்ஷர் எதிர்புறம் உள்ளே யூ வளைவில் திரும்பி பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“