/tamil-ie/media/media_files/uploads/2019/09/omr.jpg)
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் இன்று (டிச.16) முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் செல்லும் வழியிலும், காமாட்சி மருத்துவமனையில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வழியிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை ஓ.எம்.ஆர் சாலையில் போக்குவரத்து மாற்று திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது சோதனை அடிப்படையில் 16.12.2023 முதல் செயல்படுத்தப்படும்.
போக்குவரத்து மாற்றம்
சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் தொரைப்பாக்கம் சந்திப்பு -> 200 அடி ரேடியல் சாலை → ரேடியல் சாலை சுங்கச்சாவடியில் புதிய யு திருப்பம் ->பி.எஸ்.ஆர் மால் அருகே இடதுபுறம் திருப்பம் → பெருங்குடி சுங்கச்சாவடி டைடல் பூங்காவை அடையும் வகையில் திருப்பி விடப்படுகிறது.
காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பி.எஸ்.ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ் காந்தி சாலையில்) திருப்பிவிடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.
#GCTP- Traffic Diversion at OMR Road
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) December 15, 2023
Thuraipakkam
From 16.12.2023, on trial basis. #Chennai#Traffic@chennaipolice_pic.twitter.com/kwxb2eBhGB
இதேபோல், மாநகராட்சி சாலையில் இருந்து தொரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறமாக திருப்பி விடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு டர்னில் சென்று தொரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.