வரும் அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதிகளில் இந்தியப் பிரதமரும், சீனா அதிபரும் தமிழகம் மாமல்லபுரத்தில் நடக்கும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகைத் தருகின்றனர். இதனால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் பிரிவு நேற்று அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பட்ட சாலைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களையும், பொது மக்களுக்கு தேவைப்படும் அறிவுரைகளையும் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி சாலை ( சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை ) , அண்ணா சாலை ( கத்திப்பாரா முதல் சின்ன மலை வரை ), சர்தார் வல்லபாய் படேல் சாலை , ராஜீவ் காந்தி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் முக்கிய பிரமுகர்களின் வருகையால் பொது மக்களின் பயணங்கள் தாமதமாக வாய்ப்புள்ளது. இதனால், கல்வி நிருவனங்களும், வணிக நிறுவனங்களும் தகுந்த முன்னேற்பாடுகளை செய்யுமாறு, சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் பிரிவு கேட்டுக்கொள்கிறது.
இந்த சாலைகளில் கனரக வாகனகள், சரக்கு வாகனங்கள், இலகுரக சக வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் இந்த இரண்டு நாட்களிலும் காலை 6 மணி முதல் 11 மணி வரை செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/092838_11-2-272x300.jpg)
மேலும், சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் செய்துள்ள சில முக்கிய மாற்றங்களை கீழே காணலாம்.
அக்டோபர் 11, 12.30 முதல் 14.00 மணி வரை:
பெருங்களத்தூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜி.எஸ்.டி சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் "O" பாயின்ட் சந்திப்பில் இருந்து மதுரவாயல் புறவழிச் சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/090145_12-300x238.jpg)
அக்டோபர் 12 ம் தேதி 07:30 மணி முதல் 14:00 மணி வரை ஓஎம்ஆர் நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.
தேசிய விருந்தினராக சென்னைக்கு வருகை புரியும் மிக முக்கிய பிரமுகரின் இந்தியப் பயணம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் அமைந்திட போதயு மக்களின் ஆதரவைக் கோரியுள்ளது சென்னை போக்குவரத்துக் காவல் ஆணையம்.