டிசம்பர் 18ஆம் தேதி சென்னை அடையாறு மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
மினி மாரத்தான் போட்டி நடக்கவிருப்பதை முன்னிட்டு நாளை (டிசம்பர் 18ஆம் தேதி) காலை 4 மணி முதல் 8 மணி வரை அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

திரு.வி.க பாலத்தில் இருந்து 3வது அவென்யூ மற்றும் 2வது அவென்யூ நோக்கி வரும் அனைத்து உள்வரும் வாகனங்களும் எம்எல் பார்க் – இடதுபுறம் திரும்பி - எல்பி சாலை - சாஸ்திரி நகர் 1 வது அவென்யூவில் திருப்பி விடப்படும் என்று கூறுகின்றனர்.
திரு.வி.க பாலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், எம்எல் பூங்காவில் திருப்பி விடப்படும் - இடது- எல்பி சாலை- சாஸ்திரி நகர் 1வது அவென்யூ-சாஸ்திரி பேருந்து நிலையம்- 2வது அவென்யூ- 7வது அவென்யூ சந்திப்பு -வலது- எம்ஜி சாலை – எல்பி சாலை வழியாக செல்லலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
லைட் ஹவுஸில் இருந்து சாந்தோம் ஹை ரோடு மற்றும் மந்தவெளி சந்திப்பில் இருந்து தெற்கு கால்வாய் கரை சாலை, அடையாறு நோக்கி வரும் வாகனங்கள் தெற்கு கெனால் பேங்க் ரோடு சந்திப்பில் இருந்து டி.வி.கே பாலத்திற்கு அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக மந்தவெளி சந்திப்பு ஆர்.ஏ மன்றம் இரண்டாவது பிரதான சாலை வழியே செல்லலாம்.
ஆர்.கே மட் சாலை மற்றும் பிராடி கேஸ்டல் சாலை வழியாக அடையார் செல்லும் வாகனங்கள், இசைக் கல்லூரி சந்திப்பிலிருந்து, டிஜிஎஸ் தினகரன் சாலை வழியாக திருப்பி விடப்படும், போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப தடுப்புகள் மற்றும் கூம்புகள் போடப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil