மார்ச் 13ஆம் தேதி முதல், சென்னை நங்கநல்லூர் அருகே போக்குவரத்து மாற்றங்கள் ஒரு வருடத்திற்கு நடைமுறை படுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைத் துறை மற்றும் CMRL (சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்) சுரங்கப்பாதை அமைப்பதற்கு வசதியாக, மேடவாக்கம் மெயின் ரோடு - எம்ஆர்டிஎஸ் ஆதம்பாக்கம் சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
கடந்த மாதம், இந்த போக்குவரத்து மாற்றத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, எந்தவித இடையூறும் இன்றி வாகனங்கள் இயக்கப்பட்டதைக் கண்டு, MTC அதிகாரிகளும் தங்கள் பேருந்துகளை மாற்றுப் பாதையில் இயக்க ஒப்புக்கொண்டனர்.
புதிய போக்குவரத்து மாற்றங்களின்படி, வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் சாலையில் இருந்து மேடவாக்கம் பிரதான சாலையில் இடதுபுறம் திரும்பும் வகையில் வரும் வாகனங்கள், சிதம்பரனார் தெருவில் இடதுபுறம் திரும்பி புதிய தெற்கு தெருவில் இருந்து மேடவாக்கம் சாலையில் இடதுபுறம் திரும்பி பயணிக்கலாம்.
மேடவாக்கம் மெயின் ரோடு வழியாக நங்கநல்லூருக்கு செல்ல விரும்பும் எம்டிசி பேருந்துகள் மற்றும் அனைத்து வணிக வாகனங்களும் நேராக தில்லைகங்காநகர் நோக்கி திருப்பி விடப்படும்.
கீழ்கட்டளையில் இருந்து ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ்., சாலை சந்திப்பை நோக்கி வரும் எம்.டி.சி., பேருந்துகள் உட்பட அனைத்து உள்வரும் வாகனங்களும். பெருமாள் நகர் 2வது பிரதான சாலையில் திருப்பி விடப்படுகின்றன.
எம்ஆர்டிஎஸ்-100 அடி சாலையில் இருந்து தில்லை கங்கா நகர் 23வது தெருவிற்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேல் குறிப்பிட்டுள்ள போக்குவரத்து மாற்றங்களை காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil