ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தூர், உடனடியாக அபராதம் வசூலிக்கும் இ- செல்லான் முறையை நேற்று அறிமுகப்படுத்தினார்.
இந்த இ-செல்லான் முறை என்.ஐ.சி-யால், டெல்லியில் உருவாக்கப்பட்டது. இணைய சேவை மூலமாக சென்னையிலிருந்து அதை பயன்படுத்த முடியும். ஓட்டுநர்கள் கொடுக்கும் தகவலின் உண்மைத் தன்மையை ’வாகன்’ இணையதளத்தின் மூலம் சரி பார்க்கும். வாகன் இணையதளம் மூலம் சமந்தப்பட்ட இடங்களில் உள்ள வாகன பதிவு தொடர்பான தரவுகளை எடுக்க முடியும்.
இந்த சாப்ட்வேர் மூலம், அடுத்த மாநில வாகனம் மற்றும் அதற்கான ஓட்டுநர் உரிமம் தொடர்பான வழக்குகளை பதிவு செய்ய முடியும்.
இது தொடர்பாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தூர் கூறுகையில் “ இந்த சாப்ட்வேர் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதற்கான அபராதம் செலுத்தப்படவில்லை என்றால், வகனம் தொடர்பான எந்த விஷயத்தையும் நாம் எங்கும் மேற்கொள்ள முடியாது. வாகனத்தின் உரிமையாளர் பெயரை மாற்றுவது. வாகனம் தொடர்பான தகுதிச் சான்றிதழ் பெருவது போன்ற எந்த செயல்களையும் நாம் மேற்கொள்ள முடியாது” என்று அவர் கூறினார். பொதுமக்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி, அபராதம் செலுத்தமுடியும். 100 இ-செல்லான் மற்றும் 100 க்யூ ஆர் கோட் கருவிகள் போக்குவரத்து காவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.