சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என வள்ளியூரில் 3 அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் காவல்துறையினர் தலா ரூ.500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தில் நோ பார்க்கிங்கில் நின்ற அரசு பேருந்துக்கு டிராஃபிக் போலீசார் ரூ. 1,000 அபராதம் விதித்தனர். அதே போல, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தனியார் வாகனங்கள், தனியார் வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல், போக்குவரத்து விதிகளை மீறும் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது மாநில அளவில் கவனம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, போக்குவரத்து காவல்துறை, நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவது, சிக்னல் ஜம்பிங், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வருவது என விதிமீறல்களுக்கு ஏற்ப அபராதம் விதிக்கும் பணியில் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், அரசுப் பேருந்து ஓட்டுநர் சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என 3 அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் காவல்துறையினர் தலா ரூ.500 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“