/indian-express-tamil/media/media_files/2025/03/19/gDiM2lQRhq0oGvDgiOiZ.jpeg)
கோடை வெயிலின் தாக்கல் கடுமையாக இருந்துவரும் நிலையில், கோவை மாநகர காவல்துறை தன்னார்வ அமைப்பினர் பங்களிப்போடு மாநகரில் பணியாற்றி வரும் 290 போக்குவரத்து காவலர்களுக்கு சோலர் தொப்பிகள், கருப்பு கண் கண்ணாடிகள், மோர் ஆகியை வழங்கப்பட்டன.
கோவை அவினாசி சாலை, அண்ணா சிலை முன்பு முதல்கட்டமாக 20 போக்குவரத்து பெண் காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் சோலார் தொப்பிகளை வழங்கினார். தொடர்ந்து மாநகரில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பிகள் வழங்கப்பட உள்ளது. வெயில் வெப்பத்தின் தாக்கம் ஏற்பாடதாக வகையில் இந்த சோலார் தொப்பிகள், எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறியதாவது:
கோடை காலத்தில் போக்குவரத்து போலீசருக்கு தொப்பி, மோர், ஜூஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று 20 போலீசாருக்கு வழங்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள 235 போக்குவரத்து போலீசாருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் போதைப்பொருள், கஞ்சா விற்பனை செய்பவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மாநகரில் போதை பொருட்கள் புழக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரடிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகரில் தொடங்கப்பட்டுள்ள பீட் போலீஸ் திட்டத்தால் கடந்த ஆண்டு 178-ஆக இருந்த குற்ற சம்பவங்கள் தற்போது 128 ஆக குறைந்துள்ளது என்றார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.