கொரோனா பாதித்த பகுதியை தவிர மற்ற பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற கோரிய மனுவுக்கு மே 14-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில், கொரோனா பாதித்த வீடுகளை அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் காவல்துறை தடுப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், தேவையில்லாத பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றக் கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பல பகுதிகளில் தெருக்களிலிருந்து வெளியே செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
ஒரு சில பகுதிகளில் கொரோனா தொடர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் பகுதிகளிலும் தடுப்புகளை அகற்றாமல் காவல்துறை தொடர்ந்து வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அந்த பகுதி மக்கள் முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தேவையில்லாத சட்டவிரோதமான தடுப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி , நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு முன்பு வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் , கொரோனா பாதித்த பகுதிகளுக்கு மட்டுமே தடுப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி அதற்கான பட்டியலையும் தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த ஒரு தடையும் இருக்கக்கூடாது என்றும் அதே வேளையில் சட்டவிரோதமாக வெளியே சுற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பின்னர், இந்த மனுவுக்கு மே 14-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Traffic ramaswamy plea to remove barricade from non coronavirus affected area chennai high court order to tamil nadu government to answer
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!