ஃபீஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் முண்டியம்பாக்கம் அருகே ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுகிறது.
இதனால் பாதுகாப்பு கருதி அவ்வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று காலை புறப்பட வேண்டிய ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன.
அதேபோல, தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல இடங்களில் இருந்து சென்னை வரும் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. அதேபோல நெல்லை, கொல்லம், நாகர்கோவில் விரைவு ரயில்கள் விழுப்புரத்திலேயே நிறுத்தப்பட்டன.
இதனால் நீண்ட நேரம் விழுப்புரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் ரயில்வே சந்திப்பு, திருக்கோவிலூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் - சென்னை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக 4 இடங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“