விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களில் இரட்டை ரயில் பாதையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த ரயில் நிலையங்களுக்கு, அருகில் உள்ள சிவகாசி, சேரன்மகாதேவி, செய்திங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் விருதுநகர், திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இணையான போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரத்து செய்யப்படும் ரயில்களின் விரங்கள்: அக்டோபர் 3 மற்றும் 4 அன்று பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் ( 16731) மற்றும் திருச்செந்தூர் – பாலக்காடு ரயில் ( 16732) ஆகியவை கோவில்பட்டி- திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் அக்டோபர் 3 மற்றும் 4 அன்று செங்கோட்டை – திருநெல்வேலி சிறப்பு ரயில் ( 06684) மற்றும் திருநெல்வேலி- செங்கோட்டை சிறப்பு ரயில் ( 06687) ஆகியவை சேரன்மகாதேவி- திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந்நிலையில் பின்வரும் ரயில்கள் தாமதமாக புறப்படுகிறது. திருவனந்தபுரம் – திருச்சி இண்டர்சிட்டி ரயில் (22628) அக்டோபர் 3 மற்றும் 4 அன்று திருவனந்தபுரத்திலிருந்து 40 நிமிடங்கள் கால தாமதமாக மதியம் 12.15 மணிக்கு புறப்படும். செங்கோட்டை – மதுரை சிறப்பு ரயில் ( 06664) செங்கோட்டையிலிருந்து 40 நிமிடங்கள் கால தாமதமாக மதியம் 1.50 மணிக்கு புறப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“