train coach should change only isolation ward, covid-19 symptoms patients, isolation ward, ரயில் பெட்டிகள், தனிமைப்படுத்தும் வார்டு, கொரோனா வைரஸ், தெற்கு ரயில்வே, சென்னை உயர் நீதிமன்றம், quarantined ward, train coach, southern railway, chennai high court, coronavirus, corona news, tamil nadu corona virus news
கொரோனா தொற்று ஆரம்ப கட்ட அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தபட உள்ளதாகவும் ரயில் பெட்டிகளை மருத்துவமனைகளாக மாற்றவில்லை என்று தெற்கு ரயில்வே சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது .
Advertisment
கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக 5 ஆயிரம் ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்ற உள்ளதாக ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. போதிய சுகாதாரமில்லாத ரயில் பெட்டிகளை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீஇதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது ரயில் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்படவில்லை என்றும், தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisment
Advertisements
மருத்துவமனை இல்லாத கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டால், அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு இந்த பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு முதற்கட்ட அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்றும், அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால், அருகில் உள்ள மருத்துவனைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”